Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:

•  அனல் பறக்கும் அரசியல் காட்சிகளுக்கு இடையே 'என் மறக்க முடியாத நினைவுகள்’ என்ற தன் சுயசரிதையை வெளியிட்டு இருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பால்யம் முதல் பாலிடிக்ஸ் வரை தன் வாழ்வின் அத்தனை  சம்பவங்களையும் இதில் தொகுத்திருக்கிறாராம். 'பள்ளியில் படிக்கும்போதெல்லாம் எனக்கு பாய் ஃப்ரெண்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது!’ என்று அதில் மம்தா சொல்லியிருப்பதற்கு, 'ஓ... அவரு அப்பவே 'அரசியல்’னு முடிவு பண்ணிட் டாரோ!’ என்று கமென்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் தோழர்கள். நிஜமாத்தான் சொல்றீங்களா மம்தா?

இன்பாக்ஸ்

•  'சுட்டிக் குழந்தை’யில் நடித்த நாகார்ஜுனா- அமலாவின் ஒரே மகன் அகில் இப்போது நெடுநெடுவாழியாக வளர்ந்து இருக்கிறார். பெண்கள் ஏரியாவில் அகிலுக்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இருந்தாலும் சாரின் சாய்ஸ் 'நோ சினிமா... ஒன்லி கிரிக்கெட்!’தானாம். ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்த பின்னாடியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

•  கரீனா கபூருக்கு ஆக்ஷன் படங்களில் அதகளம் பண்ண வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. காதலர் சைஃப் அலிகான் தயாரித்து நடிக்கும் 'ஏஜென்ட் வினோத்’ படத்தில் அம்மணி பறந்து பறந்து சண்டை போட்டிருக்கிறார். 'படம் வெளியானதும் என்னை எல்லோரும் 'இந்தியாவின் ஏஞ்சலினா ஜோலி’னு கூப்பிடுவாங்க!’ என்று பூரிப்பில் திளைக்குது பொண்ணு. கரீனா சொன்னா சரிங்ணா!

இன்பாக்ஸ்

•  லண்டன் ஒலிம்பிக் மாரத்தான் போட்டிக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்றிருக்கிறார் ராம்சிங் யாதவ். மும்பை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 16 நிமிடங்களில் கடந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் ராம்சிங். ''எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, தான் சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாட்டு வீரர்களுடன் ஓடுவது மிகவும் சவாலானது!'' என்று சொல்லும் ராம்சிங், தமிழகத்தின் குன்னூர் பகுதியில்தான் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். கால்ல சக்கரத்தைக் கட்டிக்க தலைவா!

•  100-வது சதத்துக்குத் திணறும் சச்சின் டெண்டுல்கரின் பெயரை 'பாரத் ரத்னா’ விருதுக்குப் பரிந்துரைப்பதைத் தட்டிக் கழித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ''பாரத் ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற விருதுகளுக்கு வீரர்களேதான் தங்களது சாதனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அர்ஜுனா விருதுக்குத்தான் பரிந்துரை செய்யும்!'' என்று நழுவிக்கொண்டு இருக்கிறது வாரியம். அப்போ 'பாரத ரத்னா’வும் இனி சச்சின் கையில் தான்!

இன்பாக்ஸ்

•  1990-ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் யாஷ் ஜோஹரின் தயாரிப்பில் வெளிவந்த படம் 'அக்னிபாத்’. படத்துக்காக அமிதாப்புக்குத் தேசிய விருது கிடைத்தது என்றாலும், படம் ஃப்ளாப். ''நான் படத்தை மீண்டும் ரீ-மேக் செய்து ஹிட் ஆக்குவேன். அந்த வெற்றியை என் தந்தைக்குக் காணிக்கை ஆக்குவேன்!'' என்று சொன்னபடியே இப்போது படத்தை ஹிட் ஆக்கிவிட்டார் யாஷ் ஜோஹரின் மகன் கரண் ஜோஹர். அமிதாப் வேடத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான 'அக்னிபாத்’ ரீ-மேக் இப்போது இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட். எங்கெங்கு காணினும் ரீ-மேக்கே!

•  'கொல வெறிடி’ ஹிட் பாணியில் ஆல்பம் தயாரித்து, அதை யூ-டியூப்பில் ஏற்றி வைரஸ் பரப்பல் காய்ச்சலில் தீவிரமாகிவிட்டது கோலிவுட். சிம்புவின் 'லவ் ஆன்தம்’மைத் தொடர்ந்து, பிரபுதேவாவின் காதல் ஆல்பம் ரெடி. ஆல்பத்தின் ஐந்து பாடல்களுக்கும் தானே இசையமைத்துப் பாடி, ஆடி இருக்கிறாராம் பிரபு. ஹீரோயின் யாரு பிரபு?

