இந்தி `காஞ்சனா'வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! | hindhi kanchana first look poster

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:05 (18/05/2019)

இந்தி `காஞ்சனா'வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம் 'காஞ்சனா'. இந்தப் படம் மூன்று பார்ட்டுகளைத் தாண்டி ஹிட் அடித்தது. மேலும், பேய் படங்களில் புதிய ஜானரை இந்தப் படம் உருவாக்கியது. தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் லாரன்ஸ். இதில் ஹீரோவாக நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 

காஞ்சனா

மேலும், 'லக்ஷ்மி பாம்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கண்ணுக்கு மையிடுவது போல் போஸ்டரில் அக்‌ஷய் குமார் லுக் உள்ளது. கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழிலிருந்து கிட்டதட்ட எட்டு வருடங்கள் கழித்து இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் காணப்படுகிறது. அடுத்த வருடம் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. பாக்ஸ் ஸ்டார் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க