ஒரு குரலை அடக்கணும்னு நினைச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும் - ஜீவாவின் `ஜிப்ஸி' டிரெய்லர் | jiiva starrer gypsy trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (20/05/2019)

கடைசி தொடர்பு:17:13 (20/05/2019)

ஒரு குரலை அடக்கணும்னு நினைச்சீங்கனா ஓராயிரம் குரல் வெடிக்கும் - ஜீவாவின் `ஜிப்ஸி' டிரெய்லர்

ஜீவா நடிக்கும் `ஜிப்ஸி' படத்தின் டிரெய்லர் வெளியானது. 

ஜிப்ஸி

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, இவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும் மிஸ் இமாசலப்பிரதேஷ் பட்டம் வென்றவருமான நடாஷா சிங் நடிக்கிறார். மலையாள நடிகர் சன்னி வெய்ன், இயக்குநர் லால் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், அரசியல் என இரண்டும் ஒருசேர் கலவையாய் இப்படம் தயாராகியுள்ளது. 

குதிரையுடன் ஊர் ஊராகச் செல்லும் இசைக்கலைஞனாக நடித்துள்ளார் ஜீவா. படத்தின் படப்பிடிப்பு நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவில் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

ஜீவா

சி.எஸ்.பாலசந்தர்  கலையமைப்பை மேற்கொள்ள படத்தின் ஸ்டன்ட் காட்சிகளை தினேஷ் சுப்புராயன் வடிவமைக்கிறார். `ஜிப்ஸி'  படத்தின் பாடல்களை யுகபாரதி, ராஜுமுருகன், அறிவு உள்ளிட்டோர் எழுதியுள்ளார்கள்.