என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• சர்வதேச வில் வித்தை அரங்கில் இந்தியாவின் தங்க மங்கை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிஷா ராணி தத்தா. இவர் குடும்பத்தில் மிகவும் கஷ்டம். வறுமையின் கொடுமை தாங்காமல் தன்னிடம் இருக்கும் வில் வித்தை உபகரணங்களை விற்றுவிட்டார். செய்தி வெளியான பிறகு பரபரப்பாகி, அவருக்கு உதவிக் கரங்கள் நீள்கின்றன. அப்புறம் ஒலிம்பிக்ல என்ன கிடைக்கும்?

இன்பாக்ஸ்

• அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில்

இன்பாக்ஸ்

213 கோடி டேவிட் பெக்காமைப் பின்னுக்குத் தள்ளி,

இன்பாக்ஸ்

224 கோடியுடன் முதல் இடம் பிடித்து இருக்கிறார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி.

இன்பாக்ஸ்

198 கோடியுடன் மூன்றாவது இடம் ரெனால்டோவுக்கு. பார்சிலோனா அணிக்காக 314 போட்டிகளில் விளையாடி, 234 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் சாதனையையும் பாக்கெட் செய்திருக்கிறார் மெஸ்ஸி. இன்னும் உற்சாகமா உதைப்பார்!

இன்பாக்ஸ்

• உலகக் காதலர்களுக்குத் தளம் அமைத்துக்கொடுத்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் காதல் எப்படி இருக்கும்? காதலி பிரிசில்லா சானுடன் பரபரப்பான சாலைகளில் கை பிடித்து நடைபோடுகிறார் உலகின் இளம் பணக்காரரான மார்க். சீன வம்சாவழியைச் சேர்ந்த பிரிசில்லாவைக் கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்துவரும் மார்க், இரண்டு வருடங்களாக 'லிவிங் டுகெதர்’ உறவில் இருக்கிறார். மார்க் - பிரிசில்லாவைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துபவர் யார் தெரியுமா... மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ். லைக்!

• அலகாபாத் நகரத்தின் மோதிலால் நேரு தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பொறியியல் மாணவர் ஒருவருக்கு

இன்பாக்ஸ்

1.34 கோடி சம்பளத்தில் பணி நியமனம் அளித்திருக்கிறது ஃபேஸ்புக். பாதுகாப்பு கருதி அந்த மாணவரைப் பற்றி ரகசியம் காக்கிறார்கள். படிப்பை முடித்தவுடன் கலிஃபோர்னியாவில் இருக்கும் ஃபேஸ்புக் அலுவலகத்தில் வேலையாம். இனி, பையனுக்கு செம பாஸ்புக்!

இன்பாக்ஸ்

• மில்க் பியூட்டி தமன்னாவும் பாலிவுட்டுக்கு டிக்கெட் வாங்கிவிட்டார். 1983-ல் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடிப்பில் ஹிட் அடித்த 'ஹிம்மத்வாலா’ ரீ-மேக்கில் ஸ்ரீதேவி ரோலில் தமன்னா... ஜிதேந்திரா ரோலில் அஜய் தேவ்கன். திரும்பி வருவியா... வர மாட்டியா?

இன்பாக்ஸ்

• ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் தட்டியிருக்கிறார் இந்தியாவின் மேரி கோம். இரண்டு முறை உலக சாம்பியனான சீனாவின் ரென் கேன் கேனுடன் இறுதிப் போட்டியில் ஆக்ரோஷ மாக மோதிய மேரி, 14-8 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். 'குத்து’ப் பாட்டு போட்டுக் கொண்டாடுவோம்!

இன்பாக்ஸ்

• இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றி ரகசியம் என்ன தெரியுமா? ''குழந்தைகள் பிறந்த பிறகு என் வொர்க்கிங் ஸ்டைல் முற்றிலும் மாறிவிட்டது. நள்ளிரவு முழுக்க ஸ்டுடியோவில் இருந்தோ, நீண்ட நேரம் கஷ்டப்பட்டோ நான் இசை அமைப்பது இல்லை. 20 நிமிடங்கள்... அதிகமாகப்போனால் 30 நிமிடங்களில் டியூன் பிடித்துவிடுவேன். சிக்காவிட்டால், கிளம்பிவிடுவேன். முன்புபோல எட்டு மணி நேரம் எல்லாம் ஒரே விஷயத்துக்காக யோசித்துக் கஷ்டப்படுவது இல்லை!'' என்று மென்மையாகப் புன்னகைக்கிறார் ஆஸ்கர் நாயகன். ஓ.கே. ஓ.கே!  

