Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

•  சச்சினின் சமீப அவுட் ஆஃப் ஃபார்ம் குறித்துப் புதுசாகப் பகீர்க் காரணம் சொல்கிறார்கள். மும்பையில் பல கோடிகளை வாரியிறைத்துக் கட்டிய புது வீட்டின் வாஸ்து சரியில்லாததால்தான் சச்சினுக்கு இந்தச் சங்கடங்களாம். வீட்டில் வாஸ்து கரெக்ஷன்களை மேற்கொள்ளச் சொல்லி அறிவுரைகள் சொல்கிறார்களாம் அவருடைய உறவினர்கள். விட்டா, கிரிக்கெட் மைதானத்தையே சதுரமாக்கச் சொல்வாங்கப்பா!

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'காங்கிரஸ் வேட்பாளர் உசேன் அகமது அன்சாரி, பிரசாரக் கூட்டத்தில் எனக்கு மாலை போட்டபோது சில்மிஷம் செய்துவிட்டார்’ என்ற புகார் மூலம் மீண்டும் லைம் லைட்டில் நக்மா. 'கூட்ட நெரிசலில் என் கை எதேச்சையாக அவர் மீது பட்டு விட்டது!’ என அகமது மறுக்க, அதை ஏற்றுக்கொள்ளாமல் காவல் நிலையப் புகார் வரை சென்றுவிட்டார் நக்மா. இது நெகட்டிவ் பிரசாரமால்ல இருக்கு!

இன்பாக்ஸ்

• 'காதலில் சொதப்புவது எப்படி?’ தெலுங்கில் 'லவ் ஃபெயிலியர்’ ஆக... அதிரிபுதிரி ஹிட் அடித்ததில் சித்தார்த்துக்கு ஏக குஷி. இப்போது தமிழில் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மணி என்பவர் இயக்கும் 'தேசிய நெடுஞ்சாலை’ படத்தில் நடிக்கிறார். படத்துக்கு திரைக்கதை, வசனம் வெற்றிமாறனே. நல்லவன்!

இன்பாக்ஸ்

•  பெங்களூரு நீதிமன்ற விசாரணையில் நாளன்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிக்கிறாராம் சசிகலா. மொத்தம் உள்ள 1,384 கேள்விகளுக்கும் முழுமையாகப் பதில் அளிக்க வாரக்கணக்கில் நீளும் என்பதால், அங்கேயே வீடு ஒன்றை வாடகைக்குத் தேடுகிறார்களாம். மல்லேஸ்வரம், ராஜாஜி நகர், ஜெய நகர் ஏரியாதான் இலக்கு. சமையலுக்கும் பிற வேலைகளுக்கும் மன்னார்குடியில் இருந்து மூன்று பேரை பார்சல் செய்து களம் இறக்கி இருக்கிறார் களாம். நீதிமன்ற அத்தியாயம் முடிந்ததும் கார்டனிலும் கண்கள் பனித்து இதயம் இனிக்குமோ?!

இன்பாக்ஸ்

• 1985-ல் இந்தியில் வெளியான 'ராம் தேரி கங்கா மெய்லி’ என்ற படத்தின் மூலம் நட்சத்

##~##
திர அந்தஸ்து பெற்றவர் ஹீரோயின் மந்தாகினி. தாவூத் இப்ராஹிமின் ரகசியக் காதலியாக அறியப்பட்ட இவரது வாழ்க்கை சினிமாவாகிறது. 'மந்தாகினி’ கேரக்டரில் நடிக்க கரீனா கபூர், கேத்ரீனா கைஃப், வித்யா பாலன் என மும்முனைப் போட்டி. இதில் 'தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் பாத்திரத் தில் நடித்துவிட்டதால், தொடர்ந்து உடனே நடிகையாக நடிக்க விரும்பவில்லை என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார் வித்யா. இப்போது கரீனா மற்றும் கேத்ரீனா இடையே ஊசலாடுது மந்தாகினி ஊஞ்சல்.
லேடி தாதா!

• நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அமீர் கான் போலீஸ் கெட்டப்பில் நடிக்கும் 'தலாஷ்’ படம், சல்மான் போலீஸாக நடித்த 'டபாங்’ பட ரெக்கார்டை முறியடிக் குமா என்பதே இப்போதைய பாலிவுட் பரபரப்பு! கார் வாடிக்கையாளர்களைக் கவரும் கால் கேர்ளாக கரீனா கபூர் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அமீருக்கு ஜோடி ராணி முகர்ஜி. சைக்கோ த்ரில்லர் படமான இது குற்றப் புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஒருவரின் நிஜக் கதை என்கிறார் கள். காக்க காக்க!

• முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர் களைக் கொன்ற இலங்கை ராணுவத்தின் மீது தொடங்கவிருக்கும் ஐ.நா. விசாரணையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. அதனால்தான், 'ராஜீவ் காந்தியைக் கொன்றது அமெரிக்காதான்!’ என்றெல்லாம் பரபரப்புக்கு முயற்சிக்கிறது இலங்கை. இது அமெரிக்காவை மேலும் வெறுப்பேற்ற, இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு மற்ற நாடுகளின் ஆதரவையும் திரட்டிவருகிறது அமெரிக்கா. இந்நிலையில், நெல்சன் மண்டேலா தலைமையிலான 'தி எல்டர்ஸ்’ அமைப்பும் இலங்கைக்கு எதிரான பிரசாரத்தில் இறங்க, தூக்கமின்றித் தவிக்கிறார் ராஜபக்ஷே. வினை விதைத்தவன்...?!

