`பேய் அது, இதுனு சொன்னா நான் நம்ப மாட்டேன்!' - அஞ்சலி 3டியில் மிரட்டும் `லிசா' படத்தின் டிரெய்லர் | Anjali's lisa movie trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:19:30 (14/05/2019)

`பேய் அது, இதுனு சொன்னா நான் நம்ப மாட்டேன்!' - அஞ்சலி 3டியில் மிரட்டும் `லிசா' படத்தின் டிரெய்லர்

 

அஞ்சலி

நாயகியாக அஞ்சலி நடித்திருக்கும் திரைப்படம் 'லிசா'. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் திகில் படமாகும். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் எடுத்திருக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்து ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சாம் ஜோஸ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மைம் கோபி, யோகி பாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக இந்தப் படத்தை 3டி கேமராவில் ஷூட் பண்ணியிருக்கிறார்கள். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க