தொழிற்சாலைக் கழிவுகளைப் பற்றி நம் அரசு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான மிகப் பெரிய விலை... கொடைக்கானல். இங்கு செயல்பட்டுவந்த ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பாதரச தெர்மா மீட்டர் தொழிற்சாலையின் பாதரசக் கழிவுகளால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு, 1984-ல் கொடைக்கானலில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை மக்கள் போராட்டத்தின் விளைவாக 2001-ல் இழுத்து மூட அரசு உத்தரவிட்டது. ஆனால், தொழிற்சாலை மூடப்பட்டாலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் டன் அளவுக்குச் சேர்ந்திருக்கும் கழிவுகள் கொடைக்கானலைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறது. கோடைக் கானலாகிவிடுமா கொடைக்கானல்?

மலேரியா நோய்க் கிருமிகள்

மருந்துக்கு அழியாமல்போகும் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவருகின்றன என்றும் இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அர்டெமிஸினின் என்ற மூலக்கூறை அடிப்படையாகக்கொண்ட மருந்துகளே மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்க இதுவரை பயன்பட்டுவந்தன. ஆனால், மலேரியா கிருமிகளில் தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், அந்த மருந்துக்கும் அழியாமல்போகிற ஒரு வல்லமையை அந்தக் கிருமிகளுக்குத் தந்துள்ளனவாம். ஏற்கெனவே ஆண்டுக்கு 6,55,000 பேர் உலகெங்கும் மலேரியாவால் உயிர் இழக்கின்றனர் என்ற நிலையில் இந்தச் செய்தி உலகுக்கு ஒரு கெட்ட செய்தி என்று தெரிவித்து இருக்கிறார் விஞ்ஞானி பிரான்சுவா நோஸ்டன். நிஜமாவே இந்த கொசுத் தொல்லை தாங்கலைடா நாராயணா!

ஏழாவது திருமண நாளில் எதிர்பாராமல் கிடைத்த பரிசில் பரவசத்தில் இருக்கிறார் கமீலா சார்லஸ். இங்கிலாந்து ராணி தனது தீவிர விசுவாசிகளுக்கு கௌரவப் பரிசாகத் தரும் 'ராயல் விக்டோரியன் ஆர்டர்’ எனப்படும் உயர் கௌரவ அடையாளத்தை கமீலாவுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறது பக்கிங்ஹாம் அரண்மனை. 'ராணியின் நன்மதிப்பைப் பெறு வேன். டயானா இடத்தைப் பிடிப்பேன்!’ என்று முன்பு சொன்ன கமீலாவின் சபதம் பாதி நிறை வேறிவிட்டது. மாமியார் மெச்சிய மருமகள்!

தன் ஒவ்வொரு படத்துக்கும் இளையராஜாவையே மனதில் வரித்துக்கொண்டுதான் ஸ்க்ரிப்ட் எழுதியதாக ரகசியம் உடைக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். லண்டனில் ஹங்கேரி இசைக் குழுவினரே இளையராஜாவின் இசை ஆளுமையை வியந்ததைக் கண்டு பிரமிக்கும் கௌதமின் அடுத்த வருட டைரி இப்போதே நிரம்பி வழிகிறது. 'நீதானே என் பொன்வசந்தம்’ முடிந்ததும் விஜய்யுடன் 'யோஹன்: அத்தியாயம் ஒன்று’. அடுத்து அவர் தயாரிக்கும் 'தங்க மீன்கள்’ ரிலீஸ். 'தமிழ்ச்செல்வன்’ என்ற கேரக்டரை வைத்து விதவிதமான களங்களோடு அடுத்தடுத்த கிளைக் கதைகளாக வரிசையாகப் படம் தயாரிக்க இருக்கிறார். அதில் முதல் படத்தின் தலைப்பு 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’. இந்த ரிலே ரேஸ் படங்களில் ஜெய், அபிநயா, வி.டி.வி. கணேஷ், சந்தானம் நடிக்கிறார்கள். பிரபுதேவாவின் உதவி இயக்குநர் பிரேம் சாய் இயக்குகிறார். அதிரடி வெள்ளித் திரையில் மட்டுமல்ல... சின்னத் திரையிலும்தான்! 'காக்க காக்க’வின் தொடர்ச்சியாக சன் டி.வி-யில் ஒரு ஆக்ஷன் சீரியலைத் தானே தயாரித்து இயக்கவும் இருக்கிறார். கதை நாயகன் பார்த்திபன், இசை ஏ.ஆர்.ரஹ்மான். கௌதம் ராக்ஸ்!

அதிரடி அறிக்கைகளால் அரசின் கண்களில் விரல்விட்டு ஆட்டும் ராணுவத் தளபதி வி.கே.சிங், ஓர் இந்திப் படத்தில் நடித்தவர் என்பது தெரியுமா? 1991-ல் நானா படேகர் இயக்கி, ஜவானாக நடித்த ஆக்ஷன் படத்தில் இளம் கர்னலாக ஒரு காட்சியில் வந்துபோகிறார் வி.கே.சிங். இப்போது நானா படேகர் அதே படத்தை ரீ-மேக்கும் முயற்சிக்காக வி.கே.சிங்கை அணுக, தளபதி 'நோ’ சொல்லிவிட்டார். டைட்டில்ல 'தளபதி’ பட்டம் இவருக்குத்தான் பொருத்தம்!

கேரள சி.பி.எம். தலைவரும் முன்னாள் முதல் வருமான அச்சுதானந்தனின் கூடங்குள வருகை திடீர் ரத்துக்கு கட்சி மேலிடக் கட்டளைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. 'தமிழ்நாட்டில் சி.பி.எம். கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கிறது. இவர் கேரளத்தில் இருந்து வந்து எதிர்த்தால் எங்கள் இமேஜ் டேமேஜ் ஆகாதா?’ என்று தமிழகத் தோழர்கள் டெல்லியில் கேட்ட தன் விளைவுதான், அவருடைய கூடங்குள வருகை ரத்து என்று பேசப்படுகிறது. இதுதான் அரசியல்!

கான்பூர் மாணவன் முஹம்மது ஓமரின் சாதனை கின்னஸில் இடம் பிடிக்க இருக்கிறது. எல்.கே.ஜி. மாணவனாக பள்ளிக்கூடத்துக்கு முதன்முதலில் நுழைந்த நாளில் இருந்து 12-ம் வகுப்பு வரை சுமார் 14 வருடங்களாக ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காததுதான் ஓமரின் சாதனை. ஓமரின் இந்தச் சாதனையை கின்னஸுக்குப் பரிந்துரைத்தது அவனது ஆசிரியர்களே. மாண்புமிகு மாணவன்!

யேல் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்கச் சென்ற ஷாரூக் கானை நியூயார்க் விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தி அனுப்பி இருக்கிறது அமெரிக்கா. பாதுகாப்பு என்ற பெயரில் ஷாரூக் கானிடம் இதுபோன்று அமெரிக்கா விசாரணை நடத்துவது இது மூன்றாவது முறை. தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக ஷாரூக் அறிவித்ததைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, 'அந்த சம்பிரதாய மன்னிப்பு போதாது. தொடர்ந்து ஒருவர் மீண்டும் மீண்டும் ஒரே பிரச்னைக்காக அவமதிப்பைச் சந்திப்பது நியாயமாகாது!’ என்று எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். என்னமோ போடா மாதவா!

பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்தே ஹசினா ரப்பானிக்கு, அதிபர் சர்தாரியோடு முட்டல் மோதல்தான். அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையின்போது இவர்களின் மோதல் வெளிப்படையாகவே வெடிக்க, தடதடவென அதிகாரங்கள் குறைக்கப்பட்டு டம்மி ஆக்கப்பட்டு இருக்கிறார் ஹசினா. 'அடுத்த பெனாசிர் பூட்டோ’ என்று ஆரம்ப நாட்களில் எழுந்த அமோக வரவேற்பு நாட்கள், அதற்குள் மலரும் நினைவுகள் ஆகும் என்று ஹசினாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். பாகிஸ்தான்ல... பயபுள்ளைக எதுவும் பண்ணுவாய்ங்க!

த்ரிஷா தன் வீட்டை பார்த்துப் பார்த்து அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார். தனது அறைக்குச் செல்லும் 13 படிக்கட்டுகளைச் செம காஸ்ட்லி மார்பிள் கற்களால் அலங்கரித்து இருக்கிறார். ஒவ்வொரு கல்லும் ஒரு லட்சமாம். மூடுக்கு ஏற்றார்போலப் படுக்கையறையின் நிறம் மாறும் வண்ணம் சுவர் முழுக்க எல்.இ.டி. விளக்குகளைப் பதித்து இருக்கிறார். என்ன விசேஷம் மேடம்?

இந்த முறை மம்தா பானர்ஜி செய்திருக்கும் அதிரடி ரொம்பவே அதிகம். அம்பிகேஷ் மகாபாத்ரா என்ற பேராசிரியர் மம்தாவைக் கிண்டல் செய்து சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளங்களில் சில கார்ட்டூன்கள் வரைய... அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது மம்தா போலீஸ். அதுவும் அவர் மீது போடப்பட்டு இருக்கும் வழக்குகள்... ஈவ் டீஸிங், மான நஷ்டம், ஒரு பெண்ணை அவமானப்படுத்துதல்! 'ஒரு கார்ட்டூன் வரையக்கூட இங்கு சுதந்திரம் இல்லையா?’ என்று பேராசிரியர்களும் எழுத் தாளர்களும் பொங்கி எழ... வங்கத்தில் இப்போது புயல் சின்னம். அதே புயல் தமிழகத்தில் வீசாம இருக்கணும்!

ஒன்பது கோடி ரூபாய்.... 'ஜங்கீர்’ படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்படவிருக்கும் சம்பளமாம். பல வருட அனுபவங்களுக்குப் பிறகு, தனது ஜூனியர்கள் கேத்ரீனா, கரீனாவை சம்பள விஷயத்தில் முதல்முறையாகப் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. கமான் கேத்ரீனா... கமான் கரீனா!

ஐ.பி.எல்-ல் சென்னை அணிக்காகப் பின்னி எடுக்கும் தென் ஆப்பிரிக்க வீரர் அல்பி மோர்கல் சின்ன வயதில் இருந்தே தன் வீட்டில் இருந்த நாட்களைவிட, நண்பர் களின் வீடுகளில் கழித்த நாட்களேஅதிகம். அல்பி மோர்கலின் தம்பி மார்னி மோர்கல், அப்பா ஆல்பர்ட் மோர்கல் என எல்லோருமே கிரிக்கெட் வீரர்கள் என்றாலும், தன்னுடைய சகாவான டி வில்லியர்ஸ் வீட்டில்தான் பல வருடங்கள் தங்கி பயிற்சி செய்திருக்கிறார் அல்பி மோர்கல். நட்புக்கு மரியாதை!