புயல் வேகத்தில் முடிந்த `ஆதித்யா வர்மா' ஷூட்டிங்! | adithya varma shoot wrapped

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/05/2019)

கடைசி தொடர்பு:20:20 (15/05/2019)

புயல் வேகத்தில் முடிந்த `ஆதித்யா வர்மா' ஷூட்டிங்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய ஆர்ஜுன் ரெட்டி படம் தமிழில் பாலா இயக்கத்தில் `வர்மா' என எடுக்கப்பட்டு பின்னர் டிராப் செய்யப்பட்டது. அதனையடுத்து, `அர்ஜுன் ரெட்டி' படத்தின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்க `ஆதித்யா வர்மா' டைடிலுடன் படப்பிடிப்பு  மீண்டும் தொடங்கியது. இதில் துருவ் விக்ரமுடன் பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து நடித்துள்ளனர். தவிர, படம் இரண்டாம் முறை தயாராவதால் குறைந்த நாள்களிலேயே முடிக்க வேண்டியிருந்தது.

துருவ் - ஆதித்யா வர்மா 

இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய முந்தைய வெர்ஷனுக்கு இசையமைத்த ரதனே இசையமைத்திருக்கிறார். கடந்த  மார்ச் 10ம் தேதி தொடங்கிய படத்தின் படப்பதிவு வேக வேகமாக சென்னை மற்றும் போர்ச்சுகலில் நடைபெற்றது. படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இந்நிலையில் நேற்று படத்தின் ஷூட்டிங் சென்னையில் முடிந்தது. இறுதி நாள் படப்பிடிப்பு காட்சி ஒன்றைப் பதிவிட்டு `ஆதித்யா வர்மா' படப்பிடிப்பு நிறைவடைந்தது எனத் தயாரிப்பாளர் ட்வீட் இட்டிருந்தார். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருவதால் படம் ஜூன் மாதம் வெளியாவது உறுதி. 

விகரம்

இந்தியிலும் ரீமேக்காகியிருக்கும் 'அர்ஜுன் ரெட்டி' படத்துக்கு 'கபீர் சிங்' எனப் பெயர் வைக்கப்பட்டது. ஹாஹித் கபூர் நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியது.