Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

பால் காலி!

நானே கேள்வி... நானே பதில்!

பால் காலி!

Published:Updated:

'' 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை’ என்கிறாரே தா.பாண்டியன்?''

''ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றினால்கூடப் பரவாயில்லை... 'பால் காலி’ என்று போர்டு மாட்டுகிறாரே பாண்டியன்?''

- அமுதா, கொடைக்கானல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''யாருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வது சிரமம்?''

''உண்மை நிறைந்த கேள்விகளுக்கு. குழந்தைகள் உண்மையானவர்கள் என்ப தால், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது ரொம்பவே சிரமம். சமீபத்தில் நானும் என் நான்கு வயது மகளும் பேருந்தில் மதுரைக்குச் சென்றுகொண்டு இருந்தோம். வழி நெடுக, ஜெயலலிதாவின் பிறந்த நாளையட்டி பிரமாண்ட ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. உடனே என் மகள், 'சி.எம். இங்க வரப்போறாங்களா?’ என்று கேட்டாள். 'இல்லையே’ என்றேன். 'அப்படின்னா, இதெல்லாம் அவங்க பார்க்கிறதுக்கு சான்ஸே இல்லைல்ல. அப்புறம் எதுக்கு வெச்சிருக்காங்க?’ என்று கேட்டாள்.என்ன பதில் சொல்வது, நீங்களே சொல்லுங்கள்?''

- சியாமளாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

நானே கேள்வி... நானே பதில்!

'' 'கையில் வைத்திருக்கும் குறிப்புகளைப் பார்த்து சசிகலா பதில் சொல்லக் கூடாது’ என்கிறாரே பெங்களூரு கோர்ட் நீதிபதி?''

''நல்ல வேளை... அவர் தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷனராக இல்லை. பிறகு, ஜெயலலிதாவால் தேர்தல் பிரசாரமே செய்ய முடியாதே!''

- கே.வள்ளுவன், கும்பகோணம்.

''உங்களைச் சமீப காலமாகக் குடையும் கேள்வி எது?''

''இந்த நாராயணசாமி இருக்காரே, அவர் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர். ஆனால், அவர் நாடாளுமன்றம் தொடர்பாக எந்த விவகாரத்தையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. கூடங்குளம் பிரச்னைபற்றித்தான் நாள் தவறாமல் பேட்டி கொடுக்கிறார். ஒருவேளை அவர் கூடங்குளம் விவகாரத் துறை அமைச்சரோ?!''

- மா.வாசுகி, சேலம்-8.

'' 'இவர் இப்படி இருக்கிறதுக்குப் பதிலா, இப்படி ஆகி இருக்கலாமே’ என்று சிலரைப் பார்த்தால் தெரியுமே. அப்படி உங்களுக்கு யாரையாவது பார்த்துத் தோன்றியிருக்கிறதா?''

''ராமதாஸ். கருணாநிதி ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி என்று பல ஆட்சிகளுக்கு 'வைரஸ் பிரின்ஸ்பல்’ போல மிகக்குறைந்த மதிப்பெண்களே வழங்கும் இவர்,டாக்டர் ஆனதற்குப் பதில் வாத்தியார் ஆகியிருக் கலாமோ என்று தோன்றும்?!''

- சித்திரவேலு, கருப்பம்புலம்.

''காங்கிரஸுக்குத் தமிழகத்தில் எதிர்காலம் உண்டா?''

''ஒருகாலத்தில் 'கப்பலோட்டிய தமிழன்’ இருந்த காங்கிரஸ், இப்போது 'படகு ஓட்டிய தமிழன்’கூட இல்லாதவாறு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும்போது, காங்கிரஸுக்கு எங்கே இருக்கும் எதிர்காலம்?''

- எஸ்.செழியன், திருவாரூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism