என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

பாரதி தம்பிபடங்கள் : சுரேஷ் பாபு

##~##

நாட்டின் ஊழல் விகிதம் ஏறுவதுபோல, இந்திய விவசாயிகளின் தற்கொலைக் கணக்கும் அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடந்த 16 ஆண்டுகளில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் 2.5 லட்சம் பேர். உண்மையில் இவை தற்கொலைகள் அல்ல! இந்திய அரசின் தவறான விவசாயக் கொள்கையால் 'கொலைசெய்யப்பட்டவர்கள்’ இவர்கள்!

 தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட கணக்குப்படி 1995-2010 கால கட்டத்தில் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மாபெரும் பேரழிவில்கூட இவ்வளவு பேர் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. ''விவசாயிகளின் மரணம் என்பது யதேச்சையானது அல்ல. அவர்களை வறுமைக்குள் தள்ளி உயிரைப் போக்கிக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கும் அரசே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்!'' என்று கொதிக்கிறார்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.  

மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் என வட மாநிலங்களில் நிகழ்ந்துவந்த விவசாயிகள் தற்கொலை, இப்போது கர்நாடகம், ஆந்திரம் எனப் பற்றிப் பரவி தமிழகம் வரை எட்டிவிட்டது. தமிழகத்தில் 2008-ல் 500 பேரும் 2009-ல் 1,260 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

''இது பின்தொடர இருக்கும் விபரீதத்துக்கான அபாய எச்சரிக்கை. இன்னும் சில வருடங்களில் தமிழ்நாடு மாபெரும் உணவுப் பஞ்சத்தையும் மோசமான தற்கொலைகளையும் சந்திக்கப்போகிறது'' என எச்சரிக்கிறார் விவசாய வல்லுநர் தூரன் நம்பி. ''ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

1,500 செலவாகிறது. ஆனால், ஒரு குவிண்டால் நெல்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

700 முதல்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

1,100 வரைதான் விலைபோகிறது. கடந்த வருடம்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

6,500-க்கு விற்ற ஒரு குவிண்டால் பருத்தி, இந்த வருடம்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

4,000-க்கு இறங்கிவிட்டது. அதுவும், 'பருத்தி ஏற்றுமதிக்குத் தடை’ என்றவுடன் அது இன்னும் குறைந்து

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

3,000-க்குச் சென்றுவிட்டது. 20 வருடங்களுக்கு முன்பு விற்றதைவிட பருத்தியின் விலை இப்போது குறைவு. ஆனால்,

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

600 விற்ற உரம் இப்போது

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

1,200. கூலி நான்கு மடங்கு ஏறிவிட்டது. அப்புறம் விவசாயி தற்கொலை செய்யாமல் என்ன செய்வான்?'' எனக் காட்டமாகக் கேட்கிறார்.

''அதிர்ச்சி அளிக்கும் ஓர் உண்மையை யாரும் கவனிக்கவில்லை. தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 80 லட்சம் டன். ஆனால், தேவையோ 170 லட்சம் டன். கர்நாடகத்தில் இருந்தும் ஆந்திரத்தில் இருந்தும் அரிசி வரவில்லை என்றால், பாதித் தமிழ்நாடு பட்டினியால் சாக வேண்டியதுதான். விளைநிலங்கள் பிளாட்டுகளாகவும் கல்லூரிகளாகவும் மாறுவது 10 சதவிகிதத்துக்கும் குறைவான பாதிப்புதான். அதிகபட்ச விளைநிலங்கள் தரிசாகக்கிடப்பதுதான் விவசாயத்தின் உண்மையான அபாயம். விவசாயம் செய்து நஷ்டப்படுவதைவிட, நிலம் சும்மா கிடக்கட்டும் எனப் பலரும் விவசாயம் செய்வதையே கைவிட்டுவிட்டனர்!'' என அவர் சொல்லும் உண்மை அதிரவைக்கிறது.  

இன்னொரு புறம், இந்திய விவசாய நிலம் ரசாயன உரங்களால் விஷமாக்கப்பட்டு இருக்கிறது. உப்பைத் தின்றவன் தண்ணீரைத் தாகத்தோடு குடிப்பதைப் போல இந்திய நிலங்கள் ரசாயன உரங்களைத் தின்றுவிட்டு தண்ணீரைப் பெரும் தாகத்துடன் குடிக்கின்றன. ஆனால், அதற்கான நீர்வளம் நம்மிடம் இல்லை. ''குறிப்பாக, தமிழ்நாடு ஒரு 'நீர் முற்றுகை’க்குள் சிக்கியிருக்கிறது!'' என எச்சரிக்கிறார் தமிழக உழவர்கள் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன். ''மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை குறைவுதான். ஆனால், நிலங்களை விற்பது இங்குதான் அதிகம். இதைத்தான் அரசு, 'நகர்மயமாதல்’ எனச் சொல்கிறது. காவிரிப் பாசனப் பரப்பில் கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவிகித விவசாய நிலம் குறைந்திருக்கிறது. இதற்கு அடிப்படையான காரணம், தண்ணீர்ப் பற்றாக்குறை. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என மாநிலத்தின் நீர் ஆதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு இன்று தமிழகம் நீர் முற்றுகைக்குள் இருக்கிறது. நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருப்பதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. ஆனால், அரசோ ஒரு வரம்புக்கு உட்பட்டே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறது. தமிழக அரசு ரேஷன் கடைகளில்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

