`இந்த இடத்தில் என் தங்கையை ரொம்பவே மிஸ் பண்றேன்!' - 'சூப்பர் சிஸ்டர்ஸ்' அண்ணியார் காயத்ரி | Rekha kumar shares her new project experience

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (14/05/2019)

கடைசி தொடர்பு:15:50 (14/05/2019)

`இந்த இடத்தில் என் தங்கையை ரொம்பவே மிஸ் பண்றேன்!' - 'சூப்பர் சிஸ்டர்ஸ்' அண்ணியார் காயத்ரி

ரேகா குமார்

''எங்க வீட்டில் மொத்தம் மூன்று பெண் குழந்தைகள். கடைசியா தம்பி. அவர் கடைக்குட்டி என்பதால செம்ம செல்லம். என் அக்கா மருத்துவர் ஆலோசகரா இருக்காங்க. என் தங்கை ஓமன்ல இருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு யாரை கூட்டிட்டு வரலாம்னு யோசிச்சப்போ என் அக்காதான் மாட்டினாங்க. ஒருவேளை என் தங்கை இருந்திருந்தா கண்டிப்பாக அழைச்சிருப்பேன். அவங்களை இந்த இடத்தில் ரொம்பவே மிஸ் பண்றேன்'' என சிரித்தபடியே ஆரம்பிக்கிறார் ரேகா குமார். 

சன் டிவி-யில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியலில் அண்ணியார் காயத்ரியாக வலம் வந்தவர் ரேகா குமார். அதன் பிறகு, 'நந்தினி' சீரியலில் நடித்தார். தற்போது, கடந்த சில வாரங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிஸ்டர்' நிகழ்ச்சியில் தன் சகோதரி ரூபாவுடன் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி குறித்து பேசியதுதான் மேலே இருப்பது. தொடர்ந்து பேசிய ரேகா குமார், 

ரேகா குமார்

``இது ஒரு ரியாலிட்டி ஷோ. சிபிளிங்ஸ்கூட (அண்ணன், தங்கை என உடன்பிறந்தவர்கள்) விளையாடுற கேம் இது. இதில் நிறைய கேம் இருக்கும். எலிமினேஷனும் உண்டு. கடைசியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கேம். பத்து ஜோடி(pair). இதில் ஐந்து பேர் சகோதரர்கள், ஐந்து பேர் சகோதரிகள். ஸ்வப்ணா, சங்கீதா, நிஹாரிகா, வனிதா, சிவரஞ்சனி, ஷாமிலி எனப் பல பேர் இருக்காங்க. முக்கியமாக சின்ன பசங்க எல்லாம் எங்ககிட்ட கேள்வி கேட்டது செம்ம ஜாலியா இருந்துச்சு. பல பேர் பதில் தெரியாம விழித்ததெல்லாம் காமெடியின் உச்சம்'' எனச் சிரிப்பவர்,

ரேகா குமார்

``என் அக்கா ரூபாவுக்கு ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. இது செம்ம ஜாலியான நிகழ்ச்சி என்பதால் ஒப்புக்கொண்டார். ரூபா, சைக்காலஜி கவுன்சலிங்காக இருக்காங்க. என் அக்கா, என் அப்பா மாதிரி, நான் என் அம்மா மாதிரி, என் தங்கை என்னை மாதிரியே இருப்பாங்க. இதுவரை நான்கு எபிசோட் டெலிகாஸ்ட் ஆகியிருக்கு. ஒவ்வொரு எபிசோடும் கான்சப்ட்ல இருக்கும். சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கேன். இப்போதுவரை அதற்கான புரொமோ வராம இருக்கிறதால் சீரியல் பற்றி பேச வேண்டாமென்று சொல்லியிருக்காங்க.

'கன்னடத்தில் ஒரு படம் பண்ணிட்டு இருக்கிறேன். சூப்பர் சிஸ்டர் ஷோவிலும் என்னை காயத்ரினுதான் கூப்பிடுறாங்க. என் அக்கா பெயர் ரூபா, என் பெயர் ரேகா. ஆனா, காயத்ரி, ரூபானுதான் சில நேரம் கூப்பிடுறாங்க. இன்னும் எத்தனை வருஷம் போனாலும் அண்ணியார் பெயர் மாறவே மாறாது போல. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என்னை நேரில் பார்க்கிறவங்க, 'உங்கள் நிஜப் பெயர் ரேகா'வானு ஆச்சர்யமா கேட்கிறாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்தது ரொம்ப சந்தோஷம்'' என்கிறார் ரேகா குமார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க