Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  'கிங்ஃபிஷர் காலண்டர்’ புகழ் நதாலியா, பிரேசிலில் மாடலிங் கொடி நாட்டிய பஞ்சாபி. ஒரு கன்னடப் படத்தில் நடிக்கும் பொண்ணுக்கு தமிழ் சினிமா என்றால் ரொம்பவே இஷ்டமாம். ''அஜீத், விஜய்தான் என் ட்ரீம் பாய்ஸ். அவங்ககூட எப்ப ஜோடி சேர்வோம்னு காத்துட்டு இருக்கேன்!'' என்று பொண்ணு ஓப்பன் ஸ்டேட்மென்ட் விட, கன்னட ஹீரோக்கள் காதில் புகை. தளதளன்னு இருக்காங்கள்ல!  

இன்பாக்ஸ்

•  ''யுவராஜ் சிங்குக்காக நான் விரதம் இருக்கிறேன். அவர் விரைவில் குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன்!'' என்ற கபில்தேவின் ட்வீட்டைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டார் யுவராஜ் சிங். ''பள்ளி நாட்களில் என் இன்ஸ்பி ரேஷன் அவர்தான். அவரே எனக்காக வேண்டிக்கொள்வது என் நம்பிக்கையை இன்னும் அதிகரிக் கிறது!'' என்கிறார் செம சந்தோஷ மாக. சீஸன் டூ சூப்பரா இருக் கட்டும்!  

இன்பாக்ஸ்

•  'விண்ணைத் தாண்டி வருவாயா’வின் இந்தி ரீ-மேக்கான 'ஏக் திவானா தா’ படம், மிகவும்மெதுவாக நகர்கிறது. ஜோடிகளுக்கு இடையே கெமிஸ்ட்ரியே இல்லை!’ என்று கிளம்பிய நெகட்டிவ் விமர்சனங்களால் கௌதம் மேனன் ரொம்பவே அப்செட். ஆனாலும், சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்களாகக் குவியும் பாசிட்டிவ் பாராட்டுகளால், 'லேட் பிக்கப்’பில் படம் ஹிட் ஆகிவிடும் என்று நம்பிக் காத்திருக்கிறார். ஃபீல் பண்ணிப் பாருங்கப்பா!

இன்பாக்ஸ்

•  அநேகமாக குடும்ப அரசியலின் அடுத்த விக்கெட் ஜெனிலியாவாக இருக்கலாம். அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் மருமகளான ஜெனி, ''அரசியலா... ஒய் நாட்? அவரும் மாமாவும் ஓ.கே. சொன்னா எனக்கும் டபுள் ஓ.கே!'' என்கிறார்.  ஜெனிலலிதா!

இன்பாக்ஸ்

•  முன்னாள் காதலர்கள் சல்மானும் கேத்ரீனாவும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கும் 'ஏக் தா டைகர்’ படத்தால், மீண்டும் இருவ ருக்கும் இடையே பாஸ்பரஸ். கியூபாவுக்கு படப்பிடிப்புக்குச்சென்ற இடத்தில் இருவரும் சிக்கனமாக ஒரே அறையில்தான் தங்கினராம். 'சல்மானுக்கும் எனக்கும் எப்பவும் பெஸ்ட் கெமிஸ்ட்ரி உண்டு. அது இந்தப் படத்தில் அடுத்த லெவலைத் தொட்டுவிட்டது!’ என்று மனம் திறந்திருக்கிறார் கேத்ரீனா. ஹிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி!

இன்பாக்ஸ்

•  இப்போதைக்கு நயன்தாராவின் ஒரே கவலை... 'பிரபு’ மட்டுமே! இது 'அவர்’ இல்லை. இது நயன் கையில் பச்சை குத்தியிருக்கும் 'பிரபு’ என்ற எழுத்துக்கள். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை அகற்றலாமா எனக் கவலையில் இருக்கிறார். இப்போதைக்கு வளையல் போட்டு கவர் பண்ணுங்க!    

இன்பாக்ஸ்

•  மம்தா பானர்ஜி  மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார் ப.சிதம்பரம். கொல்கத்தாவில் தான் பங்கேற்ற தேசியப் பயங்கரவாதத் தடுப்பு மையத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளாமல் மம்தா பாய்காட் செய்ததுதான் சாருடைய கோபத்துக்குக் காரணம். 'மாநில உரிமைகளை அபகரிக்க, கொல்லை வாசல் வழி புகுந்து நாட்டாமை செய்யப்பார்க்கிறார் ப.சிதம்பரம்!’ என்பது மம்தாவின் பொருமல். வழக்கம்போல் மௌனம்தான் உள்துறை யாரின் பதில். பளிச்னு பேசிப் பழகுங்க ப.சி!  

இன்பாக்ஸ்

•  ''இதுவே என் வாழ்நாளின் கடைசி இசை நிகழ்ச்சியாக இருக்கக்கூடும். இனி, என் மகள் என் இசையைத் தருவாள்!'' என்று நெகிழ்ச்சியோடு விடைபெற்றார் 92 வயது சிதார் மேஸ்ட்ரோ ரவிஷங்கர். 'ஃபேர்வெல் டு பெங்களூரு’ என்று அண்மையில் பெங்களூரில் ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களின் முன் அவர் நடத்திய பிரமாண்ட இசை நிகழ்ச்சி முழுக்க அத்தனை உணர்ச்சிப் பெருக்கு. ரவிஷங்கரின் கலைக்குக் கால எல்லை இல்லை!  

இன்பாக்ஸ்

•  'பிக் பாஸ்’ புகழ் சன்னி லியோன் அடிக்கடி அதிரடி ஸ்டேட்மென்ட் கொடுப்பார். ''அடல்ட்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதால், நான் ஒன்றும் கால் கேர்ள் அல்ல! தப்பான நோக்கத்துடன் என்னை அணுகும் பலரை நான் கண்டித்து அனுப்பியிருக்கிறேன். 16 வயதில் ஒருவனைக் காதலித்து என்னை இழந்ததைத் தவிர, நான் எந்தத் தவறும் செய்தவளாக என்னை உணரவில்லை!'' என்பது அதில் லேட்டஸ்ட். மனம் திறந்த பேட்டியாக்கும்?  

இன்பாக்ஸ்

•  ''யாருங்க இந்த கிராமர் கண்டுபிடிச்சாங்க? ஃபேஸ்புக் ட்விட்டர்ல எல்லாம் இங்கிலீஷ் எவ்ளோ ஈஸியா இருக்கு. அதையே நாம சிலபஸ் ஆக்கிக்கலாமே!'' என்று புலம்புகிறார் தந்தை ஷாரூக்.  தன் மகன் ஆர்யனுக்கு இங்கிலீஷ் கற்றுக்கொடுக்கும் சிரமத்தைத்தான் இப்படி காமெடி ஆக்கியிருக்கிறார். காமெடியா இருந்தாலும் உண்மையாக்கும்!

இன்பாக்ஸ்

•  சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூங்கிலால் ஆன செல்போனை உருவாக்கி இருக்கிறார் 23 வயது ரைகன். பிரிட்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மாணவரான இவர், தான் உருவாக்கிய மொபை லுக்கு ஆட்ஜீரோ என்று பெயரிட்டு இருக்கிறார். மூங்கில் மொபைல்!