பெயரை மறந்த இயக்குநர் - மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா  | ayogya dubbing artist raveena name missing issue

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (17/05/2019)

கடைசி தொடர்பு:19:16 (17/05/2019)

பெயரை மறந்த இயக்குநர் - மன்னிப்புக் கேட்ட ஹீரோயின் ராஷி கண்ணா 

'அயோக்யா' படத்தின் எண்டு கிரெடிஸில் தன் பெயர் இல்லை என டப்பிங் கலைஞர் ரவீனா ரவி வருத்தம்

ரவீனா

சமீபத்தில் வெளியான `அயோக்யா' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 'அயோக்யா' அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் என்பதால் படத்தில் அவருக்கு டப்பிங் குரல்தான்.

ராஷி கண்ணா

 

'அயோக்யா' படத்தில் ராஷிக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவி. இந்தப் படத்தை பார்த்து டப்பிங் பேசியதற்காகத் தன் பெயர் கிரடிட் லிஸ்டில் இல்லை என மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், டிரைவர், கார்பென்டர், மெஸ் அண்ணா பெயர்களைப் போட்டிருக்காங்க ரொம்ப நல்லது. இருப்பினும் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் இல்லை. இது நடப்பது வருதத்துக்குரிய விஷயம். காத்திருப்போம் எனப் பதிவிட்டிருந்தார்.    

ரவீனா

ரவீனா ட்வீட்டைப் பார்த்த ஹீரோயின் ராஷி இதுகுறித்து மன்னிப்புக் கேட்டும், தன் நடிப்புக்கு ரவீனா குரல் அழகு சேர்த்துள்ளது எனவும்  பதில் ட்வீட் பதிவிட்டார்.

ராஷி கண்ணா