ஹரிக்கு 'நோ' சொன்ன சூர்யா, 'எஸ்' சொன்ன சிம்பு! | simbu accepted work with director hari

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:05 (15/05/2019)

ஹரிக்கு 'நோ' சொன்ன சூர்யா, 'எஸ்' சொன்ன சிம்பு!

ஹரி-சூர்யா

ஏற்கெனவே, 'சிங்கம்' படத்தின் ஏகப்பட்ட பாகங்களை இயக்கி, சூர்யாவை கமர்ஷியல் கதாநாயகனாக ஜொலிக்கவைத்தவர், டைரக்டர் ஹரி. 'சாமி-2' இயக்கிக்கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக சூர்யாவின் படத்தை இயக்கப்போவதால், வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்துவந்தார், ஹரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி வைத்திருந்த சன் பிக்சர்ஸ், ஹரி, சூர்யா காம்பினேஷனில்  புதுப்படத்தை உருவாக்கும் திட்டத்தில் இருந்தது. திடீரென, ஹரி இயக்கத்தில் நடிப்பதற்கு சூர்யா மறுத்துவிட்டாராம்.

'சிங்கம்' படத்தின்  பின்னணி இசையைக் கேட்கும்போது காதுகளின் ஜவ்வு கிழிகிற அளவுக்கு கடுமையான உக்ரம் இருக்கும். அதுபோல சூர்யா 'நோ' சொன்னது கேட்டு ஹரியின் கண்கள் ஜிவ்வென்று சிவந்துவிட்டதாம்.  'நான் என் கதையை நம்பித்தான் படம் எடுக்கிறேன். கதாநாயகர்களை நம்பி இல்லை' என்று அடுத்தகட்ட வேலையில் பரபரப்பாக இறங்கிவிட்டார். 

சிம்பு

இதனிடையே, வெளிநாடு சென்று உடல் எடையைக் குறைத்து வந்த சிம்புவும் ஹரியும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். 'கோவில்' படத்துக்குப் பிறகு, ஹரி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே கமல் நடித்த 'இந்தியன்', விஜய் நடித்த 'குஷி', 'கில்லி' படங்களை எடுத்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஹரி-சிம்பு  காம்பினேஷனில் உருவாகும் படத்தைத் தயாரிக்கிறார்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க