`அமிதாப்புக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை இருப்பது உண்மைதான்!' - எஸ்.ஜே.சூர்யா  | problem between amitabh and produuction confirms sj suryah

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (15/05/2019)

கடைசி தொடர்பு:18:10 (15/05/2019)

`அமிதாப்புக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை இருப்பது உண்மைதான்!' - எஸ்.ஜே.சூர்யா 

அமிதாப் பச்சன்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தமிழ்வாணன் இயக்கும் 'உயர்ந்த மனிதன்' படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார் அமிதாப் பச்சன். தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் தயாராகவுள்ள `உயர்ந்த மனிதன்’ படத்தைத் திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து வந்தது.

எஸ்.ஜே. சூர்யா

இந்தப் படம் மூலம் இந்தியில் முதன்முறையாக நாயகனாக அறிமுகமாகிறார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். கடைசியாக இந்தியில் அவர் நடித்த `பத்லா' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், `உயர்ந்த மனிதன்' படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் இந்தப் படப்பிடிப்பு நடந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யாவும் அமிதாப்பும் இணைந்திருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

உயர்ந்த மனிதன்3

மான்ஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யா சென்னை வந்துள்ள நிலையில், அமிதாப்புக்கும் இயக்குநருக்கும் பிரச்னை என்று செய்தி பரவியது. இந்த விவகாரத்தில் தெளிவு கூறும் விதத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "அமிதாப் சாருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சின்ன மனஸ்தாபம் உள்ளது உண்மைதான். நான் 'மான்ஸ்டர்' வெளியீட்டுக்குப் பிறகு, மும்பை சென்று இந்த விஷயத்தைப் பேசி தீர்க்கப்படவுள்ளது. இப்படத்தை இந்நிலைக்குக் கொண்டு வர நானும் என் இயக்குநரும் பெரிதும் பாடுபட்டுள்ளோம். படத்தில் நாங்கள் வேலை செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும்" எனக் கூறியுள்ளார்.