இன்பாக்ஸ்

•  இந்த வருட இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தாய்லாந்து பிரதமர் யங்லக் ஷினவத்ரா, இந்தியாவில் இலவச உதவிகள் வழங்கப்படும் முறைபற்றி தகவல்களைத் திரட்டிக்கொண்டு போயிருக்கிறார். தாய்லாந் தில் பள்ளிக் குழந்தைகள் ஒவ்வொருவருக் கும் ஒரு 'லேப்டாப்’ இலவசம் எனக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுவதுதான் இந்தத் தகவல் திரட்டலுக்குக் காரணம். தமிழ் நாட்டுக்கு வாங்க மேடம்!

இன்பாக்ஸ்

•  பாலியல் வழக்கு விவகாரத்தில் அலைக்கழிக்கப்பட்ட விக்கிலீக்ஸ் அசாஞ்சே அடுத்த அதிரடிக்கு ரெடி! இம்முறை இணையம் மட்டுமல்லாது... தொலைக்காட்சித் தொடர் வாயிலாகவும் பாய்ச்சல் காட்ட இருக் கிறார் அசாஞ்சே. 'தி வேர்ல்டு டுமாரோ’ என்ற தலைப்பில் உலக நிழல் தலைவர்கள் பலரையும் பேட்டி எடுத்து வெளியிடும் நிகழ்ச்சியை மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவிருக்கிறார். பவர் ஸ்டாரைப் பேட்டி தட்டுங்க அசா!

•  தமிழ் சினிமாவில் முதன்முறையாக எம்.பி.ஏ. மாணவர்களை வைத்து மார்க்கெட்டிங் பண்ணிக்கொண்டு இருக்கிறது 'கிருஷ்ணவேணி பஞ்சாலை’ டீம். தமிழகம் முழுக்க 40 எம்.பி.ஏ. மாணவர்கள் மாவட்ட வாரியாக 50 ஆயிரம் பேரைச் சந்தித்து படம் பற்றி சர்வே எடுத்திருக்கிறார்கள். 80-களில் வாழ்ந்த மில் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் படம் என்ப தால், அந்த நாள் முகச்சாயல்கொண்ட ஹேமச்சந்திரனைத் தேடிப்பிடித்து ஹீரோ ஆக்கியிருக்கிறார்கள். தனபால் பத்மநாபன் டைரக்ஷன் செய்திருக்கும் படத்தின் எடிட்டிங் வெர்ஷன் பார்த்த டைரக்டர் மகேந்திரன், 'சினிமாவின் அனைத்து அழகியலோடும் எடுக்கப்பட்ட சினிமா இது!’ என்று பாராட்டி இருக்கிறார். இது புதுசா இருக்கே!

இன்பாக்ஸ்

• கடந்த ஆண்டு கூகுள் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட பெண் ரெபேக்கா பிளாக். 14 வயதான ரெபேக்கா பிளாக் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி. இவரது 'ஃபிரை டே’ ஆல்பம் கிழியல் ஹிட்டடிக்க, இவரை ஹீரோயின் ஆக்க மொய்க்கிறது ஹாலிவுட்! சாட்டர் டே மீட் பண்ணலாமா?

இன்பாக்ஸ்

•  கேட் வின்ஸ்லெட் முதல் சமீபத்திய ஹீரோயின் பிளாக் லைவ்லி வரை பலருடன் கிசுகிசுக்கப்பட்ட 'டைட்டானிக் நாயகன்’ லியானார்டோ டி கேப்ரியோ இன்னமும் திருமணம் குறித்து உறுதியான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். ''என் அம்மாவைப் போல மன உறுதி வாய்ந்த பெண்ணைத் தேடிக்கொண்டு இருக்கிறேன்! அதனால்தான் இந்தத் தடுமாற்றம்!'' என்று புலம்புகிறார் லியோ. நீங்க ப்ளே பாயா... அம்மா புள்ளையா?

•  1956-ல் ஹாலிவுட்டில் ஹிட் அடித்த 'தி டென் கமாண்ட்மென்ட்ஸ்’ படத்தை ரீ- மேக்குகிறார் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க். 'காட்ஸ் அண்ட் கிங்ஸ்’ என்பது இந்த ரீ-மேக்கின் இப்போதைய தலைப்பு. ஷூட்டிங் உறுதியாவதற்கு முன்னரே 'படத்தில் கிறிஸ்துவ மதத்தை விமர்சிக்கும் காட்சிகள் இருக்கின்ற னவாம்!’ என்று பரபரப்புக் கிளம்ப, எதிர்ப்புக் குரல் வெடித்திருக்கிறது. ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடிதானே முடிக்க முடியும்?