இந்தியாவில் நம்பர் 1, உலகத் தரவரிசையில் 14-வது இடம் என படபடவெனத் தடதடக்கிறார் தீபிகா பல்லிக்கல். ஹாங்காங், நியூயார்க், மலேசியா என்று பறந்துபறந்து சாம்பியன் பட்டங்களைக் கொய்துவரும் பட்டாம்பூச்சியிடம் பேசினேன். 20 வயதுக்கான உற்சாகமும் உத்வேகமும் கலந்து வந்து விழுந்தன பதில்கள்...

''டாப் டென்ல எப்போ தீபிகா பெயர் வரும்?''

''ஒன்பது வயசுல இருந்து 11 வருஷமா ஸ்குவாஷ் விளையாடிக்கிட்டு இருகேன். என் பாஸ்போர்ட்ல கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் முத்திரையும் இருக்கு. கடந்த அஞ்சு வருஷமா நான் சென்னையில் இல்லை. இங்கிலாந்து, எகிப்து, ஆஸ்திரேலியானு நாடு நாடாப் போய் ஆறு மாசம், ஒரு வருஷம்னு அங்கேயே தங்கி பயிற்சி எடுத்துட்டு வர்றேன். அஞ்சு முறை சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியனான சாரா

ஃபிட்ஸ் ஜெரால்டுதான் இப்போ என் கோச். அவங்ககிட்ட பயிற்சி எடுக்க ஆரம்பிச்ச பிறகு, தொடர்ந்து மூணு சாம்பியன்ஷிப் ஜெயிச்சிருக்கேன். இந்த 14-வது இடம் பத்தாது. சீக்கிரமே டாப் டென்னுக்குள் வரணும். அதுக்கு இந்த 2012-க்குள் பல சாம்பியன் பட்டங்களை வெல்லணும். தீபிகாவோட உடனடி டார்கெட் இப்ப அதுதான்!''

''உலக அளவில் எகிப்து வீராங்கனைகள்தான் ஸ்குவாஷில் கில்லி. அவர்களைத் தோற்கடிக்க எந்த மாதிரி பயிற்சிகள்லாம் எடுத்துக்குறீங்க?''

''எகிப்தில் ஸ்குவாஷ் தேசிய விளையாட்டு. நம்ம ஊர்ல எப்படி தெருவுக்குத் தெரு கிரிக்கெட் விளையாடிட்டு இருப்பாங்களோ, அது மாதிரி அங்கே ஸ்குவாஷ். மூணு நாலு வயசுல இருந்தே ஸ்குவாஷ் விளையாட ஆரம்பிச்சிடுவாங்க. ஆனா, இங்கே பதினஞ்சு வயசுக்கு மேலதான் ஸ்குவாஷ் ராக்கெட்டையே கையில எடுக்கிறோம். அப்புறம் எப்படிப் போட்டி சமமா இருக்கும்? 'ரோமில் ரோமானியனாக இரு’னு ஒரு பழமொழி சொல்வாங்களே... அதனாலதான் எகிப்திலேயே தங்கி நான் பயிற்சி எடுத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட இப்ப பாதி எகிப்துப் பெண்ணாவே மாறிட்டேன்!''

''விளையாட்டுல இவ்வளவு சின்சியரா இருக்கீங்க. ஆனா, உங்க மேல ஒரு செக்ஸி இமேஜ் இருக்கே?''

''ஸ்குவாஷ் விளையாட்டுக்கான உடைகள் கொஞ்சம் செக்ஸியா இருக்கலாம். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?''

''உங்க ஃபிட்னஸ் ரகசியம்?''

''டயட் பிடிக்கவே பிடிக்காது. நிறைய சாப்பிடுவேன். ஆனா, 'ஜங்க் ஃபுட்’ கண்டிப்பா கிடையாது. நிறைய காய்கறிகள் சாப்பிடுவேன். தினமும் அஞ்சு மணி நேரம் ஜிம், ஸ்குவாஷ்னு பயிற்சிகள். அப்புறம் ஃப்ரெண்ட்ஸோட ஊலலலானு ஊர் சுத்தக் கிளம்பிடுவேன்!''

''உங்க பேர்ல இருக்கிற பல்லிக்கலுக்கு என்ன அர்த்தம்?''

''அது எங்க குடும்பப் பேர். என்ன அர்த்தம்னு எனக்கே தெரியாது!''