Published:Updated:

மெளன குரு!

வே.கிருஷ்ணவேணிபடங்கள் : கே.ராஜசேகரன்

மெளன குரு!

வே.கிருஷ்ணவேணிபடங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

வியர் ரவிராம் ஒரு மெட்டல் வொர்க் ஆர்ட்டிஸ்ட். உலோ கங்களைத் தேவைக்கேற்ப வளைத்து நெளித்துச் சிற்பமாக்கும் கலை யில் கில்லாடி. மாநில அளவிலான விருது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன் 30-க் கும் மேற்பட்ட ஓவிய, சிற்பக் கண்காட்சி களில் பங்கெடுத்து இருக்கிறார். இவரது ஓவியங்கள் மற்றும் மெட்டல் வெல்டிங் சிற்பங்கள் 20,000 ரூபாயில் தொடங்கி லட்சத்தைத் தாண்டுகின்றன. இங்கே ஒரு சின்ன பின்குறிப்பு: வாய் பேச இயலாத, செவித்திறன் இல்லாத மாற்றுத் திறனாளி ரவிராம்.

 சிரித்த முகத்தோடு ரவிராம் வரவேற்க, அவரது தந்தை ராமகிருஷ்ணன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார். ''என் அண்ணன் பி.வி.ஜானகிராமன் தமிழகம் அறிந்த சிற்பி. அவர்கிட்ட இருந்துதான் இவனுக்கு இந்தக் கலை ரசனை வந்திருக்கு.   சின்ன வயசுல வெயில்ல பட்டம் விட்டு விளையாடிக்கிட்டு இருந்தவனை என் அண்ணன் கூப்பிட்டுப் பக்கத்துல வெச்சுக்கிட்டு செப்புத்தகட்டுல சிலை வடிக்கச் சொல்லிக்கொடுத்துட்டு இருப்பார். அவரோட ரொம்ப நெருக்கமா இருப்பான். அவர் திடீர்னு இறந்தது அவனை ரொம்பவும் பாதிச்சிருச்சு. ரொம்ப நாள் விரக்தியா இருந்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெளன குரு!

ஒருகட்டத்துக்கு அப்புறம் அவர் வேலை செஞ்ச இடத் துல போய் உட்கார்ந்து இவனா சிற்பங் களைச் செய்யத் தொடங்கினான். மனசுக் குப் பிடிச்ச எதையாச்சும் பார்த்துட்டு வந்தான்னா, அதை உடனே ஓவியமா ஆரம்பிப்பான். இப்படித் தானா உருவான கலைஞன் இவன். தனிமையில் வேலை பண்றதைத்தான் விரும்புவான். இந்த மெட்டல் வொர்க் செய்யும்போதுகூட யாரையும் பக்கத்துல வெச்சுக்க மாட்டான். பல நேரம் சாப்பாடு, தண்ணிகூட இல்லாம வேலையில மும்முரமா இருப்பான். உடலை வருத்திக்கிட்டு ரொம்பவும் சிரத்தை எடுத்து பண்ண வேண்டிய வேலை மெட்டல் வெல்டிங். சிற்பங்களை மடியில, கால் முட்டியில் எல்லாம்வெச்சு வெல்டிங் பண்ணி கை, காலைக் காயமாக்கிக்குவான்.

ஒரு வேலையில இவ்வளவு மெனக்கெட்டாலும் இதுவரைக்கும் தான் செஞ்ச எந்தச் சிற்பத்திலும் அவன் திருப்தி அடைஞ்சதே இல்லை. அடுத்த படைப்பில் முந்தையதைத் தாண்டணும்னு மெனக்கெடுவான். அவனோட முயற்சிகளுக்கு எங்களால முடிஞ்சவரைக்கும் என்ன பண்ண முடியுமோ அதையெல்லாம் பண்றோம்!'' என்று ராமகிருஷ்ணன் பேசிக் கொண்டு இருக்கும்போது, ரவிராம் எதையோ வரைந்துகொண்டு இருந்தார். அது வரை அவர் வரைவதையே அமைதி யாகப் பார்த்துக்கொண்டு இருந்த ரவி ராமின் தாய் பத்மா பேசினார்.

மெளன குரு!

''அவனுக்குக் கடல்தான் எல்லாமே! மனசு கொஞ்சம் சங்கடமா இருந்தாக்கூட மொட்டை மாடியில போய் உட்கார்ந்துக்குவான். அங்கே இருந்து பார்த்தா பீச் நல்லாத் தெரியும். ரொம்ப நேரம் கடலையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பான் அப்பிடியே இறங்கி வந்து விறுவிறுனு எதையாவது வரைய ஆரம்பிச்சுடுவான். என் மகனுக்கு கேட்கப் பேசத்தான் வராதே தவிர... நம்ம உடல்மொழி மூலமாவே என்ன சொல்ல வர்றோம்கிறதைத் தெளிவா புரிஞ்சுப்பான். இவன்கிட்ட இருக்கிற குறைக்கு ஈடு செய்யிற மாதிரிதான் ஆண்டவன் இந்தத் திறமையை இவனுக்குக் கொடுத்து அனுப்பியிருக்கார்னு நினைச்சு மனசை சமாதானப்படுத்திக்குவேன்.

மெளன குரு!

நாங்க இருக்கறப்பவே இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்னு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு பார்த்தோம். அந்தப் பெண்ணும் இவனைப் போலத்தான். அதனால, ரெண்டு பேருக்கும் செட் ஆகிடும்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, என்னமோ தெரியலை... ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்ட பிறகு அவங்களுக்குள்ள கருத்து வேறுபாடு ஏற்பட்டுருச்சு. அதுக்கு அப்புறம் கல்யாணப் பேச்சே எடுக்காதீங்கனு சொல்லிட்டான். ஆனா, எங்க மனசுதான் கெடந்து அடிச்சுக்குது. இவனைப் புரிஞ்சுக்கக் கூடிய ஒரு மனசுக்காக நாங்க காத்துட்டு இருக்கோம்!''-

குரல் கம்ம நிறுத்திக்கொண்டார் பத்மா. தான் வடித்த இயேசு சிலை ஒன்றை நெஞ்சருகே அணைத்துக்கொண்டு சிரிக்கிறார் ரவிராம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism