ஐ.பி.எல். போட்டிக்கான பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது சி.சி.எல். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் டி 20. நடிகர்கள் மட்டுமே விளையாடும் இந்தப் போட்டி, வெறுமனே ஜிகினா கிரிக்கெட்டாக இல்லாமல் அசத் தலாக இருந்தது ஆச்சர்யம்!

கர்நாடகா புல்டோசர்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிப் புருவம் உயர்த்தவைத்தனர் கோலிவுட் ஹீரோக்கள். கடந்த முறையும் இறுதிப் போட்டியில் 'கர்நாடகா புல்டோசர்ஸ்’ அணியைத்தான் நாம் தோற்கடித்தோம். ஆனால், அப்போது கிட்டத்தட்ட 'ஒன் சைடட் கேம்’ ஆக 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றோம். ஆனால், இந்த வருட ஆட்டத்தில் பலப் பல நாடகங்களுக்குப் பிறகு, ஒரு ரன் வித்தியாசத்தில் மெகா த்ரில் வெற்றி. 'வெற்றி தோல்வி முக்கியம் அல்ல... விளையாட்டில் பங்குபெறும் உணர்வுதான் முக்கியம்!’ என்று சொல்லப்பட்டாலும், சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு, கர்நாடக அணியினர் ஏகமாக முறுக்கிக்கொண்டார்கள். ஒரு மரியாதை நிமித்தமாக 'ரன்னர்-அப்’ கோப்பையைப் பெறவும் எவரும் முன்வரவில்லை.

வெற்றி உற்சாகத்தில் இருந்த 'சென்னை ரைனோஸ்’ ஆல் ரவுண்டர் சிவாவிடம் கள நிலவரம் குறித்துக் கேட்டேன். ''செம மேட்ச்சுங்க... இத்தனைக்கும் சென்னை ரைனோஸைவிட கர்நாடகா பேட்டிங் ஆர்டர் செம ஸ்டிராங். ரொம்ப ஃபோர்ஸாவும் விளையாடுவாங்க. ஆனா, நம்ம டீமோட ப்ளஸ்... என்ன நடந்தாலும் கூலா இருக்கிறதுதான். ஆனா, அவங்களுக்கோ இந்தப் போட்டி ஒரு போர். அந்த அளவுக்கு ஃபைனல்ஸை எப்படியும் ஜெயிச்சிட ணும்னு வெறியா இருந்தாங்க. அவங்க டீம் கேப்டன் சுதீப் ஸ்மார்ட். ஆனா, கொஞ்சம் டென்ஷன் பார்ட்டி. அன்னைக் குப் போட்டியில், ரன் அவுட், கேட்ச் தவறவிட்டவங்களைத் திட்டிக்கிட்டே இருந்தாரு. கிரவுண்டுக்கு வெளியே பாசக்கார அண்ணன் மாதிரிப் பழகுவாரு. ஆனா, என்னமோ தெரியலை, அன்னைக்கு ரொம்பக் கோபத்துல இருந்தார். மூணு மேட்ச்சுக்கு முன்னாடி அடிபட்ட காயத்துக்கு எல்லாம் இந்த மேட்ச்ல பை ரன்னரோட வந்தது ரொம்ப டூ மச் நண்பா. ஆனாலும் பரவா யில்லை... ஆல் இஸ் வெல்!'' என்றுஉற்சாகத் தோடு முடித்துக்கொண்டார்.

இனிமேல் சி.சி.எல். போட்டியில் கர்நாடகா அணி கலந்துகொள்ளாது. அந்த அளவுக்கு இந்தத் தோல்வியை அவர்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள் என்று தகவல். 'அப்படியா?’ என்று சி.சி.எல். வட்டாரத்தில் விசாரித்தால், நழுவலாகத்தான் பதில் வருகிறது.

''கடைசி ஓவரின் ஒரு ரன் அவுட்டில் அதிருப்தி இருப்பதாக கர்நாடகா கேப்டன் சுதீப் சொன்னார். ஆனா, சி.சி.எல். டைரக்டர் விஷ்ணுவர்த்தன் இந்தூரி, நம் சென்னை டீமின் ஆலோசகர் சரத்குமார், தெலுங்கு வாரியர்ஸ் கேப்டன் வெங்கடேஷ், மும்பை ஹீரோஸ் கேப்டன் சுனில் ஷெட்டி போன்றோர்

பேசி சமாதானப்படுத்தி வெச்சிருக்காங்க. கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்காமப் போராடின கர்நாடகா அணி யும் சாம்பியன்தான்.

உண்மையைச் சொல்லணும்னா, வெற்றி வாய்ப்பை அவங்க நழுவவிடக் காரணம், அவங்க கேப்டன் சுதீப்பின் அதட்டல்கள்தான். தன் அணியி னரை அதட்டி விரட்டியதோட இல்லாம, விஷாலையும் ரெண்டு தடவை முறைச்சார். ஆனா, நம்ம பசங்க கூலா விளையாடி மிரட்டி எடுத்துட்டாங்க. அடுத்த வருஷம் இந்தப் பிரச்னைகூட இல்லாம இன்னும் பிரமாண்டமா நடக்கும் சி.சி.எல்!'' என்று நம்பிக்கை விதைக்கிறார்கள்.

ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு... இதுல இது வேறயா என்று நினைக்கத் தோன்றுகிறதா?