`எங்க சுத்துனாலும் இங்கேயே கொண்டுவந்து விடுது!' - வைபவ் நடிக்கும் காட்டேரி டிரெய்லர் | katerri movie trailer has been released

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (17/05/2019)

கடைசி தொடர்பு:18:45 (17/05/2019)

`எங்க சுத்துனாலும் இங்கேயே கொண்டுவந்து விடுது!' - வைபவ் நடிக்கும் காட்டேரி டிரெய்லர்

வைபவ்

`யாமிருக்க பயமேன்', `கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குநர் டி.கே, தற்போது இயக்கியிருக்கும் படம், `காட்டேரி'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா ஆகிய மூன்ற கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு ஹீரோயின் மணலி ரத்தோட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

காட்டேரி

இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி படமாகத் தயாராகியுள்ள இப்படத்துக்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, பிரவின் கே.எல் படத்தொகுப்பு செய்ய எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார். முன்னதாக ஓவியா நடிக்க வேண்டியதாக இருந்தது. பிக்பாஸ் ஷோவுக்கு கொஞ்சம் அதிகச் சம்பளம் கேட்டதால் அவர் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டார்.  

காட்டேரி

இப்படம் குறித்து இயக்குநர் டிகே விகடனுக்கு அளித்த பேட்டியில் ``காட்டேரி'க்கு மூதாதையர்கள்னு ஒரு அர்த்தம் இருக்கு. காட்டேரியை தெய்வமா வழிபடுற மக்களும் இருக்காங்க. நல்ல காட்டேரியும் இருக்கு; காட்டேரிங்கிற வார்த்தை பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் பொருந்தும்!" என்றார்.