'ஸ்ப்ளாஷ்...’ என்று குளத்தில் குதிக்கும்போது நீரைக் கிழிக்கும் அனுஷா, அதற்குப் பின் நீருக்கே வலிக்காமல் குட்டி டால்பினாக நீந்துகிறார். 'இன்னொரு நீச்சல் சாம்பியன்’ என்று பட்டியலில் சேர்க்க முடியாத வீராங்கனை அனுஷா!

பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. ஐந்து வயது வரை உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 150 தங்கப் பதக்கங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி யான இவர், 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ நீச்சல் போட்டியில் தேசிய சாம்பியன். இப்போது ஒலிம்பிக் கனவோடு தண்ணீரிலேயே மிதந்துகொண்டு இருக்கிறார்.

''பிறக்கும்போதே எனக்கு ஆஸ்துமா பிரச்னை. அடிக்கடி ஐ.சி.யூ. படுக்கையில்தான் இருப்பேன். நெபுலைசர், இன்ஹேலர் இல்லாமல் ஒரு நாளும் கழியாது. ஒருவழியா சமாளிச்சு 12 வயசைக் கடந்தேன். ஆனா, அப்புறம் ஒவ்வொரு நாளையும் கழிக்கவே பெரிய போராட்டம் ஆயிருச்சு. அப்போதான் 'நுரையீரலுக்கு அதிக வேலை கொடுக்கும் உடற்பயிற்சிகள் செய்தால் குணமாகும் வாய்ப்பு இருக்கு’னு டாக்டர் சொன்னார். எங்க பள்ளியின் நீச்சல் பயிற்சியாளர் முகுந்தனிடம் பயிற்சிக்குப் போனேன். அப்போ என் எடை வெறும் 25 கிலோதான். 'நோஞ்சான் மாதிரி இருக்கா. ஆஸ்துமா பிரச்னையும் இருக்கு. நிச்சயம் இவளால ஸ்விம் பண்ண முடியாது’னு கோச் திருப்பி அனுப்பிட்டார். ஆனா, அம்மா தொடர்ந்து கெஞ்சி, பயிற்சியில் சேர்த்துவிட்டாங்க.

தினமும் எட்டு மாடிப் பள்ளிக் கட்டடத்தில் 15 தடவை மேலே கீழே ஏறி இறங்கிட்டே இருந்தேன். ரன்னிங், நீச்சல்னு அதிகமா மூச்சுவாங்கும் பயிற்சிகளா மேற்கொண்டேன். இதனால், அதிகமாப் பசிச்சது. நிறைய சத்தான உணவுகள் சாப்பிட்டேன். ரெண்டு வருஷத் தொடர் நீச்சல் பயிற்சியில் ஆஸ்துமா போயே போச்சு!

ஆனாலும், நீச்சல் பயிற்சியை விடாமல் தினம் ஐந்து மணி நேரம் செஞ்சேன். 2008-ல் முதல்முறையா மாநில அளவிலான போட்டியில் தங்கம் ஜெயிச்சேன். அதுதான் ஆரம்பம். புனே, ஜெய்ப்பூர்னு பதக்க வேட்டை தொடர்ந்து ஜப்பான் வரை நீந்தும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்போ என் முழுக் கவனமும்

ஒலிம்பிக் தங்கத்தின் மீதுதான்!'' என்று சின்னதாகச் சிரித்துவிட்டுத் தொடர்கிறார்.

''ஆஸ்துமா பிரச்னையோடு வந்த நான் 1,500 மீட்டர் நீச்சலில் இன்னைக்கு சாதிச்சிருக் கேன்னா... அதுக்கு என் பயிற்சியாளர் முகுந்தன் சாருக்குத்தான் நன்றி சொல்லணும். இப்போ நான் 54 கிலோ எடை இருக்கேன். எந்தப் பிரச்னையும் இல்லாம உடம்பு ஃபிட்டா இருக்கு. மற்ற உடற்பயிற்சிகள்போல நீச்சலில் வியர்ப்பது வெளியே தெரியாது. ஆனா, பயங்கரமாப் பசிக்கும். சத்து மாவு, ஓட்ஸ் கஞ்சி, பழங்கள், முட்டை, ஜூஸ், தோசை, இட்லி, சப்பாத்தினு சின்னச் சின்ன கேப்ல வெளுத்துக் கட்டிட்டே இருப்பேன். இவ்வளவு சாப்பிட்டால்தான், ரொம்ப நேரம் நீந்த முடியும்.

நீச்சல் பயிற்சியில் தீவிரமான இந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையே மாறிடுச்சு. எந்தப் பொழுதுபோக்கும் கிடையாது. ஆனா, டென்த் எக்ஸாம்ல 85 சதவிகித மார்க் எடுக்கும் அளவுக்குப் படிப் பாளி. படிப்பு போரடிச்சா... நீச்சல். நீச்சல்ல டயர்ட் ஆனா... படிப்பு. சிம்பிள்!''