Published:Updated:

அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!

க.நாகப்பன்

அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

''எனக்கு எப்பவும் ஏதாவது துறுதுறுனு பண்ணிக்கிட்டே இருக்கணும். பெயின்டிங், ஸ்கெட்ச், கிரியேட்டிவ்னு பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசு... விளையாட்டுத்தனமா இருந்துட்டோம். இப்போ நாலு பேருக்கு நல்லது செய்யும் நிலைமையில் இருக்கிறப்போ, நம்ம சக்தியை அதுக்குச் செலவழிக்கலாமேனு தோணுச்சு. அதான் இந்தச் சமூக சேவகி அவதார்!'' - அழகாகச் சிரிக்கிறார் அனுஷா துரை தயாநிதி. அழகிரி யின் மருமகள். தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது அழகிரி வீட்டுக்குள் மருமகளா கக் காலெடுத்துவைத்தவர், இப்போதைய அரசியல் களேபரச் சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.  

 ''என்ன திடீர்னு சமூக சேவை ஆர்வம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சும்மாதான்! டவுன் சின்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைப்பு நடத்துறார் என் கசின் அரவிந்த். அந்தக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துவது ரொம்பவே சிரமம். ஒரு குழந்தைக்கு ரெண்டு டீச்சர்கள் இருந்தாதான் சமாளிக்க முடியும். அவங்களுக்குப் போதுமான ஆதரவு இல்லாம சிரமப்படுறாங்க. அதான் அந்தக் குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்ட ஒரு ஃபேஷன் ஷோ நடத்தலாம்னு ஐடியா. ஏப்ரல் 15-ம் தேதி நடத்துறோம். ஆர்யா, சிம்பு, ஜீவா, டாப்சி, சித்தார்த், இந்தியாவின் டாப் மாடல்கள்னு எல்லாரும் கலந்துக்கிறாங்க.

அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!

நானே முதல்கட்டமா 20 குழந்தைகளைத் தத்தெடுத்துக்கப்போறேன். என் 58-வது வயசுல அனுஷா 20 லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி தந்தாள்னு பேரு சம்பாதிக்கணும். அதுக்காக ஆரம்பிச்சதுதான் நெஃபர்டாரி (Nefertari) அமைப்பு!''

''அது என்ன 'நெஃபர்டாரி?''

''அவங்க ஒரு எகிப்து ராணி. எப்பவும் தன்னை ஒரு ராணியா நினைக்காம, மக்களோட நல்லதுக்காக சேவை செஞ்சவங்க. அவங்களோட நல்ல உள்ளத்துக்குப் பரிசா, இறந்தவங்களை உயிர்ப்பிக்கிற சக்தியைக் கடவுள் கொடுத்ததா கதை உண்டு. நானும் சிலரோட வாழ்க்கையை உயிர்ப்பிக்க நினைச்சேன். அதான் இந்தப் பேரு!''

''மாமா அழகிரி என்ன சொன்னார்?''

''அவர் எனக்கு மாமா இல்லை. இன்னொரு அப்பா. என் அப்பா, அம்மா, தங்கச்சினு பலர் 'உன்னால் அப்படி ஒரு அமைப்பை உருவாக்கி நிர்வகிக்க முடியாது’னு நெகட்டிவாப் பேசினாங்க. ஆனா, அப்போ என்னை ஆதரவா  உற்சாகப்படுத்தின முதல் நபர் அழகிரி அப்பாதான். 'ஆரம்பிச்சுடலாம்... பெரிய விஷயம் இல்லை. இடையில நிறையப் பிரச்னைகள் வரும். அதை எல்லாம் தாண்டி வரணும். நம்பிக்கையா ஆரம்பி. வாழ்த்துக்கள்’னு சொன்னார். அவரோட 100 சதவிகித ஆதரவுதான் 'நெஃபர்டாரி’ உருவாக முழு முதல் காரணம்!''

அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!

''அதென்ன அவ்வளவு ரகசியமாக் காதலை வெச்சிருந்து சட்டுனு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?''

''ஹாஹா! அதுதான் எங்க காதலோட கேம் பிளான். என் ஃப்ரெண்ட் மூலம்தான் துரை எனக்கு அறிமுகமானார். பார்த்த முதல் நாளே 'உன்னைக் காதலிக்கிறேன்’னு சொல்லிட்டார். நான் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்ச நாளைக்குப் பிறகு எனக்கும் ரொம்பப் பிடிச்சுப்போய் ஓ.கே. சொல்லிட்டேன். என் வீட்டுக்குத் தெரியாம, மூணு வருஷம் காதலிச்சோம். என் ஹஸ்பெண்ட் மட்டும் இல்லை... பெஸ்ட் ஃப்ரெண்டும் துரைதான்!''

''வீட்ல மாமியார் கொடுமை எல்லாம் உண்டா... இல்லை, அவங்கதான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்களா?''

''அச்சச்சோ... என் அம்மாவுக்கு நான் செல்லம் இல்லை. ஆனா, அத்தை காந்தியம்மாவுக்கு நான்னா அவ்வளவு உயிர். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் என்னைப் பார்த்தாலே, 'உன் மாமியார்போல யாரு மச்சான்’னு பாடுவாங்க. அவங்க எனக்கு இன்னொரு அம்மா!''

அழகிரி வீட்டில் நெஃபர்டாரி!

''கனிமொழியுடன் பேசுவீங்களா?''

''நான் மாலத்தீவு டூர் போயிருந்தப்ப, வாட்டர் பைக் ரைடுல அடிபட்டு கால்ல சின்ன அடி. கனி அத்தைக்கு அந்தத் தகவல் தெரியும். சென்னை வந்த பிறகு, நான் அவங் களைப் பார்க்கப் போனப்போ ஞாபகமா, 'கால் அடி சரியாயிடுச்சா? எப்பவும் விளையாட்டுத்தனமா இருக்கக் கூடாது’னு செல்லமாக் கண்டிச்சாங்க. இன்னும் என்னை சின்னப் பொண்ணாவே ட்ரீட் பண்ணுவாங்க கனி அத்தை!''  

''தமிழ்நாட்டோட அரசியல் சூழ்நிலைபத்தி...''

''ஹலோ.... எனக்கு கிச்சன் பாலிடிக்ஸ்கூடத் தெரியாது. ஆளை விடுங்க!''