'தர்பார்' ரஜினியின் இன்ட்ரோ சாங் பாடும் எஸ்.பி.பி! | SPB singing in Rajini's Darbar

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (17/05/2019)

கடைசி தொடர்பு:21:53 (17/05/2019)

'தர்பார்' ரஜினியின் இன்ட்ரோ சாங் பாடும் எஸ்.பி.பி!

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் காம்போ முதன்முதலாகக் கூட்டணி அமைத்திருக்கும் படம் 'தர்பார்'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 15-ம் தேதி முடிந்திருந்தது. 'பேட்ட'யைத் தொடர்ந்து 'தர்பார்' படத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடலை முழுக்கவே பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 

ரஜினி - எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக போய்க்கொண்டிருந்தது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிக்கும் நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கிறார். பழைய க்ளாஸிக் ரஜினிகாந்த் படங்கள் என்றாலே கருத்துள்ள இன்ட்ரோ பாடல்தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படி ரஜினியின் முக்கால்வாசி இன்ட்ரோ பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'பேட்ட' படத்தின் ரஜினியுடைய போர்ஷனைப் பாடியிருந்தார். இருப்பினும் நாலு வரிகள்தான் பாடியிருந்தார் என்பதால் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'தர்பார்' படத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடல் முழுக்கவே எஸ்.பி.பி பாடுகிறார். கடந்த மே 15-ம் தேதியன்று படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அனைவரும் சென்னை வந்துவிட்டனர். மேலும், மே 29-ம் தேதிக்கு மேல் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஆரம்பமாக இருக்கிறது.