Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

நீங்கள் படித்த பள்ளிக்கூடத்துக்கு மகாத்மா காந்தி வந்திருக்கிறாரா? லால்பகதூர் சாஸ்திரி வந்திருக்கிறாரா? வினோபா பாவே அல்லது நேரு வந்துள்ளனரா? காமராஜர் அல்லது கக்கன் வந்தது உண்டா? இதில் யாராவது ஒருவர் வந்திருக்கலாம். ஆனால், இவர்களும் இவர்களைப் போன்ற தலைவர்களும் காலடித் தடம் பதித்த பள்ளி ஒன்று சிதம்பரம் பகுதியில் இருக்கிறது. அது.... 'சென்னை அரசாங்க நந்தனார் மாணவர் உயர்நிலைப் பள்ளி’! சுருக்கமாக, நெருக்கமாக எல்லார்க்கும் அது 'நந்தனார் பள்ளி’!

 உண்மையான பக்தி இருக்குமானால், அதற்கு எந்தத் தடையும் இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக, நந்தி விலகி நந்தனாருக்கு நடராஜர் காட்சி தந்த இடம் சிதம்பரம். கலைக் கோயிலாக நடராஜர் சந்நிதியும் அறிவுக் கோயிலாக நந்தனார் பள்ளியும் இருக்கின்றன. 2016-ல் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் பெருமைகொண்ட பள்ளியைவிட, அதன் விடுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

சுவாமி சகஜானந்தர் என்று அழைக்கப்படும் மனிதப் புனித ரால் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியும் விடுதியும் தீண்டத்தகாதவர்கள் என்று தள்ளிவைக்கப்பட்ட சமூக மக்களின் கல்விக் கண்களைத் திறப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்டவை. 'சிதம்பரம் வருவேன். நந்தனார் கல்விக் கழகத் தில்தான் தங்குவேன்’ என்று காந்தி வாக்குறுதி  அளித்து வந்து தங்கிய இடம் இது. அதன் பிறகு, அரசு ஆதரவுடன் இது பெரும் நிறுவனமாக மாறியது. தங்கராஜ், ரத்தினசாமி போன்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகழ்பெற்ற இதய நோய் நிபுணரான டாக்டர் சங்கரன் உள்ளிட்ட மருத்துவர்களும் இங்கு வளர்ந்த வர்கள். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இங்கு படிக் கிறார்கள். இதனுடைய விடுதியே பள்ளி

'தானே' துயர் துடைத்தோம்!

வளாகம்போலப் பரந்து விரிந்திருக்கிறது!

விகடன் 'தானே’ துயர் துடைப்புத் திட்டத்தின் கீழ் நடுத்திட்டு, தியாகவல்லி, வசனங்குப்பம், புதுநகர், பத்திரக்கோட்டை, பாலூர் எனப் பல்வேறு கிராமங்களில் நமது பணிகள் நடந்துவருவதை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சி யர் ராஜேந்திர ரத்னூ நம்மிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ''மிகமிக அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு இந்தப் பகுதியில் நம்பிக்கை தரும் விடுதியாக நந்தனார் விடுதி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியின் குடும்பத்துப் பிள்ளைகள்

ஏராளமானோர் இங்கு படிக்கிறார்கள். பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு மாணவ மாணவியர் தங்கியிருக்கும் விடுதி அறை களுக்கு சோலார் விளக்குகளை நீங்கள் ஏற்பாடு செய்துகொடுத்தால், நூற்றுக் கணக்கான பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஒளி ஏற்றியதாக ஆகும்'' என்பதே ஆட்சியரின் ஆசை!

லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதரவுடன் இத்துயர் துடைப்புப் பணியைத் தொடங்கி இருப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோள் கொடுப்பதற்குத்தானே! இதனால், உடனடியாக நமது அணி சிதம்பரம் நந்தனர் பள்ளி விடுதிக்குச் சென்றது. மாவட்ட ஆட்சியரே வந்து நம்மை அழைத்துச் சென்றார். மின் பயன்பாட்டுத் தேவையும் அதிகமாகி, மின் வெட்டும் அதிகமாகி... அது அடித்தள மக்களின் படிப்புக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதால், உடனடியாகக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. ஆண்கள் விடுதியின் 14 அறைகளுக்கும் பெண்கள் விடுதியின் 14 அறைகளுக்கும் இந்த சோலார் விளக்குகள் உடனடியாகப் பொருத்தப் பட்டன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் கள் மட்டும் இந்த அறைகளில் தங்கவைக்கப்பட்டனர். கடந்த வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

'தானே' துயர் துடைத்தோம்!

''என் பேரு வி.லெனின். எங்க அப்பா பண்ருட்டியில் விவசாயம் பார்க்கிறார். நான் 10-ம் வகுப்பு டி பிரிவு. 8-ம் வகுப்புல இருந்து இங்கே தங்கிப் படிக்கிறேன். எப்படியாவது நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும்னு நினைக்கேன். ஆனா, ராத்திரி அடிக்கடி கரன்ட் போகுது. மெழுகுவத்தி வெளிச்சத்துல படிக்கவே முடியல. கண்ணு எரியுது. காலைல

தூக்கம் தூக்கமா வருது. இப்ப சோலார் லைட் போட்ட பிறகு எங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கு. நல்ல மார்க் வாங்கிடுவேன்னு எனக்கே ரொம்ப நம்பிக்கையா இருக்கு!'' என்று சொல்லும்போதே மகிழ்ந் தான் லெனின்.

''என் பேரு ஜி.வனிதா. சீர்காழி எனக்குச் சொந்த ஊர். தினமும் ராத்திரி கரன்ட் போயிடுறதுனால படிக்க முடியலை. ஒரு நாளைக்கு ரெண்டு மெழுகுவத்தி ஆகுது. இப்ப சோலார் லைட் அந்த கரன்ட் கவலையைத் துடைச்சுப் போட்டுருச்சு!'' என்றார். மொத்தம் 608 மாணவிகள் உள்ள இந்தப் பெண்கள் விடுதியில், 145 பேர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதுகிறார்கள். 126 பேர் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துச் சென்றிருக்கிறார்கள்.

'தானே' துயர் துடைத்தோம்!

கடலூர் பகுதியில் இருக்கும் சரவணா எனர்ஜி சிஸ்டம் என்ற நிறுவனம், துரிதமாக இந்த சோலார் விளக்குகளைத் தருவித்து பொருத்த உதவியது. ''ஹோம் லைட்டிங் சிஸ்டம் என்ற விளக்குகளை ஒவ்வோர் அறைக்கும் பொருத்தி இருக்கிறோம். ஆறு மணி நேரம் சூரிய வெப்பம் பெற்றால், ஆறு மணி நேரம் விளக்கு எரியும் இரண்டு டியூப் லைட்டுகளை அடங் கியது ஒவ்வொரு யூனிட்டும்!'' என்கிறார் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்.

இந்த விளக்குகளைப் பொருத்திவிட்டு இரண்டொரு நாட்கள் கழித்து நாம் சென்ற நேரத்தில் சிதம்பரத்தில் மின்சாரம் இல்லை. நந்த னார் விடுதி பளிச்சென்று இருந்தது. அப்போது நம்மிடம் அந்த மாணவ, மாணவிகள் மலர்ந்த முகத்துடன் சொன்னார்கள்... ''தேங்க்ஸ் விகடன்!''

அந்த நன்றிகள் அனைத்தும் வாசகர்களாகிய உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism