தங்கள் வாழ்க்கையை, வலியை, இழப்புகளை, அவமானங்களை, புறக்
. கணிப்புகளை வெவ்வேறு வடிவங்களில் பதிவு செய்து வரும் திருநங்கைகளின் அடுத்த முத்திரை... ஆவணப்படங்கள்! ஆறு திருநங்கைகள் வாழ்வின் வெவ்வேறு களங்களை ஆவணப்படமாக இயக்கி இருக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குத் தோள் கொடுத்துத் தொகுத்திருப்பவர் திருநங்கை கல்கி. தனக்குக் கிடைத்த உதவித்தொகை மூலம் வீடியோ கேமரா வாங்கியவர், அதை மற்ற திருநங்கைகளுக்கு அளித்து ஆவணப்படம் இயக்க ஊக்குவித்து உதவியிருக்கிறார்..
மானு - இயக்கிய ஆவணப்படத்தின் பெயர் 'இணைந்த கைகள்’. பால்யத்தில் சந்தித்த நண்பனை 14 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அனுபவம்தான் 'இணைந்த கைகள்’. ''ரவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சொந்த ஊருக்குத் திரும்பிய உடனேயே ரவியைச் சந்திக்கணும்னு ஆசையா இருந்தது. அவர் வீடுகூடத் தெரியும். ஆனாலும், என்னால் உடனே நேரடியாக அங்கு போக முடியலை. ஏன்னா, ரவிக்கு என்னை ஓர் ஆணாகத்தான் தெரியும். திருநங்கையாக உடம்பாலும் மனசாலும் மாறிப்போனதை ரவி எப்படி எடுத்துக்குவார்னு தெரியாது. ஒருவழியாக, ரவியை செல்போனில் தொடர்புகொண்டேன். ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக என்னை எதிர்கொண்டாலும், பழைய பிரியத்தோடவே என்னை ஏற்றுக் கொண்டார். அந்த நட்புத் தருணம், என் வாழ்வில் நெகிழ்வான நிறைவளித்த ஒன்று!'' என்கிறார் மானு. ரவி மட்டுமல்லாது, அவரது மனைவியும் குழந்தை யும்கூட மானுவை இயல்பாக ஏற்றுக்கொண்டதையும் பதிவு செய்கிறது 'இணைந்த கைகள்’!

திருநங்கையான பிறகு, பிச்சை எடுத்தலும் பாலியல் தொழிலும்தான் சந்திராவுக்கு விதிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது அதில் இருந்து மீண்டு, இயல்பான வாழ்க்கைச் சூழலை அமைத்துக்கொண்டு இருக்கிறார். கொருக்குப்பேட்டை சேரி ஒன்றில் பிறந்த சந்திரா, 'கடல் நண்பர்கள்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கியது, மீனவர்களின் பரிதவிக்கும் வாழ்க்கையை!

அபி இயக்கிய ஆவணப்படத்தின் பெயரே 'அன்புடன் அபி’. பரதநாட்டியக் கலைஞரான அபி, தனது பரதநாட்டிய முத்திரைகளுடன் தனது ஆசைகளையும் அபிலாஷைகளையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார். அவருக்கும் அவரது தாய்க்குமான உறவு குறித்து நுட்பமாகப் பேசுகிறது இவரது படைப்பு. காஞ்சனா வின் 'நம்பிக்கை’ என்னும் படம் மாற்றுத் திறனாளிகளின் அவலங்களையும் துயரங்களையும் ஆவணப்படுத்துகிறது. ''நான் எலெக்ட்ரிக் டிரெய்ன்ல போய்க் கிட்டு இருந்தப்போ சந்திச்ச மாற்றுத் திறனாளி ஒரு ஆசிரியர். அவரால் பேச முடியாது. அந்தக் குறையினாலேயே அவருக்குத் திருமண வாய்ப்பு கைகூட வில்லை. அழகு நிறைந்தவர் அவர். ஒரு கட்டத் தில் நானே அவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்னு தீர்மானிச்சு தேடிப் போனால், அவரைக் கண்டுபிடிக்கவே முடியலை. அதன் பிறகுதான் என்னால் முடிந்த வரை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவணும்னு முடிவெடுத்தேன். அதன் ஒரு பகுதிதான் இந்தப் படம்!'' என்கிறார் காஞ்சனா.

சந்தியாவின் படம் 'ஒதுக்கப்பட்ட ஆத்மாக்கள்’. மின்சார ரயில் நிலையத்தின் படிக்கட்டுகளில் மிச்சமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்கும் முதியவர், கோயில் பிரசாதங்களில் வாழ்க்கையைக் கழிக்கும் முதிய பெண் என சுற்றிச் சுழல் கிற கேமரா, முதுமையின் துயரத்தைப் பதிகிறது. ''ஆணாகப் பிறந்து, திருநங்கையாக மாறிய

உடன் குடும்பத்தில் இருந்து விரட்டி அடிக்கப் படும் நாங்கள், நிராகரிப்பின் வலியை மிக அதிகமாகவே உணர்ந்தவர்கள். அதே போன்ற வலியைத்தான் தன் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியைத் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகச் செலவழித்துவிட்டு, இறுதியில் அதே குழந்தைகளால் விரட்டி அடிக்கப்படும் முதியவர்களும் எதிர்கொள்கிறார்கள்!'' என்கிறார் சந்திரா. சௌந்தர்யாவின் 'என் அம்மா’ படம், இரண்டு திருநங்கைகளின் அம்மாக்கள் குறித்துப் பேசுகிறது. ''பொறக்கும்போது பையனா பொறந்தான். அதுக்கப்புறம் பொண்ணா மாறிட்டான். அதனாலென்ன, பொறந்தது பொம்பளைப் புள்ளைன்னு நினைச்சுட்டுப் போறேன்!'' என்கிறார்கள் இரண்டு அம்மாக்களும். ஆனந்தி என்னும் திருநங்கையும் அவரது அம்மாவும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட படம் முடிகிறது.

ஆறு ஆவணப்படங்களையும் கவனித்தால், ஒரு நுட்பமான சேதி புலப்படுகிறது. 'இனம் இனத்தோடுதான் சேரும்’ என்பது பழமொழி. ஆனால், இந்த ஆவணப்படங்கள் கவனம் குவிக்கிற மனிதர்களைக் கவனித்தால், ஒதுக்கப்படுகிற மனம் மனத்தோடு சேர்கிறது என்ற புதுமொழி புரிகிறது!