Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• தனது அடுத்த படத்துக்கு லொகேஷன் பார்க்க, 'டைட்டானிக்’, 'அவதார்’ இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் செல்லவிருக்கும் ஸ்பாட்... பூமியின் ஆழமான பகுதியான பசிஃபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் மெரியான ட்ரென்ச் என்ற கடல் பகுதி. மனிதன் செல்லக் கூடிய உலகின் மிக ஆழமான கடல் பிரதேசம் இதுதான். சுமார் ஆறு மைல்கள் ஆழம் உடைய இந்தப் பகுதியில் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக மூழ்கடித்துவிடலாம். இந்தப் பயணத்துக்காக மிகக் குட்டியான நீர்மூழ்கிப் படகை உருவாக்கி, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மேற்கொண்டுவருகிறார் ஜேம்ஸ். படத்துக்கு எப்படி எல்லாம் பில்ட்-அப் ஏத்துறாங்கப்பா?

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  தேசிய விருது வென்ற குஷியில் இருக்கும் வித்யா பாலனுக்குக் கூடுதல் சந்தோஷம்... சமீபத்தில் அவர் நடித்து வெளியான 'கஹானி’ படத்தின் விமர்சனங்கள். விறுவிறு சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தில் நிறைமாதக் கர்ப்பிணியாக நடித்திருக்கிறார் வித்யா. கொல்கத்தாவில் தன் கணவரைத் தேடி அலையும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணாகப் படம் முழுவதும் பரிதாப முகம் காட்டி நடித்திருக்கிறார். குட் பிக்சர்!

இன்பாக்ஸ்

•  ஹாலிவுட் பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல், குறும்படங்களில் நடித்துக்கொண்டு இருந்த சார்லி சாப்ளினின் பேத்தி கியரா இப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜ்ஸ்ரீ தயாரிக்கும் இந்திய ஆங்கிலப் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். தாத்தா பேரைக் காப்பாத்துமா!

•  இந்த வார ட்விட்டர் பரபரப்பு, டாபி என்ற நாய்க் குட்டி! வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த மோரிஸ் என்பவரின் நாய் அது. வெளியூர் பயணங்களின்போது இவர் குறிப்பிட்ட அக்கவுன்ட்டில் ஒரு ட்வீட் செய்தால், வீட்டில் இருக்கும் டாபி முன் அலாரம் அடித்து தட்டில் உணவு விழுமாறு செட் செய்திருக்கிறார். 'நாய்க் குட்டியைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்கப்பா!’ என்று ட்வீட்டர் நண்பர்களிடம் அவர் கோரிக்கைவைக்க, இப்போது டாபி காட்டில் உணவு மழை. டாபிதான் இப்போ ட்வீட்டர் டாபிக்!

இன்பாக்ஸ்

•  கேரளத்தில் நடைபெறும் ஃபேஷன் ஷோ ஒன்றில் பத்து நிமிடம் பூனை நடை நடக்க, கேத்ரீனா கைஃப் பெற்றிருக்கும் தொகை பத்து கோடி ரூபாயாம்! நடையா... அது நடையா... ஒரு நாடகமன்றோ நடக்குது!

இன்பாக்ஸ்

• 'ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தில் ஹீரோயின் ஃப்ரீடா பிண்டோவின் சிறு வயது கேரக்டரில் நடித்த தன்வி லோன்கர் இப்போது 'காதல் தீவு’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ப்ளஸ் ஒன் மாணவியான தன்விக்கும் ரஜினியுடன் நடிக்கவே ஆசையாம். அறிமுக ஹீரோ யின்கள் இந்தப் பதில் சொல்லத் தடை போடுங்க மக்களே!

