``சிந்திக்கத் தெரிஞ்ச மிருகங்களுக்கு மனுஷங்கனு பேரு!” - ஆர்யாவின் `மகாமுனி' டீசர் | arya's magamuni teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (17/05/2019)

கடைசி தொடர்பு:11:29 (17/05/2019)

``சிந்திக்கத் தெரிஞ்ச மிருகங்களுக்கு மனுஷங்கனு பேரு!” - ஆர்யாவின் `மகாமுனி' டீசர்

ஆர்யா நடிப்பில் சாந்தகுமார் இயக்கியிருக்கும் `மகாமுனி' படத்தின் டீசர் ரிலீசானது

ஆர்யா

`மௌனகுரு' படத்தின்மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் சாந்தகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார்.

மகாமுனி

ஆர்யா, இந்துஜா, மாஸ்டர் ஜாசிக், மஹிமா நம்பியார், ஜெயப்பிரகாஷ், இளவரசு, ரோகிணி, பாலாசிங், அருள்தாஸ், காளி வெங்கட், தீபா, `கலக்கப்போவது யாரு’ யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யா மூன்று வித்தியாசமான கெட்-அப்புகளில் வருகிறார். இந்துஜா அவரின் மனைவியாகவும் நடித்துள்ளார். மஹிமா ஜர்னலிசம் பயிலும் மாணவியாக நடித்துள்ளார்.

மஹிமா நம்பியார்

 

படத்துக்குப் புதுமுகம் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். ரெம்போன் ராஜ் கலையமைப்பில் எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில் படத்தைத் தயாரிக்கிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். அண்மையில், இயக்குநர் சாந்தகுமார் பேசுகையில் `` `மெளன குரு’ கொடுத்த அதே எக்ஸ்பீரியன்ஸ ‘மகாமுனி’யும் தரும்" என்றார்.