'விஜய் 63' பட சேட்டிலைட் விலையைப் பார்த்து ஷாக்கான கோலிவுட்! | Sun TV bags satellite rights of Vijay 63

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (14/05/2019)

கடைசி தொடர்பு:16:13 (14/05/2019)

'விஜய் 63' பட சேட்டிலைட் விலையைப் பார்த்து ஷாக்கான கோலிவுட்!

விஜய்

அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துவருகிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஆல் இந்தியாவில் அசுரசாதனை புரிந்த 'பாகுபலி' ரெக்கார்டை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலைபார்த்து வருகிறார் அட்லி. 'ராஜா ராணி' படத்தை இயக்கிய காலத்தில் இருந்தே நயன்தாராவை  'அக்கா.. அக்கா...' என்றே அழைத்து தாராவின் அன்பைப் பெற்ற தம்பியாகிவிட்டார் அட்லி.

ஏற்கெனவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்துக்கு கொடுத்து இருந்த கால்ஷீட் தேதிகள் அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தனர். அப்போது அட்லி 'விஜய்-63' படத்துக்காக கால்ஷீட் கேட்க 'இந்தியன் 2' படத்துக்காகக் கொடுத்த தேதிகளை அப்படியே லம்பாக அள்ளி விஜய் படத்துக்கு கொடுத்துவிட்டார்.

நயன்தாரா

இப்போது ஒரு பக்கம் மும்பையில் சூப்பர் ஸ்டாருடனும் இன்னொரு பக்கம் தளபதி விஜய்யுடனும் படு பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. முன்பு விஜய்-அட்லி காம்பினேஷனில் உருவான 'மெர்சல்' படத்தை சேட்டிலைட் உரிமை ரூ.19 கோடியும் டிஜிட்டல் உரிமை ரூ.9 கோடியும் சேர்த்து மொத்தம் 28 கோடி ரூபாய்க்கு ஜீ தமிழ் சேனல் விலைக்கு வாங்கியது. அடுத்து வெளிவந்த 'சர்கார்' படத்தை சன் டிவியே தயாரித்தது. இப்போது ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் வெளிவரும் 'விஜய்-63' படத்தின் சேட்டிலைட் உரிமையை மட்டும் 28 கோடி ரூபாய் விலை கொடுத்து சன் டிவி வாங்கி இருக்கிறது. இன்னும் டிஜிட்டல் உரிமை விற்கப்பட வில்லை. விஜய்-63 படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. அதற்குள்ளாகவே ரூ.28 கோடி கொடுத்து சேட்டிலைட் உரிமை மட்டும் வாங்கியுள்ள சன் டிவியை
கோடம்பாக்கமே மிரட்சியோடு பார்க்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க