ஒரு பக்கம் பள்ளியின் 'நூறு சதவிகித வெற்றி’ நிர்ப்பந்தம். அதற்கு மாற்றாகக் குழந்தைகளிடம் தனித் திறமையை வளருங்கள் என்று ஊக்குவித்தால், அங்கும் காத்திருக்கிறது அபாயம்! 'ரியாலிட்டி ஷோ’க்கள் என்ற பெயரில், குழந்தைகளின் வெற்றி கொண்டாடப்படுவதைவிட, தோல்விதான் பூதாகாரப்படுத்தப்படுகிறது!

இது நியாயமா? என்ற கேள்விக்கு வரிந்துகட்டிக்கொண்டு பதில் சொல்லத் தொடங்கினார் 'அபஸ்வரம்’ ராம்ஜி. முழுக்கவே குழந்தைகளை வைத்துக்கொண்டு இவர் நடத்தும் 'இசை மழலை’ என்ற மெல்லிசைக் குழுவில் இடம்பெற்ற குழந்தைகள் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் 'லகான்’, 'ஸ்லம்டாக் மில்லியனர்’ ('ஜெய்ஹோ’!) படங்களில் பாடி இருக்கிறார்கள். ரியாலிட்டி ஷோக்களில் 'எலிமினேட்’ செய்யப்படும் குழந்தைகளின் உணர்வுகளுக்காகப் பரிந்து பேசுகிறார் ராம்ஜி.

''தேர்ந்த பாடகர்களுக்கே சமயங்களில் தொண்டை கட்டிக்கும். சரியா பாட முடியாது. அப்படி இருக்கிறப்போ, அந்தக் குழந்தைங்களுக்கும் பாட முடியாமப்போறது ஒண்ணும் தப்பு கிடையாதே?

ஒரு குழந்தையால ஜெயிக்க முடியலைன்னா, அதுக்குப் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லணும். அதைவிட்டுட்டு, அந்தக் குழந்தை அழறதை அப்படியே ஷூட் பண்ணி, அதைப் பத்து நிமிஷம் ஓடவிடுறது நல்லாவா இருக்கு? அந்தக் குழந்தைக்கும் கஷ்டம், பார்க்கிறவங்களுக்கும் கஷ்டம்.

இதுல சேனல் நபர்களை மட்டும் தப்பு சொல்ல முடியாது. பெத்தவங்க அவங்க குழந்தைகளை நல்லா பயிற்சி கொடுத்து அழைச்சுட்டு வரணும். என்ன நடந்தாலும் அழக் கூடாதுனு சொல்லி நம்பிக்கை கொடுக்கணும். பெத்தவங்களும் குழந்தைங்க கிட்ட அதிகமா எதிர்பார்க்கக் கூடாது. 'நம்மளால நல்ல பாடகரா வர முடியலையே’னு குழந்தைகளைப் போட்டு படுத்தக் கூடாது!

ஒரு நிகழ்ச்சியில் யாழினினு ஒரு பொண்ணு கலந்துக்கிட்டு நல்லா பாடினா. ஆனா, ஜெயிக்க முடியலை. மறுபடியும் நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டு அடுந்த முறை பாட வந்திருக்கா. முன்ன விடவும் இப்போ நல்லா பாடிக்கிட்டு இருக்கா. அவ ஒரு நல்ல உதாரணம்! இப்படித்தான் பெத்தவங்களும் நடந்துக்கணும். அவங்க குழந்தைகளையும் தயார்படுத்தணும்.

'எஸ்.பி.பி. பாட்டு நிகழ்ச்சிக்குப் போயிட்டு நல்லா அழுதுட்டு வந்தேன்’னு யாராவது சொன்னா நல்லாவா இருக்கும்? அப்படித்தானே இந்தக் குழந்தைகள் பாடுறதும்! அதைக் கொஞ்சம் சந்தோஷமா மட்டும் காட்டுங்களேன்!''- என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார் ராம்ஜி.

இப்படியான 'ரியாலிட்டி ஷோ’க்கள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் மனரீதியான பாதிப்புகள் குறித்து உளவியல் நிபுணர் யாமினி கண்ணப்பனிடம் கேட்டோம்.

''பொதுவாக, இப்படியான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் வயது 7 முதல் 12-க்குள்தான் இருக்கின்றன. உடனடி புகழ், பரிசுகள் ஆகியவற்றை மனதில் கொண்டு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை இதில் வெற்றி பெற வைக்க அழுத்தம் தருகிறார்கள். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் அழுத்தமும் வெற்றி பெற முடியாவிட்டால் உண்டாகும் ஆதங்கமும் குழந்தைகளை ரொம்பவே பாதிக்கின்றன. 'ரியாலிட்டி ஷோ’க்களை குழந்தைகளுக்கு என்றே வடிவமைக்க வேண்டும். அந்த நிகழ்ச்சிகளில் அவர்களின் 'பெர்ஃபாமன்ஸ்’ மீதான விமர்சனங்கள் மென்மையாக, தவறுகளைத் திருத்திக்கொள்ள வழிகாட்டும் தன்மைகொண்டதாக இருக்க வேண்டும். இப்படியான விமர்சனங்களின் அடிப்படையில்தான் குழந்தைகள் தன்னைப் பற்றிய 'ஐடென்டிடி’யை உருவாக்கிக்கொள்வார்கள்.

அதிகமான நேரத்தைப் பயிற்சியிலேயே செலவழிப்பதால் படிப்பு, உடல்நலம், நண்பர்களுடனான பொழுதுபோக்குகள் பாதிக்கப்படும். கேமரா முன்பு 'இப்படிச் செய்’, 'அப்படிப் பேசு’ என்று சொல்லி, அதற்கு ஏற்றாற்போல் குழந்தைகள் நடப்பதால் அது 'ரியாலிட்டி’ என்பதற்கான தகுதியை இழந்துவிடுகிறது. மிகவும் சின்ன வயதிலேயே ஒரு குழந்தையிடம் 'பெரிய மனுஷத்தனம்’ வருவதும் சரியல்ல. ஒரு குழந்தையின் மனநிலை என்பது மயிலிறகை விடவும் மென்மையானது. அதைக் கச்சிதமாகக் கையாள்வது இந்தச் சமூகத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு!'' என்று பரிவாக முடிக்கிறார் யாமினி.

குழந்தைகள் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோக்களை நடத்தும் தமிழின் முன்னனி சேனல்களிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, ''எங்கள் சேனலில் அப்படிப்பட்ட விஷயங்களை நாங்கள் ஊக்குவிப்பது இல்லை. நடுவர்கள் சில தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். அப்படிச் செய்வது, சில நேரங்களில் கடினமானதாக இருக்கலாம். ஒருவேளை அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் குழந்தைகள் அழுதாலும் அதை நாங்கள் ஒளிபரப்புவது இல்லை!'' என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.