Published:Updated:

நட்பின் கெமிஸ்ட்ரி!

கி.கார்த்திகேயன்

நட்பின் கெமிஸ்ட்ரி!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

கார்ப்பரேட் உலகில் நண்பர்களைப் பெறுவது எப்படி? 'பிரபல’ நண்பர்களுடன் நட்பைப் பராமரிப்பது எப்படி?  'என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்’ என்று உங்களை உங்கள் நண்பர்கள் கொண்டாட, வழிகாட்டுகிறார் சுஹேல் சேத்.

அனைத்திலும் ஆர்வம் கொள்!

கரன்ஸி சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஒரு நண்பனைச் சம்பாதிப் பது எப்படி? தரமான நண்பர்களைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி? குறுக்கு வழி எல்லாம் கிடையாது... நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது. நிஜத்தில் ஃபேஸ்புக், ஆர்குட்போல 'ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட்’ அனுப்பி ஒரே நாளில் நூற்றுக் கணக்கில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள முடியாது. சொல்லப்போனால், காதலியைவிட நண்பர்கள் அமைவதற்குப் பிரமாதமான கெமிஸ்ட்ரி தேவை. நேர்மை யாக இருந்தால்

நட்பின் கெமிஸ்ட்ரி!

மட்டுமே, தரமான நபர் உங்கள் நண்பர் ஆவார். அது எப்படிச் சாத்தியம்? கொஞ்சம் மாத்தி யோசியுங்கள்... எப்போது எல்லாம் ஒருவரை நீங்கள் உங்கள் நட்பு வளையத்தில் சேர்த்துக் கொள்ள விரும்புவீர்கள்?

ஒருவருடன் எதைப்பற்றியும் நீங்கள் மனம்விட்டுப் பேசலாம் என்று தோன்றி னாலோ, பழகுவதற்கு மிகவும் சுவாரஸ்ய மான அல்லது உற்சாகமான நபராக  இருந்தாலோ, அவருடன் பழகுவதால் நமக்குத் தெரியாத பல புதுப் புது விஷயங் களைத் தெரிந்துகொண்டாலோ, தட்டிக் கொடுத்தோ, ஆறுதல் சொல்லியோ நமது மனநிலை அறிந்து தோள்கொடுத்தாலோ தான் ஒருவர் மீது பிரியமும் நட்பும் பெருகும். இந்தத் தகுதிகளையும் எப்படி வளர்த்துக்கொள்வது? ரொம்பவும் கஷ்டப் பட வேண்டாம். அனைத்திலும் ஆர்வம் கொண்டாலே போதும்!

சிம்பிளாக, அனைத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஒரே வழி... நிறைய வாசியுங்கள். எதையும் வாசியுங்கள். 'மேரி க்ளேர்’ பத்திரிகையில் தீபிகா படுகோனேவின் சமீபத்திய ஹேர்ஸ்டைல்பற்றிய செய்தி முதல், 'எகனாமிஸ்ட்’ பத்திரிகையின் மத்தியக் கிழக்கு நாடுகளில் ஜனநாயகத்தின் வெற்றிக் கட்டுரை அலசல் வரை வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தால்தான், மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். பேச்சு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றால், பேசுவதற்கு உங்க ளிடம் நிறைய விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு வாசிப்பு மட்டுமே உங்களுக்கு வழிகாட்டும்.

காதல் மட்டுமல்ல... நட்பும் எந்த நேரத் தில், எந்த இடத்தில், எப்போது பூக்கும் என்று தெரியாது. அதற்கு இந்த ஹோம் வொர்க் அவசியம்!  

 வாடிக்கையாளர் நண்பராகலாம்...   நண்பன் வாடிக்கையாளராகலாமா?

உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் நண்பராக்கிக்கொள்வது உங்கள் பிசின ஸுக்கு லாபமாக இருக்கும். ஆனால், உங்கள் நண்பனை வாடிக்கையாளர் ஆக்க முயற்சித்தால், அதைப்போலத் தவறு வேறு எதுவும் கிடையாது.

நட்பின் கெமிஸ்ட்ரி!

