`இதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதும்மா!' - பிரபுதேவாவின் `தேவி 2' டிரெய்லர்! | Prabhu Deva's Devi 2 Trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (16/05/2019)

கடைசி தொடர்பு:18:01 (16/05/2019)

`இதுக்கெல்லாம் கேஸ் போட முடியாதும்மா!' - பிரபுதேவாவின் `தேவி 2' டிரெய்லர்!

இயக்குநர் விஜய் - பிரபுதேவா காம்போவில் உருவாகியுள்ள `தேவி 2' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தேவி 2 - பிரபுதேவா

இயக்குநர் விஜய் - பிரபுதேவா காம்போவில் 2016-ம் ஆண்டு வெளியான `தேவி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இதே கூட்டணியில் `லக்‌ஷ்மி' எனும் படம் வெளியானது. இந்நிலையில், `தேவி' படத்தின் அடுத்த பாகமான `தேவி 2' படத்தை இயக்கி வருகிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றது. பின்னர் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. `தேவி' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால், `தேவி 2' படத்தில் தமன்னாவோடு சேர்ந்து நந்திதா ஆகியோர் நடித்துள்ளனர். 

பிரபுதேவா

மேலும், கோவை சரளா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. சாம் சி எஸ் இசையமைத்துள்ள படத்தின் சில பாடல்கள் ஏற்கெனவே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது. காமெடி அதகளம், திகில் காட்சிகள் அடங்க டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படம் தவிர, `பொன் மாணிக்கவேல்', `தேள்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் பிரபுதேவா.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க