" சம்மரை கொண்டாட பாலிக்கு வந்திருக்கேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி | serial actress aswini talks about her summer vaccation experience

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (17/05/2019)

கடைசி தொடர்பு:17:45 (17/05/2019)

" சம்மரை கொண்டாட பாலிக்கு வந்திருக்கேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' அஷ்வினி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி'. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் அஷ்வினி. சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு பிரேக் கிடைக்கவும் ஃபேமிலியுடன் ஜாலி ட்ரிப்பிற்கு கிளம்பியிருக்கிறார். ட்ரிப்பில் இருந்தவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

அஷ்வினி

''நான் என் ஃபேமிலியோட இந்தோனிஷியாவிலுள்ள பாலிக்கு ட்ரிப்பிற்காக வந்திருக்கேன். ஐந்து நாட்கள் இங்கே இருக்கிற மாதிரி பிளான் பண்ணியிருக்கோம். ஒவ்வொரு நாளும் புது, புது அனுபவங்கள் கிடைச்சிட்டு இருக்கு. பாலியைச் சுற்றி நிறையக் குட்டி, குட்டி ஐஸ்லேண்ட்கள் இருக்கு. தினமும் ஒவ்வொரு இடத்துக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கோம். tanah lot, nusa penida என்கிற இரண்டு இடங்களும் பாலியில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள். அதைக் கொஞ்சமும் மிஸ் பண்ணிடாதீங்க.

இந்த சம்மரை பாலியில் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். வித்தியாசமான புதுவித அனுபவம் கிடைக்கணும்னா மறக்காம பாலிக்கு போய்ட்டு வாங்க'' என்றவரிடம் பாலியில் மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டோம்.

அஷ்வினி

''இங்கே ஒவ்வொரு நாளுமே மறக்க முடியாத நாள்களாகத்தான் இருக்கு. எனக்குத் தண்ணீரில் விளையாடுறதுன்னா பயம். தீம் பார்க் போனால்கூட வாட்டர் கேம்ஸ்ல விளையாட மாட்டேன். ஆனா, இங்கே வந்ததுக்கு அப்புறம் அந்த பயம் போயிடுச்சு. ஜாலியா நிறைய நேரம் வாட்டர் கேம்ஸ் விளையாடுறேன்'' எனப் புன்னகைக்கிறார் அஷ்வினி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க