இன்பாக்ஸ்

• ஓய்வு முடிவை அறிவிக்கும்போது ராகுல் டிராவிட்டுடன் வந்திருந்த அவரது மகன் சமித் குட்டி பேட், டென்னிஸ் பந்துடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தான். ஏழு வயது சமித் மூன்று வயதிலேயே கிரிக்கெட் பேட்டைக் கையில் பிடிக்கத் தொடங்கிவிட்டானாம். அப்பாவின் ராசியான பெங்களூரு மைதானத்தில் இருந்தே பயிற்சியைத் தொடங்கி இருக்கிறார் ஜூனியர். அப்பா கட்டின சுவரை இன்னும் ஸ்ட்ராங் ஆக்குடா கண்ணு!

இன்பாக்ஸ்

• சுஜாதாவின் இடத்தை நிரப்ப இரட்டை எழுத்தாளர்களான சுபாவோடு கை கோத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இவர்களின் கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் ஹீரோவுக்கான சாய்ஸில் இருப்பவர்கள் சூர்யாவும் விக்ரமும். ரெண்டு பேரையும் பிடிச்சுப் போடுங்கப்பா!

இன்பாக்ஸ்

• பள்ளிப் பருவக் கன்னுக்குட்டிக் காதல், கல்லூரிக் கால இச்சைக் காதல், அலுவலகச் சூழலில் வரும் பக்குவக் காதல்... இந்த மூன்று நிலைகளிலும் ஒரே காதல் தொடர்வதுதான் '3’ படத்தின் கதையாம்! பள்ளிக்கூட எபிசோடுக்கு 30 நிமிடங்கள், கல்லூரி மற்றும் அலுவலக அத்தியாயங்களுக்குத் தலா ஒரு மணி நேரம் என ஸ்லாட் பிரித்துக் கதை பண்ணியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். வொய் திஸ் காதல் வெறி?

• 'மன்மதன்’ எனும் ஆல்பம் மூலம் இலங்கைப் போரில் பாதிக்கப் பட்ட சிறுவர்களின் பராமரிப்பை மேற் கொள்ளும் முயற்சியைத் தொடங்கிஇருக்கிறார் இலங்கை இளைஞர் ஜெதின் கிரிஷ் மாணிக்கம். ஆயிரம் பேரை ஒன்றிணைத்து 'ஆயிரம் கனவுகள், ஒரு லட்சியம்’ என்ற வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நல்ல காரியங்களுக்கான பிள்ளையார் சுழி போடவிருக்கிறார்கள். லட்சியம் நிச்சயம் வெல்லும்!

இன்பாக்ஸ்

•  பிரபுதேவா அடுத்த படத்துக்கான வேலையில் பிஸி. இதில் அவர் இயக்குநர் இல்லை... நடிகர் மட்டுமே! படத் தலைப்பு 'ஏபிசிடி’. அதாவது 'எனிபடி கேன் டான்ஸ்’ (Anybody Can Dance). இந்தியாவில் முதல்முறையாக 3டி-யில் தயாராகும் டான்ஸ் சினிமா இது. 'சோ யு திங் யு கேன் டான்ஸ்’ (So You Think You Can Dance) ரியாலிட்டி ஷோவில் ஜெயித்த லாரென் கோட்லீப்தான் படத்தின் நாயகி. நீங்கதான் அடுத்த நயன்தாராவா?

இன்பாக்ஸ்

•  சீனாவில் மாவோ காலம் தொட்டே அதிபர்களின் மனைவிகள் செய்திகளில் அடிபட மாட்டார்கள். ஆனால், அடுத்த வருடம் சீன அதிபராகவிருக்கும் ஷி ஜின்பிங்கின் மனைவி பென் லியூ யான் இப்போதே சீனாவில் ஏகப் பிரபலம். காரணம், லியூ சீன தேசத்தின் பிரபல பாடகி. சமீபத்திய புத்தாண்டுகள் எல்லாமே சீன மக்களுக்கு லியூவின் குரலோடுதான் பிறந்திருக்கின்றன. 'வொய் திஸ் கொல வெறி’ பாடியிருக்காங்களா?  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism