ஆந்திர சினிமா உலகை அதிரவைத்த கலைப்புலி தாணு! | Kalaippuli S Thanu's Hippi Movie Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (14/05/2019)

கடைசி தொடர்பு:12:03 (15/05/2019)

ஆந்திர சினிமா உலகை அதிரவைத்த கலைப்புலி தாணு!

கடந்த வெள்ளிக்கிழமை, ஆந்திராவில் மகேஷ்பாபு நடித்து வெளியான ' மகரிஷி' திரைப்படம், வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. ஏற்கெனவே, 'பைரவி' படத்தில் ரஜினிக்கு அமானுஷ்ய அளவுக்கு கட் அவுட் வைத்து, 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தார். அடுத்து, 'கபாலி' பட ரஜினியை விமானத்தில்  வரைந்து, ஆகாயத்தில் பறக்கவிட்டார். தமிழ் சினிமாவின் விளம்பரப் புலியான 'கலைப்புலி' தாணு, ஆந்திராவில் தனது விளம்பர யுக்தியைக் காட்டியிருக்கிறார். முதன்முதலாக 'ஹிப்பி' என்கிற நேரடி தெலுங்குப் படத்தை தனது வி-கிரியேஷன்ஸ் சார்பாகத்  தயாரித்திருக்கிறார். நடிகர் கார்த்திகேயா கதாநாயனாக நடிக்கும் 'ஹிப்பி' படத்தை தமிழில் சூர்யா, ஜோதிகா நடித்த ' சில்லுன்னு ஒரு காதல் கதை' படத்தை இயக்கிய கிருஷ்ணா டைரக்‌ஷன் செய்திருக்கிறார்.  

தாணு

இந்தப் படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ஆந்திராவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே 900 தியேட்டர்களில் வெளியான 'மகரிஷி' படத்தோடு,  இரண்டு நிமிடம் பதினைந்து நொடிகள் ஓடக்கூடிய தனது  தயாரிப்பான 'ஹிப்பி' படத்தின் டீஸரை வெளியிட்டிருக்கிறார். புதுப்படங்கள் ரிலீஸின்போது, அந்தப் படத்துக்கான விளம்பரத்தைப் பிரசுரிப்பது ஆந்திராவில் வழக்கம். ஆங்கில  தினசரிப் பத்திரிகையில் மகேஷ்பாபுவின் 'மகரிஷி' திரைப்படம் கால்பக்கத்துக்கு விளம்பரம் தர, அதே பத்திரிகையில் 'ஹிப்பி' படத்தின் டீஸருக்கு முழுப்பக்கம் விளம்பரம் கொடுத்து ஆந்திர சினிமா உலகத்தையே அதிரவைத்துவிட்டாராம், தாணு.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க