ஜெயம் ரவியின் 'கோமாளி' மோஷன் போஸ்டர் ரிலீஸ் #comali | jayam ravi's comali first look motion poster

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (18/05/2019)

கடைசி தொடர்பு:19:06 (18/05/2019)

ஜெயம் ரவியின் 'கோமாளி' மோஷன் போஸ்டர் ரிலீஸ் #comali

ஜெயம் ரவியின் 'கோமாளி' மோஷன் போஸ்டர் ரிலீஸ்

கோமாளி |

புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்கும் திரைப்படம் 'கோமாளி'. ரவியின் 24-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை 'எல்.கே.ஜி' படத்தைத் தயாரித்த ஐசரி கணேஷின் வேல்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி இசையமைக்கிறார்.

ஜெயம் ரவி

யூடியூபில் வைரலான 'அப்பாலாக்' குறும்படம் மூலம் பிரதீப் ரங்கநாதன் 'கோமாளி' படத்தை இயக்குகிறார். இப்படம் குறித்து ஜெயம் ரவி பேசுகையில், "பல விஷயங்களைப் பார்க்கிறோம்; அதெல்லாம் கொஞ்சம் பாதிக்கும். அப்புறம் ஈஸியா கடந்துபோயிடுவோம். ஆனா, அப்படிக் கடந்துபோக முடியாத ஒரு விஷயத்தைக் காமெடியா சொல்லப்போற படம்தான் 'கோமாளி.' இதுல யோகி பாபு கேரக்டர் குறிப்பிட்டுப் பேசப்படும். அறிமுக இயக்குநர் பிரதீப் ராகவன் இயக்கியிருக்கார். சின்ன பையன்னு நினைச்சேன்; படத்துல புதுசா ஒரு விஷயத்தோடு வந்தார். இந்தப் படத்துல கோமாளியும் ஒரு முக்கியமான ரோல். படத்தோட ஆரம்பத்துல ஒரு குட்டி வீடியோ வரும். அதுல வர்ற கேரக்டரை வேறொருவர் பண்றதா இருந்து, கடைசியில நானே நடிச்சுட்டேன். அந்தக் கேரக்டருக்காக 20 கிலோ எடையைக் குறைச்சேன். அதுதான் படத்துல ட்விஸ்ட்!" என்றார்.