என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

எளிய பெண்களுக்கு சமர்ப்பணம்!

டி.அருள் எழிலன்படம் : வி.செந்தில்குமார்

##~##

வெளியுலகுக்குத் தெரியாமல் கவிதை எழுதிவந்த சல்மாவை 'இவர்தான் கவிஞர் சல்மா!’ என்று முதன்முதலாக அவரது புகைப்படத்துடன் 2001-ம் ஆண்டில் அறிமுகம் செய்துவைத்தது விகடன். 'எனக்கு இரண்டு முகங்கள்’ என்று அந்தக் கட்டுரையில் அறிமுகமான சல்மா, அப்போதுதான் துவரங்குறிச்சி பொன்னம் மப்பட்டி பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இப்போது 11 ஆண்டுகளுக்குப் பின்னர், லண்டனின் 'சேனல் 4’ சல்மா பற்றிய ஓர் ஆவணப்படத்தை வெளியிட இருக்கிறது. சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற பிரிட்டிஷ் ஆவணப்பட இயக்குநரான கிம்லாகினோட்டோ கடந்த மூன்று மாதங் களாக தமிழகம் வந்து இந்தப் படத்தை இயக்கிவருகிறார்.

அவருடன் பேசியதில் இருந்து...

''நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, இயக்குநரானது எல்லாமே லண்டனில்தான். உலகெங்கிலும் உள்ள விதவிதமான மனிதர்களைப் பற்றி இதுவரை சுமார் 17 ஆவணப்படங்களை இயக்கி இருக்கிறேன். இந்தியாவின் மிக முக்கியமான பதிப்பாள ரான ஊர்வசி புட்டாலியாவை ஒருமுறை சந்தித்தபோது, சல்மா எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட 'இரண்டாம்  ஜாமங்களின் கதை’ நூலின் பிரதியைக் கொடுத்தார் அவர். அந்த நூலை வாசித்த வுடனேயே சல்மாவைப் பற்றி ஆவணப்படம் இயக்க முடிவு செய்தேன். அந்த நூலைப் படித்தபோது அதில் நானும் இருந்தேன். அதுபோல சல்மாவின் இந்தப் படத்தைப் பார்க்கும் எவரும் அவர்களை இந்தப் படத்தில் உணர முடியும். அதுதான் இந்தப் படத்தின் சிறப்பு!'' என்கிறார் கிம்லாகினோட்டோ.

எளிய பெண்களுக்கு சமர்ப்பணம்!

'கடந்த 11 ஆண்டுகளில் இந்த வளர்ச்சிக்கு நான் கொடுத்த விலை அதிகம். என் படைப்புக்களில் அந்த வலிகளையும் வேதனைகளையும் காண முடியும். அதுதான் 'சேனல் 4’ வரை என்னைக் கொண்டுசேர்த்து இருக்கிறது. என்னை நம்பி மருங்காபுரியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். அதில் நான் தோற்றுப்போனாலும்கூட எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது அந்த அனுபவம். இப்போது 'சேனல் 4’ தயாரிக்கும் இந்தப் படம், ஓர் எளிய பெண்ணின் கதையாகப் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. இது அனைத்து எளிய பெண்களுக்கும் சமர்ப்பணம்!'' என்று புன்னகைக்கிறார் சல்மா!