ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்! | selena gomez marriage post shocks audience

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (21/05/2019)

கடைசி தொடர்பு:11:21 (22/05/2019)

ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்!

செலினா கோம்ஸ்

72-வது கேன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் சென்ற வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவின் சிறப்பம்சமே நட்சத்திரங்கள் தங்கள் படக்குழுவுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருவதுதான். சர்வதேச அளவில்  இயக்குநர்களின் பெரும் கனவாய் இருக்கும் இந்தத் திரைப்பட விழாவின் 72-ம் வருடப் பதிப்பு மே 14-ம் தேதி தொடங்கி மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல் படமாக அமெரிக்காவின் `The Dead Don’t Die' என்ற படம் திரையிடப்படவுள்ளது. ஸோம்பி நகைச்சுவைப் படமாக தயாராகியுள்ள இப்படத்தில் பில் முரே செலினா கோம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படக்குழுவினர் ரெட் கார்பெட் நடக்கும்போது மூத்த நடிகர் பில் முரேவுடன் எடுத்த போட்டோவை செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு கேப்ஷனாக  ``நான் பில் முரேவை திருமணம் செய்யப் போகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.  

26 வயது நிரம்பிய செலினா கோம்ஸ் 68 வயதுடைய பில் மூரேவை திருமணம் செய்யவுள்ள செய்தி ஹாலிவுட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கேன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில், தான் முதன் முறையாகப் பங்கேற்ற பரபரப்பில் இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் அல்லது ஒரு நகைச்சுவைக்காகக்கூட இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

செலினா கோம்ஸ் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.