Published:Updated:

ரிவென்ஜ் எடுக்கிறார் ரித்தீஷ்!

ஆர்.சரண்படங்கள் : வீ.நாகமணி

ரிவென்ஜ் எடுக்கிறார் ரித்தீஷ்!

ஆர்.சரண்படங்கள் : வீ.நாகமணி

Published:Updated:
##~##

கோயில் காளையாகத் திரியும் பேச்சிலர்கள் குடும்பஸ்தன் ஆன பிறகு, கோயில் குருக்கள்போலச் சாதுவாகிவிடு வார்களே... அப்படி இருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி!

 ''என்ன சார் ஆச்சு... ஆளையே காணோம்?''

''எல்லோரும் இப்படியே கேட்டா எப்பிடி? நான் ராமநாதபுரம் தொகுதியில பிஸியா இருந்தேண்ணே... அதான் சென்னைப் பக்கம்  அடிக்கடி வர முடியலை.''

''இல்லையே... ராமநாதபுர ஏரியா ரிப்போர்ட்டர்கூட, 'உங்களைத் தொகுதியில முன்ன மாதிரி பார்க்க முடியலை’னு சொன்னாரே?''

''குளிர்காலக் கூட்டத் தொடர், வெயில்காலக் கூட்டத் தொடர்னு டெல்லிக்குப் போயிருந்தேன்... அதான்!''

ரிவென்ஜ் எடுக்கிறார் ரித்தீஷ்!

''இல்லையே... எங்க டெல்லி நிருபர்கூட...'' (சட்டென்று இடைமறிக்கிறார்)

''அண்ணே வேணாம்ணே... சூடம் அணைச்சு சத்தியம் செஞ்சாத்தான் நம்புவீங்களா? சரி... வழக்கம்போல நம்மளை வெச்சு ஏதோ காமெடி பண்றீங்க! மீனவர் பிரச்னைக்காகவும் தொகுதி மேம்பாட்டுக்காகவும் நான் குரல் கொடுத்துக்கிட்டேதான் இருக் கேன். சத்தம் இல்லாம பல நல உதவிகளைத் தொகுதிக்குள் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன். அப்போ எந்த அளவுக்கு பப்ளிசிட்டியை லைக் பண்ணேனோ, இப்ப அப்புடியே ஆப்போசிட்டா மாறிட்டேன்!''

''உங்க தாத்தா சுப.தங்கவேலன்கூட என்ன பிரச்னை... மாத்தி மாத்தித் திட்டிக்கிறீங்க?''

''சண்டைலாம் இல்ல... அவர் பல வருஷமா தொகுதியில நங்கூரம் கணக்கா கெடந்து கட்சியை வளரவிடாமப் பண்ணிப்புட்டாரு! எல்லா போஸ்ட்டிங்கும் அவருக்கு வேண்டப்பட்ட ஆளுங்களுக்கே போட்டுக் கொடுத்துட்டாரு. அதைத் தட்டிக்கேட்டா குத்தமாம். வெட்கத்தைவிட்டுச் சொல்றேன்... அவர் பையனுக்கு எம்.பி. சீட் கொடுக்காம எனக்குக் கொடுத் துட்டாங்கனு நேரா தலைவர்கிட்டயே போய்

ரிவென்ஜ் எடுக்கிறார் ரித்தீஷ்!

என்னை காமெடி பீஸு, அது இதுனு சொல்லி ஆட்டையக் கலைக்கப் பார்த்தாருண்ணே. எலெக்ஷன்லயும்எனக் காக வேலை பார்க்கலை. ஆனாலும், எம்.பி. தேர்தல்ல ரெண்டு லட்சத்துக்குமேல வாக்குகள் வாங்கி ஜெயிச்சேண்ணே! தலைவரே, 'என்னய்யா அந்தப் பையனை காமெடி பீஸுன்னு சொன்னே... இப்பிடி ஜெயிச்சிருக்கான்’னு அவருக்கு பரேடு விட்டதா 'நம்பத் தகுந்த இட’த்துல இருந்து தகவல் வந்துச்சுண்ணே. என்னை யும் என்கூட இருக்கிற பசங்களையும் ரொம்பக் கேவலமா நடத்துறாரு. இதுக்கு மேலயும் பொறுக்க முடியாதுன்னுதான் மாவட்டச் செயலாளர் தேர்தல்ல அவருக் குப் போட்டியா நிக்கப்போறேன். தலைவர் கலைஞருக்கு இங்க நடக்குற எல்லா விஷயங்களும் தெரியும். நல்ல முடிவு எடுப்பாருனு நம்புறேன். இவ்வளவுக்குப் பிறகும்கூட நான் மாவட்டச் செயலாளரா ஜெயிச்ச பிறகு, தாத்தாங்கிற முறைக்கு அவர்கிட்டதான் போய் தன்மையா நின்னு ஆசீர்வாதம் வாங்குவேன். ஏன்னா, நான் நல்லவன்!''

''ஜெயலலிதா ஆட்சிபற்றி என்ன சொல்றீங்க?''

''தலைவரோட பொற்கால ஆட்சிக்கு முன்னால இது கற்கால ஆட்சின்னு ஒரு வரி மட்டும் போட்டுக்கங்க!''

''அதிகம் பேசுனா திரும்ப அரெஸ்ட் பண்ணிடு வாங்கனு பயமா?''

''நான் தப்புப் பண்ணினாத்தானே பயப்படணும்? வாழ்க்கைங்கிறது வட்டம்...  உதய சூரியன் மீண்டும் உதிக்கும்!''

''கடன்ல தவிக்கிறாரு... கூட்டத்தைச் சேர்க் கக்கூடப் பணம் இல்லைனு உங்களைப் பத்தி சொல்றாங்களே?''

''அண்ணே... இப்பத்தான் நான் அரசியல்வாதி. முன்னாடி நான் யாவாரி. அதுவும் ரியல் எஸ்டேட்

ரிவென்ஜ் எடுக்கிறார் ரித்தீஷ்!

யாவாரி. யாவாரத்துல ஏத்தம் இறக்கம் இருக்குறப்போ, கைக் காசுப் புழக்கத்துலயும் அப்படித்தான் இருக்கும். இப்போ மக்கள் சேவையில பரபரப்பா இருக்குறதால ரியல் எஸ்டேட் பிசினஸைக் கவனிக்க முடியலை. ஆனாலும் என்னால முடிஞ்ச மட்டும் உதவி பண்ணிட்டுத்தான் இருக்கேன்!''  

''சினிமா அவதாரம் எல்லாம் அவ்வளவுதானா? உங்க இடத்தை பவர் ஸ்டார்னு ஒருத்தர் வந்து பிடிச்சுட்ட கதை தெரியுமா?''  

'' 'வேட்டைப் புலி’ ஆடியோ ரிலீஸுக்குத் தயார்... மொதல்ல மாவட்டச் செயலாளர் தேர்தல்ல ஜெயிக்கணும். அப்புறந்தேன் ஷூட்டிங். படத்துல நிறைய மெசேஜ் சொல்றேன்... ஈழப் பிரச்னைல ஆரம்பிச்சு முல்லைப் பெரியாறு வரைக்கும் பேசப்போறேன். அநேகமா நம்ம படத்தை கேரளாவுல தடை பண்ணாலும் பண்ணுவாங்க. பரவாயில்லைங்குறேன்... தமிழ்நாட்டுல செஞ்சுரி அடிப்போம்ல!''