பார்க் குழும ஹோட்டல்கள் நிர்வாகத் தில் உயர் பதவி வகிக்கும் பிரியா பவுல் என் சகோதரனின் தோழி. எங்களுடைய முதல் விளம்பர நிறுவனத்தைத் துவக்கிய போது தனது 'ஃப்ரெண்ட்ஷிப்’ மூலம் பிரியாவிடம் இருந்து பார்க் ஹோட்டல் களின் விளம்பர கான்ட்ராக்ட்களை வாங்கிவிடலாம் என்று முயன்றான் என் சகோதரன். பின்விளைவு தெரியாமல் நானும் அதை அனுமதித்தேன். அவனும் வாய்விட்டுக் கேட்டுவிட்டான். அப்போ தைக்கு பிரியா எதுவும் சொல்லவில்லை. ஆனால், கான்ட்ராக்ட் கிடைக்கவில்லை.

அதற்கு முன்பு வரை எத்தனை பரபரப் பான மீட்டிங்குகளுக்கு இடையிலும் என் சகோதரனின் அழைப்புக்குப் பதில் சொல்லும் பிரியா, அதற்குப் பின் ஞாயிற் றுக் கிழமைகளில்கூட அவனுடன் பேசு வதற்குத் தயாராக இல்லை. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எங்கள் ஆயுளுக்குமான பாடத்தை பிரியா கற்றுக்கொடுத்தார். நண்பனை வாடிக்கையாளராக யோசிக்கக் கூடாது.

அதேசமயம், உங்கள் வாடிக்கையாளரை நண்பனாக்கிக்கொள்ளலாம்... கொள்ள வேண்டும். இதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிசினஸ் சம்பந்தமான நடவடிக்கைகளில் மிகவும் கச்சிதமாக இருக்க வேண்டும்.

நீங்கள் அவருடன் நட்பாகி, அதன் மூலம் அதிக உரிமையும் நன்மையும் சாதித் துக்கொள்வீர்களோ என்ற எண்ணத்தை வாடிக்கையாளர் மனதில் விதைத்துவிடக் கூடாது. நட்பு தனி, வர்த்தக நட்பு தனி என்பதில் தெளிவாக இருங்கள்!

 ஒவ்வொரு மனிதனும் ஒரு பிராண்டே!

ஒன்றை மட்டும் நினைவில்கொள்ளுங்கள். இங்கு மகாத்மா காந்தி, சச்சின் டெண்டுல் கர், ரஜினிகாந்த் மட்டுமே 'பிராண்ட்’ அல்ல. ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு பிராண்ட்தான்.

உங்களுடைய புத்திசாலித்தனம், மதியூகம், பொது அறிவு, சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறன் ஆகியவைதான் உங்க ளுக்கான மதிப்பை நிர்ணயிக்கும்.

உங்கள் செல்வச் செழிப்பு, அழகு, அந்தஸ்து போன்றவை உங்களைச் சுற்றி ஒரு 'மனிதர்கள் வட்ட’த்தை உருவாக்குமே தவிர,நண்பர்கள் வட்டத்தை அல்ல. அதே சமயம், உங்களைவிட அறிவில் உயர்ந்த நபர்களுடனேயே உங்கள் நட்பு வட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான்

நட்பின் கெமிஸ்ட்ரி!

உங்களை இன்னும் உரமேற்றிக் கொள்ள, தகுதிப்படுத்திக்கொள்ள... தேடித் தேடிப் படிப்பீர்கள். நண்பர் களும் உங்களை நாடி ஓடி வருவார் கள்!

இவ்வளவுக்குப் பிறகும் 'நண்பர் களைச் சம்பாதித்து நான் என்ன செய்யப்போகிறேன்?’ என்றுஉங்களுக் குள் கேள்வி எழுகிறதா?

உலக அழகியான, அனைத்து ஆண்களின் காதலியுமான மர்லின் மன்றோ தனது வாழ்க்கைத் துணை யாகத் தேர்ந்தெடுத்தது சிக்ஸ் பேக் அழகனையோ, மல்டி மில்லியனர் செல்வந்தனையோ அல்ல... அறிவில் சிறந்த ஆர்தர் மில்லர் என்ற நாடக ஆசிரியரை.

அதற்கு மேல் உங்கள் பிரியம் நண்பர்களே!