GOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்! - காரணம் என்ன?  | Chinese couldn't watch Game of Thrones’ finale, Do you know why?

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (21/05/2019)

கடைசி தொடர்பு:15:25 (21/05/2019)

GOT-ன் கடைசி எபிசோடை பார்க்கமுடியாமல் தவித்த சீன ரசிகர்கள்! - காரணம் என்ன? 

உலகின் மிகப்பிரபலமான டிவி தொடராகக் கருதப்படும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் இறுதி எபிசோடு நேற்று வெளியானது. இதற்கு முன்னிருந்த பார்வையாளர் சாதனைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தது. ஆனால், சீனாவைச் சேர்ந்த யாராலும் இந்த எபிசோடை காணமுடியவில்லை. இந்தத் தொடரை அங்கு ஒளிபரப்பும் ஸ்ட்ரீமிங் தளமான டென்சென்ட் வீடியோ தளத்தில் நேற்றைய எபிசோடை ஆர்வமாக காணச் சென்ற அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ``Transmission Media Problems" என்ற தகவல் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், உண்மையில் இதற்கு எந்தத் தொழில்நுட்ப பிரச்னையும் காரணம் இல்லையாம். இந்தத் தொடரின் தயாரிப்பு நிறுவனமான HBO தரப்பில் சீன அரசுதான் டென்சென்ட் நிறுவனத்துக்கு இதுதொடர்பாக கட்டுப்பாடு விதித்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுத்திருக்கும் வணிகப்போர்தான் இதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

ஏமாற்றத்தில் சீன GOT ரசிகர்கள்

ஏற்கெனவே உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான வாவேவை நெருக்கிவருகிறது ட்ரம்ப் அரசு. கூகுள் தொடங்கி இன்டெல் வரை பல அமெரிக்க நிறுவனங்கள் வாவேவுடனான வணிக உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கின்றன. இந்த மோதல் இப்போது பொழுதுபோக்கு வரை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா தொடரான கேம் ஆஃப் த்ரோன்ஸின் கடைசி எபிசோடை பார்க்கவேண்டுமென்றால் பைரசிதான் ஒரே வழி. சீனாவில் அதிக மக்கள் பார்க்கும் தொடரும் இதுதான்.

சீனா  அமெரிக்கா

இந்த 8-வது சீசனை மட்டும் டென்சென்ட் வீடியோவில் 55 கோடிமுறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது. இது தொடக்கம்தான், இன்னும் என்னவெல்லாம் இரு நாடுகளிலும் இந்த வணிகப் போரால் மாறப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், இது தொடர்ந்தால் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க