இன்பாக்ஸ்

• சமீப சர்ச்சை எழுத்தாளர் இஸ்ரேலியப் பெண் எழுத்தாளர் சூஸன் நாதன். இங்கிலாந்தில் பிறந்து இப்போது கேரளத்தில் வசிக்கும் இவருடைய 'இஸ்ரேலின் இன்னொரு பக்கம்’ (ஜிலீமீ ளிtலீமீக்ஷீ ஷிவீபீமீ ஷீயீ மிsக்ஷீணீமீறீ) என்ற நூல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. புத்தகத்தின் சில கருத்துகள், தடைசெய்யப்பட்ட 'சிமி’ அமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று கூறி விசா முடியும் முன்னரே அவரை மாநிலத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டது கேரள அரசு. 'மகாத்மா மண்ணில் இன்னும் என்னைக் கொஞ்ச காலம் வாழ அனுமதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றப் படி ஏறினார் 63 வயதான சூஸன். 'ஒருவேளை உளவாளியாக இருப்பாரோ?’ என்ற சந்தேகத்தில் இப்போது அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது அரசு. இந்தியா வில், கோயில்னா பிச்சை... எழுத்தாளர்னா சர்ச்சை!

இன்பாக்ஸ்

• மும்பை 'ஃபெமினா மிஸ் இந்தியா 2012’ அழகிப் போட்டியில் 'மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ பட்டம் தட்டி இருக்கிறார் சென்னைப் பொண்ணு ரோச்செல் மரியா ராவ். பால் வண்ணம், 5.7 அடி உயரம், அழகான அளவுகள் என பிக்சர் பெர்ஃபெக்ட்டாக இருப்பவர் எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியின் மாணவி. 'எஸ்.எஸ்.’ மியூஸிக் பலோமாவின் தங்கை என்பது ரோச்செலின் நேற்றைய அடையாளம். ஒரு வீட்டில் பூத்த இரு மலர்கள்!

இன்பாக்ஸ்

• 'ஃபார்ச்சூன்’ பத்திரிகை வெளியிட்டு இருக்கும், சர்வதேச அளவிலான காலத்தை வென்ற சிறந்த தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் மார்க் ஸக்கர் பெர்க் இடம்பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று உள்ள ஒரே இந்தியர் நாராயணமூர்த்தி. 10-வது இடத்தில் இருக்கிறார். பத்தாது இந்தியர்களே!

• கம்பீரமாக ஓய்வு பெற்றிருக்கிறார் லத்திகா சரண் ஐ.பி.எஸ். கேரள மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த லத்திகா, 2006-ல் சென்னை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். கடந்த 2010-ல் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டபோது, இந்தியாவின் இரண்டாவது பெண் டி.ஜி.பி. மற்றும் தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாட்டில் காவல் துறை சம்பந்தமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார் லத்திகா. வெல்கம் மேடம்!

இன்பாக்ஸ்

• முன்னாள் பஞ்சாப் முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங்குக்கு சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் செமத்தியான அடி. ஆனாலும், மாநிலத்தில் விருந்து, கொண்டாட்டம் என அமர்க் களப்படுத்தி இருக்கிறார் அமரீந்தர். காரணம் விநோதமானது. அமரீந்தர் சிங்கின் பாட்டியாலா ராஜ குடும்ப வாரிசுகளின் சராசரி வயசு 44 தானாம். அந்தச் சாதனையை உடைத்து 70-வது பிறந்த நாளை எட்டியிருப்பதால், ராஜ குடும்பத்தினர் தோல்வி மறந்து தோள் தூக்கிக் கொண்டாடி இருக்கிறார்கள். காங்கிரஸ்லதான் இப்படி எல்லாம் நடக்கும்!