பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

•  'அவன் இவன்’ படத்துக்காகத் தன் முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறாராம் விஷால். மரத்தின் உச்சியில் இருந்து ஓணான்போலத் தலைகீழாக வர வேண்டும் என்று பாலா காட்சியை விளக்க, ஸ்டன்ட் மாஸ்டரே ஒரு கணம் தயங்கி னாராம். ஆனால், ஒரு வாரம் தொடர்ந்து பயிற்சி எடுத்து அட்டகாசமாக நடித்துக் கொடுத்திருக்கிறார் விஷால். தேசிய விருது தட்டும் எண்ணமோ?!

இன்பாக்ஸ்

• உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் தேர்தல் ஜுரம் துவங்கவிருப்பதால், பிப்ரவரி 18-ம் தேதிக்குள் 14 படங்களை வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதனால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படங்கள் கலக்கத்தில் இருக்கின்றன. படம் ஹிட்டானாலும் இரண்டு வாரங்களுக்கு மேல் தியேட்டரில் தங்க முடியாது என்பதுதான் காரணம். விஜய்க்கு இந்தக் கவலை வேறயா?

இன்பாக்ஸ்

•  விஜய் டி.வி-யுடன் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து நடத்தும் இசை நிகழ்ச்சி ஜனவரி 16-ம் தேதி சென்னையில் நடைபெறும். தமிழ கத்தில் யுவனின் முதல் லைவ் இசை நிகழ்ச்சி யான இதை நேரில் பார்க்க அனுமதி இலவசமாம். பந்தோபஸ்துக்குச் சொல்லுங்கப்பா!

இன்பாக்ஸ்

•  ஷாரூக், அபிஷேக் உள்ளிட்ட பாலிவுட் நடிகர் கள் அடிக்கடி ஜெர்மனிக்குப் பறந்துவிடுவார்கள். 'வாட்டர் தெரபி’ செய்யத்தான் அந்த ரகசிய விசிட்டாம். தண்ணீர் மூலம் எலும்புகளைப் பாதிக்காமல், சதைகளைச் சீராக்கி, கொழுப்பைக் குறைத்து உடலை ட்ரிம் ஆக்கும் சிகிச்சை முறையாம். 'தண்ணி’யால கெடுப்பதைத் தண்ணியால சரிசெய்றாங்க!

இன்பாக்ஸ்

•  சென்ற வாரம் கிழக்கு கடற்கரைச் சாலை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டம். சோனியா அகர்வால், ஸ்ரேயா, ரீமா சென் என ஜாலித் தோழிகள் கலந்துகொண்ட பார்ட்டியின் ஹைலைட்... த்ரிஷா ஜோக்ஸ்தானாம். எல்லாம் கமல் டிரெய்னிங்!

இன்பாக்ஸ்

•  கோவாவில் புத்தாண்டைக் கொண்டாடினார் அமிதாப் பச்சன். மகள் ஷ்வேதாவின் குழந்தைகள் அகஸ்ட்யா மற்றும் நவ்யாவுடன் படகில் அமிதாப் பறக்க, கோவா கடற்கரையே உற்சாகமானது. 68 வயது பச்சன், குட்டி ஷார்ட்ஸோடு பேரக் குழந்தைகளுடன் விளையாடியதைப் பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வியந்தனர்.கோவா தாத்தா!

இன்பாக்ஸ்
##~##

•  ஆகஸ்ட்டில் ஒபாமாவுக்கு 50-வது பர்த் டே. அப்போது ஸ்பெஷல் அறிவிப்பாக, தான் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து அறிவிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார் ஒபாமா. ஆனால், அவசரப்பட்டு, 'மிஷேல் ஒபாமா இரண்டு மாதம் கர்ப்பம்!’ என செய்தி வாசித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கிப்ஸுக்குக் கல்தா கொடுத்துவிட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் இரண்டாவது அதிபர் ஒபாமா. ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!

•  பிப்ரவரி 19 என்று திருமணத்துக்குத் தேதி குறித்துவிட்டது மகேஷ் பூபதி - லாரா தத்தா ஜோடி. கோவா தாஜ் ஹோட்டலில் திருமணம். டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி என விளையாட்டுத் துறையினர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ஸ்பெஷல் அழைப்பிதழ்கள். ஜாலி பண்ணுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு