Published:Updated:

ஜீபூம்பா மந்திரம்!

கி.கார்த்திகேயன்

ஜீபூம்பா மந்திரம்!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

ரூடால்ஃப் வேலன்டினோ... 1920-களின் அமெரிக்க மௌன சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாயகன். இன்றும் அவரது படங்களுக்கு அலை கடலென ரசிகர்கள் திரண்டு வருவார்கள். தனது 31-வது வயதில் வேலன்டினோ இறந்தபோது, அமெரிக்காவே துயரக் கடலில் மூழ்கியது. நியூயார்க்கில் இருந்து ஹாலிவுட்டுக்கு வேலன்டினோவின் உடல் கொண்டுசெல்லப்பட்டபோது, வழி எங்கும் இருந்த ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று அஞ்சலி செலுத்தினார்கள். ரசிகர்களின் அஞ்சலிக் காக வேலன்டினோவின் சடலம் மூன்று நாட்கள் கிடத்தப்பட்டு இருந்தது. அஞ்சலியின்போது வேலன்டினோவின் சவப் பெட்டியைச் சராசரியாக நிமிடத்துக்கு 150 பேர் கடந்துசென்றார்கள். அஞ்சலிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிய பிறகு, எண்ணுவதைக் கைவிட்டார்கள்.

 ஒரு சாதாரண தோட்டக்காரனின் மகனாகப் பிறந்து, நடிகராக மறைந்த வேலன்டினோ, திரையில் ஒரு வார்த்தைகூடப் பேசியது இல்லை. முழுக்க முழுக்கத் தன் கண்களால் மட்டுமே உணர்ச்சிகளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜீபூம்பா மந்திரம்!

வெளிப்படுத்திய வேலன்டினோ, தனது 'ரொமான்டிக் பெர்சனாலிட்டி’ மூலம் மட்டுமே அத்தனை லட்சம் இதயங்களை வென்றார். ஒரு நடிகர் மட்டும்தான் 'ரொமான்டிக்’ ஆக இருக்க வேண்டும் என்பது இல்லை. நாம் ஒவ்வொருவரும் ரொமான்டிக் ஆக இருப்பது அவசியமே. ஏனெனில், நம்மைச் சுற்றிலும் இருக்கும் எந்த மனிதனும் ஏங்குவது காதலுக்காக மட்டுமே!

- 'ப்ரிங் அவுட் தி மேஜிக் இன் யுவர் மைண்ட்’ (Bring Out The Magic In Your Mind)’ புத்தகத்தில் இப்படிச் சொல்கிறார் அல் கொரன். அமெரிக்காவின் பிரபல மேஜிக் நிபுணரான கொரன், நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் எப்படிக் கட்டுப்படுத்தி சாகசங்களைச் சாதிக்க முடியும் என்பதை அனுபவ உதாரணங்களோடு இங்கு பகிர்ந்துகொள்கிறார்...

நேர மந்திரம்!

ரு நிமிடத்தின் மதிப்பு தெரியுமா உங்களுக்கு? இந்தக் கேள்வியின் வீரியம் புரியவில்லையா உங்களுக்கு? ஓ.கே. நீங்கள் விரலில் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம் காணாமல்போனால், எப்படிப் பதறுவீர் கள்? ஆங்... அந்தப் பதற்றத்தையும் மிஞ்சு வதாக இருக்க வேண்டும் உங்களின் ஒரு நிமிடம் வீணாகக் கழிந்தால்! ஆம் நண்பர் களே... இந்த உலகம் தோன்றியது முதல் சொல்லப்படும் கருத்துதான்... இந்த உலகத் தின் கடைசி நாள் வரையிலும் சொல்லப் படவிருக்கும் கருத்தும்கூட!

என் நண்பரின் குளியலறையை ஒருமுறை உபயோகிக்க நேர்ந்தது. அங்கு ஷவருக்கு எதிர்ப்புறம் உள்ள சுவரில் அவர் ஓர் அட்டவணையை ஒட்டியிருந்தார். அதில் திங்கள் முதல் சனிக் கிழமை வரை அவர் அணிய வேண்டிய ஆடைகளின் 'காம்பினேஷன்’ குறிக்கப்பட்டு இருந்தது. அவரிடம் கேட்டதற்கு, 'குளித்து முடித்து ஈர உடம்புடன் எந்த ஆடையை உடுத்துவது என்ற குழப்பத்தில் துணிகளை மேலும் கீழும் விசிறி அடிப்பதிலேயே தினமும் ஐந்து நிமிடங்கள் செலவாகின்றன. குளிக்கும்போது ஷவருக்கு அடியில் நிற்கும் நேரத்தில் அன்றைய தினம் அணிய வேண்டிய ஆடை எது என்று முடிவெடுத்துவிடுவேன். இப்படி ஐந்தைந்து நிமிடங்களாக ஒரு நாளில் எப்படியும் ஒரு மணி நேரத்தைச் சேமித்துவிடுவேன். அந்த ஒரு மணி நேரம் எனக்கே எனக்குச் சொந்தம். நான்ஆசைப் பட்ட, விருப்பப்பட்ட காரியங்களைச் செய்துகொள்வேன்!’ என்றார்.

ஜீபூம்பா மந்திரம்!

இன்னும் மூன்று மாதங்களில் உலகம் நிச்சயம் அழிந்துவிடும் என்றால், இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படிச் செலவழிப்பீர்கள் என்று யோசியுங்கள். அப்படியே இப்போதும் உங்கள் ஒவ்வொரு நாளையும் திட்டமிடுங்கள். ஒரு நிமிடம் சேமிப்பு என்பது உங்கள் ஆயுளில் ஒரு நிமிடம் அதிகம் என்று அர்த்தம். ஆயுளை அர்த்தம் உள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்!

மாற்றத்தின் மந்திரம்!

ங்கில மொழி ஏன் உலகம் முழுக்கப் பரவிப் பிரபலம் அடைந்திருக்கிறது தெரியுமா? அது தனக்குள் மாற்றத்தை அனுமதித்தது. மைக்கேல் ஜாக்சன் ஏன் தனது இறுதிக் காலம் வரை ரசிகர்களின் அபிமானம் பெற்றவராக இருந்தார் தெரியுமா? அவர் தனது ஒவ்வோர் இசை நிகழ்ச்சியிலும் ஏதேனும் மாற்றத்தை அறிமுகப்படுத்தியபடியே இருந்தார்!

உங்களின் ஒவ்வொரு நாளும் ஏன் உங்களுக்குச் சலிப்பூட்டுகிறது தெரியுமா? அனுதினமும் செய்த காரியங்களையே செய்துகொண்டு இருப்பதுதான்!

தி

ஜீபூம்பா மந்திரம்!

னமும் செய்தித்தாளை முதல் பக்கத்தில் இருந்து படித்தால், ஒரு நாள் கடைசிப் பக்கத்தில் இருந்து படித்துப்பாருங்கள். அலுவலகத்துக்குத் தினமும் செல்லும் பாதையைத் தவிர்த்துப் புதிய பாதை ஒன்றில் பயணித்துப்பாருங்கள். ஞாயிற்றுக் கிழமை முழுக்க வீட்டிலேயே அடைந்துகிடக்காமல் அது வரை செல்லாத ஏதேனும் ஓர் இடத்துக்குச் சென்று வாருங்கள்.

இவை எல்லாம் உங்களுக்கு வெளியே நிகழும் சின்னச் சின்ன மாற்றங்கள். உங்களுக்கு உள்ளும் மாற்றத்தை நிகழ்த்துவது அவசியம். நீங்கள் சிந்திக்கும் விதம், ஒரு பிரச்னைக்குத் தீர்வினை யோசிக்கும் விதம் என உங்களுக்குள் மாற்றத்தை நிகழ்த்தினால், சாதனையாளர் வரிசையில் நீங்களும் இடம்பிடிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism