பிரீமியம் ஸ்டோரி
##~##
ஜா
ன் ஐசக்... உலகம் முழுவதும் பரிச்சயமான புகைப்படத் தமிழன்! 20 வருடங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் புகைப்படக்காரராக 120 நாடுகள் சுற்றியவர். இஸ்ரேல்-லெபனான் போர், ருவாண்டா கலவரம், போல்பாட் இனப் படு கொலை, இராக் - குவைத் போர் என உலகத்தை அதிரவைத்த வரலாற்று நிகழ்வுகளின் நேரடி சாட்சியாக இருந்தவர்.
உலக அநீதிகளின் சாட்சி!

''25 வயசு வரைக்கும் திருச்சியில் இருந்தேன். ஒரு மியூஸிக் பாண்ட் ஆரம்பிக்கிறதுதான் என் கனவு. அப்போ, அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இல்லை. ஏர் இந்தியாவில் ஒரு வருஷம் வேலை பார்த்தா, அமெரிக்கா போய் வர இலவச டிக்கெட் கிடைக்கும்னு சொன்னாங்க. உடனே, அடிச்சுப் பிடிச்சு வேலைக்குச் சேர்ந்துட்டேன். 1968-ல் அமெரிக்கா போய் வர இலவச டிக்கெட் கிடைச்சது. ரிட்டர்ன் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்துட்டு, ஃப்ளைட் ஏறிட்டேன். அமெரிக்காவின் கென்னடி ஏர் போர்ட்ல இறங்கினப்போ, என் கையில் ஒரு டாலர்கூடக் கிடையாது. கையில் இருந்த கிடாரைவெச்சு பாட்டுப் பாடி காசு சம்பாதிச்சேன். ஐ.நா சபையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுக்கு என் குரல் ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவங்க மூலமா ஐ.நா சபையில் அட்டென்டர் வேலை கிடைச்சுது. 1971-ம் வருஷ கிறிஸ்துமஸுக்கு என் சகோதரர் ஒரு பென்டெக்ஸ் கேமரா வாங்கி அனுப்பி னார். அதைவெச்சு போட்டோ எடுத்துப் பழகினேன். அப்போ ஐ.நா சபையில் 'Hand of Man’ங்கிற தலைப்பில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினாங்க. உடனே, இந்தியா கிளம்பி வந்து ஒரு பிச்சைக்காரரின் கை, குழந்தைகளைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் அப்பா, பாரத்தை இழுக்கும் உழைப்பாளியின் கை என்று விதவிதமாப் படங்கள் எடுத்துக் கொடுத்தேன். முதல் பரிசு கிடைச்சது. என் ஆர்வத்தைப் பார்த்து, ஐ.நா சபையின் புகைப் படப் பிரிவில் வேலை கொடுத்தாங்க.

உலக அநீதிகளின் சாட்சி!

78-ல் இஸ்ரேல் - லெபனான் நாடுகளுக்கு இடையே போர்க் காட்சிகள், 79-ம் வருடம் கம்போடியாவில் போல்பாட்டின் இன வெறி யில் இறந்த லட்சக்கணக்கான மக்கள். இவர் களுக்கு இடையில் மௌன சாட்சியாகப் பணிபுரிய வேண்டிய சூழல். வியட்நாமில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்தபோது அவர்களோடு கப்ப லில் பயணம் செய்தேன். அப்படி ஒரு படகில் வந்த 13 வயது வியட்நாம் சிறுமியைக் கடல் கொள்ளையர்கள் 12 பேர் சேர்ந்து கற்பழித்தார் கள். அவளது அப்பாவை அவள் கண் முன் னாடியே சுட்டுக் கொன்றார்கள். அம்மா கற்பைக் காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இப்படி ஒரு சூழலில், உடலில் துணியும் தெம்பும் இல்லாமல் அந்தச் சிறுமியைச் சந்தித்தேன். அவளை போட்டோ எடுத்திருந்தால், அது நிறைய விருதுகளை வாங்கிக் குவித்திருக்கும். ஆனால், என் மனம் அதற்குச் சம்மதிக்கவில்லை. 'பெஸ்ட் போட்டோகிராஃபர்’ என்பதைவிட, ஒரு நல்ல மனிதனாக நடந்துகொள்ள ஆசைப் பட்டேன். அவளுக்கு நல்ல உடைகளும், சாக்லேட்டுகளும் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு தைரியம் கொடுத்து கன்னியாஸ்திரீகளிடம் ஒப்படைத்தேன். 'நீ சின்சியரான நியூஸ் போட்டோகிராஃபரே இல்லை’ன்னு பலர் விமர்சித்தார்கள். ஆனால், எனக்குள் ஒரு திருப்தியான மனநிலைதான் நிலவியது!

உலக அநீதிகளின் சாட்சி!

