அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்! #Vikram58 | Actor Vikram to join with Ajay Gnanamuthu for #Vikram58

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (20/05/2019)

கடைசி தொடர்பு:20:40 (20/05/2019)

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்! #Vikram58

விக்ரம்

தமிழில் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சாமி-2. ஹரி இயக்கியிருந்த அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு விக்ரம், ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் `கடாரம் கொண்டான்' படத்தில் நடித்திருக்கிறார். கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கமலின் மகள் அக்‌ஷரா ஹாசனும் நடித்து இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் கெளதம் மேனன் இயக்கத்தில் `துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

ajay gnanamuthu

இப்படத்தின் ரிலீஸுக்காக விக்ரம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `டிமான்ட்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து விக்ரமின் 58-வது படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க