டார்ச் பொருத்தப்பட்ட வெள்ளி செங்கோல் - கமலுக்குப் பரிசளித்த பார்த்திபன்! | Actor parthiban gift to kamal in 'otha seruppu' audio launch

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/05/2019)

கடைசி தொடர்பு:16:20 (19/05/2019)

டார்ச் பொருத்தப்பட்ட வெள்ளி செங்கோல் - கமலுக்குப் பரிசளித்த பார்த்திபன்!

ஒத்த செருப்பு

'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் 'ஒத்த செருப்பு'.  இந்த படத்தை இவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், சந்தோஷ் சிவன் இசையமைப்பாளராகவும் வேலைப் பார்த்திருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. குறிப்பாகப் படத்தின் சவுண்ட் டிசைனராக ரசூல் பூக்குட்டி  பணியாற்றியிருக்கிறார். இன்று இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது. 

கமல்

விழாவில் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ஏ.எல்.விஜய், நவீன் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல சிறப்புகள் நடிபெற்றன. அதில் ஒன்றாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப் பிரிவில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரி முத்துவுக்கு, உலக உருண்டையில் தங்க காலணி பதித்து நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. சில காரணங்களால் விழாவுக்குக் கோமதியால் வரமுடியாததால் பார்த்திபனின் பெண் உதவி இயக்குநர்கள் இதைப் பெற்று கொண்டனர். பிறகு, பார்த்திபன் வெள்ளி செங்கோல் ஒன்றை கமலுக்கு பரிசளித்தார். அதில் மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் பொருத்தப்பட்டிருந்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க