விஜய்யை இயக்கும் 'கனா' இயக்குநர்! #Vijay65 | Vijay's next movie update

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/05/2019)

கடைசி தொடர்பு:18:10 (14/05/2019)

விஜய்யை இயக்கும் 'கனா' இயக்குநர்! #Vijay65

விஜய் - அட்லி காம்போவில் கால்பந்தை மையமாக வைத்து தயாராகி வரும் பட ஷூட்டிங் சென்னை இ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. விஜய்க்கு இது 63-வது படமும்கூட. தன்னுடைய 64-வது படத்துக்கு பல இயக்குநர்களிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம் விஜய். 'மாநகரம்' லோகேஷ் கனகராஜைத் தொடர்ந்து 'கனா' அருண்ராஜாவிடமும் கதை கேட்டுள்ளார். 

அருண்ராஜா காமராஜா

ஷங்கர், மோகன் ராஜா, வெற்றிமாறன் எனப் பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் விஜய்க்கு கதை வைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தனர். இப்படிப் பல பெரிய இயக்குநர்கள் கதை சொல்லி வந்த நிலையில், சில புது இயக்குநர்களும் விஜய்யை அணுகி கதை சொல்லி வருகின்றனர். அதில் 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ஓகே சொல்லியுள்ளாராம் விஜய். அதுவும் தன்னுடைய நெருங்கிய நண்பரின் பேனரில். 

தற்போது மிகுந்த பரபரப்புடன் விஜய்யின் 63-வது படம் தயாராகி வருகிறது. படத்தைத் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். மறுபக்கம், லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இதை முடித்துவிட்டு இருவரும் கூட்டணி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'கனா' படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜாவும் விஜய்யிடம் 'மீனவர்' தொடர்பான கதை ஒன்றைச் சொல்லியிருக்கிறார். அதுவும் விஜய்க்குப் பிடித்துப் போக, தன்னுடைய பக்கெட் லிஸ்ட்டில் ஏற்றியிருக்கிறார். இந்த இரண்டு படங்களில் எந்த இயக்குநரைத் தேர்ந்தெடுப்பார் அல்லது அடுத்தடுத்து இந்த இருவரின் இயக்கத்திலும் நடிப்பாரா... என அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இவர்களைத் தவிர புதுமுக இயக்குநர் ஒருவரிடமும் கதை கேட்டுள்ளாராம் விஜய்.