விநியோகிக்கும் அரிசிகூட தமிழ்நாட்டு அரிசி அல்ல. அது பஞ்சாப், ஒடிஷாவில் விளைவது. மானிய விலையில் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசு மத்தியத் தொகுப்பில் இருந்து அதை வாங்குகிறது. இப்படி தமிழக நெல் விவசாயத்தின் சந்தை மோசமாக அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது!'' எனும் வெங்கட்ராமன், விவசாயிகளின் இடப்பெயர்வுக்கு வேறொரு கோணமும் சொல்கிறார். ''மீண்டும் மீண்டும் நஷ்டத்தையே சந்திக்கும் விவசாயி, வேறு கதியற்ற நிலையில் தற்கொலை செய்துகொள்கிறான் அல்லது நகரங்களை நோக்கி கூலித் தொழிலாளியாகச் செல்கிறான். இன்று பெருநகரங்களில் கட்டட வேலை பார்ப்பவர்களும் உதிரி வேலையாட்களாக இருப்பவர் களும் பெரும்பாலும் விவசாயிகள்தான். இன்னொரு பக்கம் பெரும் பகுதி தலித்து கள்தான் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். உள்ளூர் சாதி இழிவை எதிர்த் துப் போராட முடியாத நிலையில், இடப் பெயர்வுக்கான சிறு சந்தர்ப்பம் வந்தாலும் அதைத் தவறவிடாமல் ஊரைவிட்டு வெளியேறிவிடுகின்றனர்!'' என்கிறார்.  

பாரம்பரியமான விவசாயம் அழிக்கப்படும் அதே சமயம், புதிய பிரச்னைகளும் முளைக்கின்றன. 2000-ம் ஆண்டுகளில் கேரளத்தில் ஐஸ்க்ரீமுக்குப் பயன்படும் 'வெனிலா’ ஒரு கிலோ

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

4,000 விற்றது. எல்லோரும் அதை நோக்கி ஓட, ஓரிரு ஆண்டுகளில் ஒரு கிலோ வெறும்

நீர் முற்றுகையில் தமிழ்நாடு!

80-க்கு இறங்கியது. கடன் கழுத்தை நெரிக்க... 2003-ல் மட்டும் 1,071 கேரள விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். பண்ருட்டியில் வி.ஆர்.ஐ-2. என்ற முந்திரி 'நான்கே வருடங்களில் விளைச்சல்’ என்று விற்பனை செய்யப்பட்டது. அரசாலும் ஊக்குவிக்கப்பட்டது. நான்கு வருட முடிவில் விளைச்சல் எல்லாம் வந்தது. விவசாயிகளும் மகிழ்ந்தார்கள். ஆனால், உள்ளே இருந்த முந்திரிப் பருப்புகள் சவலைப்பிள்ளை கணக்காக சிறியதாக இருந்ததுடன், கொட்டையில் இருந்து பருப்பை உரித்து எடுப்பது பெரும் சிரமமாக இருந்தது. இதனால், பல்லாயிரம் விவசாயிகள் தத்தளிக்கின்றனர்.

இவற்றைச் சரிசெய்ய வேண்டிய அரசோ ஒவ்வொரு பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்குக் கடன் கொடுப்பதை மட்டும்தான் விவசாயத் திட்டமாக அறிவிக்கிறது. இன்னொரு புறம், விவசாயிகளுக்கு  ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, செல்போன், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குகிறது. விவசாயிகள் மீதான அரசின் கரிசனம் இப்படித்தான் இருக்கிறது.

பொதுவாகவே, உலகம் முழுவதும் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்கின்றன. மற்ற நாடுகளில் வேறு வேலை பார்க்க வழியற்ற, சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் மாண்டுபோகின்றனர். இந்தியாவில்தான் பெரும்பான்மைத் தொழிலைச் செய்யும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். எந்த ஒரு தொழிலையும் தொடர்ந்து செய்வதற்கு லாபமும் அதுகுறித்த பெருமிதமும் வேண்டும். ஆனால், இந்திய விவசாயிகள் எவரும் தன் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தைத் தொடர்வதை விரும்பவில்லை.  ஒரு கெட்ட கனவைப் போல அவர்கள் விவசாயத்தை மறக்கவே நினைக்கின்றனர்!