ருவாண்டா இனக் கலவரம். இயந்திரத் துப் பாக்கி, வெட்டரிவாளோடு கும்பல் கும்பலாக மக்கள் மோதி உயிரை மாய்த்துக்கொண்டார் கள். எதிராளி சிக்கினால், கழுத்தில் டயரை மாட்டித் தீ வைத்தார்கள். மரண பயத்தில் இருக்கும் மனிதனின் அலறல் கொடூரமானது. மனதை அறுக்கக் கூடியது. அப்படிப் பல அலறல்கள் என் காதுகளை நிரப்பிக்கொண்டே இருந்தன. அங்கே ஒரு சிறுவனைச் சந்தித்தேன். 'என் கண் முன்னாலேயே, என் அப்பா, அம்மாவைத் துண்டுதுண்டா வெட்டி வீசிட்டாங்க. இங்கே இருந்தா, என்னையும் கொன்னுடுவாங்க. நான் நிறையப் படிக்கணும். என்னை உன்னோடு கூட்டிட்டுப் போ’னு அவன் என் காலைப் பிடித்துக் கெஞ்சினான். என் பின்னாலேயே ஓடி வந்தவனுக்கு அப்போ என்னால் உதவ முடியலை.  

உலக அநீதிகளின் சாட்சி!

அமெரிக்கா திரும்பியவுடன் அந்தக் குற்ற உணர்ச்சி என்னைத் தூங்கவிடலை. பத்துப் பதினைந்து வருடங்களாக அடக்கி வைத்திருந்த மன அழுத்தம் என்னை சிதைச்சிருச்சு. கோரமான உடல்கள், அழுகுரல்கள், அலறல்கள் கனவில் வந்து என்னை அலறவைத்தன. தற்கொலை செஞ்சுக்கலாம்னு அடிக்கடி மனசு சஞ்சலப்பட்டது. மனோ தத்துவ நிபுணர் ஆலோசனைப்படி ஆறு மாசம் விடுமுறையில் இந்தியா வந்து ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.  

உலக அநீதிகளின் சாட்சி!
உலக அநீதிகளின் சாட்சி!

பெங்களூரில் இருந்தபோது மைக்கேல் ஜாக்சன்கிட்ட இருந்து போன். யுனிசெஃப் விளம்பரத்துக்காக குழந்தைகளைவெச்சு நான் எடுத்திருந்த போட்டோ அவருக்குப் பிடிச்சி இருந்ததாம். 'நான் உங்கள் ரசிகன்’னு பாராட்டினார். 96-ம் வருஷம் 'They dont care about us’ பாடல் ஷூட்டிங்குக்காக பிரேசில் போனப்போ, என்னையும் அழைச்சுட்டுப் போனார். 'என் குழந்தைப் பருவம் கொடுமையானது. என் அப்பா ஒரு நாள்கூட என்னைப் பார்த்து சிரிச்சதே இல்லை. 'நீ அசிங்கமா இருக்கே’னு சொல்லிச் சொல்லியே என்னை எனக்கே பிடிக்காமல் செய்து விட்டார். அதனால்தான் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் என்னை நானே மாத்திக் கிட்டேன்’னு அடிக்கடி கண் கலங்கிச் சொல்வார் ஜாக்சன்.

அடுத்ததா, அவரோட 'ஹிஸ்டரி’ டூரில் கூடவே வந்து படம் எடுத்துத் தரணும்னு கேட்டார் ஜாக்சன். அவரோடு

உலக அநீதிகளின் சாட்சி!

மேடையிலேயே தொடர்ந்து இருந்ததால், எனக்குக் காது கேட்கும் திறன் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனாலும், அந்த டூர் முழுக்க அவரோடு இருந்து படங்கள் எடுத்துக் கொடுத்தேன். நான் எடுத்துக் கொடுத்த படங்கள் மூலமா 8.5 மில்லியன் டாலர் சம்பாதித்தார் ஜாக்சன். ஆனா, இரண்டு வருஷமா எனக்கு ஒரு டாலர்கூட சம்பளமாகத் தரலை. நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் மன்னிப்பு கேட்டு,  

உலக அநீதிகளின் சாட்சி!

2 கோடி சம்பளமாகக் கொடுத்தார். 'நீங்க ஒரு நல்ல குழந்தை, நல்ல கம்போஸர், நல்ல டான்ஸர். ஆனா, மோசமான பிசினஸ் மேன்’னு சொல்லி, அவர்கிட்ட இருந்து விலகி வந்துட்டேன்.

மீண்டும் யுத்தம், ரத்தத்துக்கு நடுவில் வேலை பார்க்கும் துணிவும் இல்லை. ஐ.நா சபை வேலையை ராஜினாமா செய்தேன். சப்தமே இல்லாத அமைதியான உலகத்தில் வாழணும்னு தோன்றியது. காடுகளில் பயணிக்க ஆரம் பிச்சேன். பல வருட மன அழுத்தம் குறைந்தது.

உலக அநீதிகளின் சாட்சி!

இப்போ புலிகளைப் பின் தொடர்ந்து படங்கள் எடுத் துட்டு இருக்கேன். இன்னும் 12 வருடங்களில் புலி என்கிற இனமே இல்லாமல் போகும்னு சொல்றாங்க. புலிகள் நமது இயற்கை சம நிலைக்கு எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தி ஒரு புத்தகம் எழுதப் போறேன். நான் பார்த்த பல அழிவுகள் நேரடியானது. அதே அளவுக்கு இணையான இந்த அமைதி அழிவைப்பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லணும். சப்தங்களை மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்த நான், முதன் முறையாக இயற்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கப் போகிறேன்!''

- நம்பிக்கையாகச் சிரிக்கிறார் ஜான் ஐசக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு