விமலுக்கு `சண்டக்காரி' ஆன நடிகை ஸ்ரேயா - லண்டனில் முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பு! | Actress sherya in vimal pair in sandakari

வெளியிடப்பட்ட நேரம்: 07:25 (18/05/2019)

கடைசி தொடர்பு:07:25 (18/05/2019)

விமலுக்கு `சண்டக்காரி' ஆன நடிகை ஸ்ரேயா - லண்டனில் முடிந்த முதற்கட்ட படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா. சிம்புவுடன் இணைந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் நடித்தார். பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படத்தில் நடித்தார். அரவிந்த்சாமி ஜோடியாக இப்படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இதற்குப் பிறகு தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுடன் இணைந்து `சண்டக்காரி' படத்தில் அவருக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரேயா

`சண்டக்காரி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் கிராமம் சார்ந்த ஏரியாவில் நடக்க இருக்கிறது. லண்டனில் எடுத்த புகைப்படங்களை இவர் அண்மையில் சமூக வளைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் படங்களைப் பார்த்த இவரின் ரசிகர்கள் `u look beautiful ' என்று கமென்ட் செய்திருந்தனர். இந்தப் படத்தில் விமலுக்கு வில்லன் ரோலில் `மகாதீரா' படத்தில் நடித்த `தேவ் கில்' நடிக்கிறார். விமல் நடிப்பில் விரைவில் `களவாணி 2' ரிலீஸாக இருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க