•  கிங்ஃபிஷர் விமான சேவை நஷ்டத்தால் ரொம்பவே நொந்துபோயிருக்கிறார் விஜய் மல்லையா. சிக்கல்களுக்குப் பரிகாரமாக ஜோசியரின் அறிவுரைப்படி மகன் சித்தார்த் மல்லையாவுக்குக் கல்யாணம் செய்துவைக்கப் போகிறாராம். அதன் ஆரம்பக்கட்டமாக கோடிகளைக் கொட்டித் தனது பெங்களூரு இல்லத்துக்கு பெயின்டிங் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் விஜய் மல்லையா. கல்யாணத்துக்கு இந்தியாவே களைகட்டுமே!  

இன்பாக்ஸ்

•  இப்போது எந்த நிகழ்ச்சியாக இருந் தாலும் குட்டிக் கதை சொல்லி அசத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. நடைபெறுகிற நிகழ்ச்சி, நடைபெறும் இடத்தைப் பொறுத்து இந்தக் கதைகள் மாறும். எதிர்க்கட்சிகளைக் கிண்டல் அடிக்கும் எள்ளல் தொனியும் அந்தக் கதையில் நிச்சயம் இருக்கும். ஹிட்டு, குட்டு, ஷொட்டு எல்லாமே கலந்திருக்கும் இந்தக் கதை களை ஜெயலலிதாவுக்குத் தேர்வுசெய்து கொடுப்பவர் முதல்வரின் செயலாளரான வெங்கட் ரமணன் ஐ.ஏ.எஸ். நடத்துங்க... நடத்துங்க!

•  அனட்டா ஃப்ளார்சி... உலகின் பலசாலிப் பெண்மணி பட்டத்தை நான்கு முறை வென்றிருப்பவர். அனட்டாவின் சமீபத்திய சாதனை ஒரே நிமிடத்தில் ஐந்து உறுதியான கடாய்களை உடைத்தது. பளு தூக்கும் வீராங்கனையான அனட்டா, எடை அதிகமான 12 ஆண்களைத் தலைக்கு மேல் தூக்கிய சாதனைக்கும் சொந்தக்காரர். இவரை யாரும் 'ஈவ்டீஸ்’ பண்ணியிருக்க மாட்டார்கள்!  

•  'ஆலையா’... இதுதான் ஐஸ்வர்யா-அபிஷேக் குழந்தையின் பெயர். அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா என மூவரின் பெயர் துவங்கும் 'ஏ’ ராசியில் அமைந்த பெயராம். எ... ஏஏஏ!  

•  சச்சினுக்கு அடித்தபடியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்திருக்கும் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஒரு நாள் கிரிக்கெட்டுக்குப் பிரியாவிடை கொடுத்திருக்கிறார். 'அவுட் ஆஃப் ஃபார்ம்’ காரணமாக அணியில் இருந்து வம்படியாக வெளியேற்றப்பட்டு இருக்கும் ரிக்கி, ஆஸ்திரேலிய அணி மூன்று உலகக் கோப்பைகள் வெல்லக் காரணமாக இருந்தவர். 'ரிக்கிக்கு இது சரியான வழியனுப்புதல் இல்லை!’ என அவரது ரசிகர்கள் குமுற, ''எனது இரண்டு மகள்களுக்குப் பொறுப் பான அப்பாவாக இன்னும் அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுவேன்!'' என்று புன்னகைக்கிறார் ரிக்கி. சச்சினுக்கு இதில் ஏதோ செய்தி இருக்கிற மாதிரிஇருக்கே!  

•  இந்தி சினிமா பட்ஜெட்டை விரைவில் விஞ்சிவிடும்போல விளம்பரப் பட உலகம். இந்தியா முழுக்க ஒலிபரப்பாக இருக்கும் விளம்பரப் படம் ஒன்றில் நடிப்பதற்கு 8 மணி நேர கால்ஷீட்டுக்கு

இன்பாக்ஸ்

8 கோடி சம்பளம் வாங்கி உச்சம் தொட்டிருக்கிறார் சல்மான் கான். நிமிஷத்துக்கு  

இன்பாக்ஸ்

1.7 லட்சம் சம்பளமா?  

இன்பாக்ஸ்

•  'பகவதி’ படத்துக்குப் பிறகு 'துப்பாக்கி’ படத்திலும் விஜய்க்குத் தம்பியாக நடிக்கிறார் ஜெய். தனக்குத் தம்பியாக நடிக்க ஜெய்தான் கச்சிதமான சாய்ஸ் என்பது விஜய்யின் எண்ணமாம். உருவாகிறான் ஓர் உடன்பிறவா சகோதரன்!

•  காதல் காம்பியர் ஜோடி 'ஈரோடு’ மகேஷ் - ஸ்ரீதேவி தம்பதியின் வீட்டுக்கு லட்சுமி வந்தாச்சு. மூன்றரை கிலோவில் அழகும் ஆரோக்கியமுமாகப் பிறந்திருக்கும் பெண்ணுக்கு நல்ல தமிழ்ப் பெயருக்கான வேட்டையில் இருக்கிறார் மகேஷ். தாலாட்டு கத்துக்கங்க மக்களே!

இன்பாக்ஸ்

• கோலி-டோலிவுட்களில் பரபரப்பாக இருந்தாலும் சொந்த மொழியான மலையாளத்தில் ஹிட் அடிக்க முடியவில்லையே என்பது அமலா பாலின் நீண்ட நாள் கவலை. அதற்கு 'டைமண்ட் நெக்லஸ்’ மூலம் நிவாரணம் கிடைக்கவிருக்கிறது. 'லால் ஜோஷ் இயக்கும் அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் தனக்கு நிச்சயம் விருது கிடைக்கும்!’ என்று இப்போதே உருகி மருகுகிறார் அமலா. சீக்கிரம் நெக்லஸை மாட்டுங்க!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism