Published:Updated:

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

Published:Updated:
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

ன்புமிக்க வாசகப் பெருமக்களே...

 'தானே’ புயல் நிவாரணத் திட்டத்துக்காக விகடன் குழுமம் விறுவிறுப்பாகக் களப் பணியாற்றிவருவதை, விகடன் குழும இதழ்கள் வாயிலாகவும் www.vikatan.com/thane வலைதளம் வாயிலாகவும் உங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துவருகிறோம். விகடனோடு கைகோத்து இந்த நிவாரணப் பணிகளுக்கு வாசகர்களாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளித்துவருகிறீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி உங்களிடம் இருந்து எங்களுக்கு வந்திருக்கும் மொத்த நிதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

1,09,25,315. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆன்லைன்/ஆர்.டி.ஜி.எஸ். மூலம் வங்கிக் கணக்கில் நிதியை அனுப்பிய வாசகர்களில் இன்னும் பலர் தங்கள் விவரங்களை அளிக்கவில்லை. அவ்வாறு விவரம் பெறப்படாத வாசகர்கள் அனுப்பியுள்ள தொகை

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

19,96,005.

மேற்கண்ட வாசகர்கள், உடனடியாகத் தங்கள் தொடர்பான விவரங்களைக் கீழே அளித்துள்ள படிவத்தில் நிரப்பி தபால் மூலமோ அல்லது thane@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இதற்கான ரசீதை எங்களிடம் இருந்து பெற்று, 2011-12ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிவிலக்கையும் இதன் மூலம் தாங்கள் பெற முடியும் என்பதை நினைவூட்டுகிறோம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்த வாசகர்களில் சிலர், www.vikatan.com/thane இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கள் பெயர், விவரங்கள் இன்னும் இடம் பெறாதது குறித்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் விசாரித்துவருகிறார்கள். வங்கியில் இருந்து விவரம் பெற்றதும் - அல்லது நிதி அனுப்பிய வாசகர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்ததும் - அவர்களுடைய பெயர் மற்றும் ஊர் விவரங்களும் குறிப்பிட்ட அந்த இணையதள முகவரியில் உள்ள பட்டியலில் இடம்பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அது வரை, நிர்வாகரீதியிலான - தவிர்க்க இயலாத இந்தத் தாமதத்தைப் பொறுத்தருள வேண்டுகிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism