`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம் | simbudevan's new film titled 'kasadatabara' title look launced by suriya

வெளியிடப்பட்ட நேரம்: 22:13 (20/05/2019)

கடைசி தொடர்பு:06:45 (21/05/2019)

`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்த `புலி' படத்தை சிம்புதேவன் இயக்கினார். இப்படத்தைத் தொடர்ந்து, `இம்சை அரசன் 24-ம் புலிகேசி ' படத்தை இயக்கிவந்தார். வடிவேலுக்கும் படக்குழுவுக்குமான பிரச்னைகள் இழுபறியில் இருக்க, தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் எடுத்து முடித்திருக்கிறார்.  டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், வெங்கட் பிரபு தயாரிக்கும் படத்தை இயக்கியுள்ளார்.  சமீபத்தில் ஷூட்டிங் முடிந்த இப்படத்தின் டைட்டில், இன்று நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு `கசடதபற' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

சிம்புதேவன்

ஆறு கதைகளைக்கொண்ட ஆன்தாலஜி படமாக இப்படம் உருவாகியுள்ளது. மொத்தம் ஆறு கதைகள். எல்லாக் கதைகளும் ஒன்றுக்குக்கொன்று கோக்கப்பட்டிருக்கும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டாய் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  வெங்கட்பிரபு இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், சிம்புதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,          "இப்படம் குறித்த தகவல்களுடன்,  `இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படமும் இனிதே தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.