கார்த்தி - ராஷ்மிகா மந்தனா இணையும் புதிய படம்! - டைட்டில் இதுதானா? | This could be the title of karthi's new film

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (21/05/2019)

கடைசி தொடர்பு:19:45 (21/05/2019)

கார்த்தி - ராஷ்மிகா மந்தனா இணையும் புதிய படம்! - டைட்டில் இதுதானா?

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனின் முதல் படம் `ரெமோ'. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராகப் பணிபுரிந்திருந்தார். இதற்கிடையில் அந்தப் படத்துக்குப் பின் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். இவர்கள் இணையும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது, என்பதால் அவரின் ரசிகர்கள் பெரிதும் இந்தப் படத்தை எதிர்பார்க்கின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள்.

கார்த்தி - ராஷ்மிகா மந்தனா

`தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த சத்யன் சூரியன், இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், `சுல்தான்' எனத் தலைப்பிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கார்த்தி, ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்தியின் அக்கா கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க