பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• செம உற்சாகத்தில் இருக்கிறார் பாடகர் வேல்முருகன். சமீபத்திய துபாய் பயணத்தில், தற்செயலாக விக்ரமைச் சந்தித்து இருக்கிறார். ''என் பையன் உங்க பாட்டுக்குப் பயங்கரமான ஃபேன். நான் உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்குறேன். அவன்கிட்ட காட்டணும்!'' என்று சொல்லி மொபைலில் க்ளிக்கினாராம் சீயான். ''சந்தோஷத்துல அழுதுட்டேண்ணே!'' என்கிறார் வேல்முருகன் வெள்ளந்தியாக. போட்டுத் தாக்கு!  

• ஸ்டெம்செல்களில் வேண்டிய மாற்றங் கள் செய்து, அதை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் செலுத்தி னால், அந்த நோயைக் குணப்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து இருக்கிறார்கள் கலிஃபோர்னியப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள். எலிகளை வைத்து நடத்தப்பட்ட முதல்கட்டப் பரிசோதனைகளில் கிடைத்து இருக்கும் வெற்றி, எய்ட்ஸுக்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஒரு மைல் கல் எனக் குதூகலிக்கிறார்கள் அவர்கள். புள்ளி ராஜாவுக்கு மருந்து வருமா?

• ஜூலியன் அசாஞ்சே அடுத்த அதிரடிக்கு ரெடி. 'தி வேர்ல்ட் டுமாரோ’ என்கிற பரபர தொடருக்காக லண்டனில் வீட்டுக் காவலில் இருந்தபடி சர்வதேச டாப் தீவிரவாதிகளைப் பேட்டி எடுத்துவருகிறார் அசாஞ்சே. அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பாலஸ்தீன ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் பேட்டிதான் ஆரம்ப அதிரடி. நீ நடத்து ராசா!

இன்பாக்ஸ்

•  21 வயது எல்லிஸ் பெர்ரிதான் இப்போது ஆஸ்திரேலிய சென்சேஷன்! மிக இளம் வயதில் (16) ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் மற்றும் கால்பந்து தேசிய அணிகளில் விளையாடிய சாதனைக்குச் சொந்தக்காரரான எல்லிஸ், இரண்டு உலகக் கோப்பை களிலும் கலந்துகொண்டு அசத்தியவர். தனது அதிரடி கோலால், 2011 கால்பந்து உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியாவைத் தகுதி பெறவைத்தவர். கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன். கிரிக் கெட், கால்பந்து போட்டிகள் ஒரே நேரத்தில் நடந்தால், கிரிக்கெட்டை டிக் அடிக்கிறார் எல்லிஸ். சிக்ஸர் கோல் போடு!

இன்பாக்ஸ்

• 'மயக்கம் என்ன’ படத்துக்குப் பிறகு, ரிச்சாவுக்கு கோடம்பாக்கத்தில் வாய்ப்புகளே இல்லை. அதனால், காந்தக் கண்ணழகி பேக் டு பெவிலியனாக பெங்காலி படத்தில் நடிக்கக் கமிட் ஆகிவிட்டார். தெலுங்கு - தமிழில் ஹிட் அடித்த, 'சிறுத்தை’ படத்தின் பெங்காலி வெர்ஷனான 'பிக்ரம் சின்ஹா’வில் ரிச்சாதான் ஹீரோயின். ரிச்சா பொண்ணுக்கு வாய்ப்பு கொடுப்பதில் தமிழ் டைரக்டர் ஸுக்குத் தயக்கம் என்ன?

• சூப்பர் பிரெய்ன் பில் கேட்ஸ்... இனி சூப்பர் ஹீரோ! 'பில் கேட்ஸ்’ என்ற பெயரில் தனது வாழ்க்கைப் பயணத்தை காமிக்ஸ் ஆக வெளியிட அனுமதி அளித்திருக்கிறார் பில் கேட்ஸ். சூப்பர் ஹீரோ சாகசங்களுடன் மசாலா கமர்ஷியலாக வெளியான காமிக்ஸ் செம ஹிட். அடுத்தடுத்து ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபேஸ்புக்கின் மார்க் ஸுக்கர்பர்க் ஆகியோரும் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்க இருக்கிறார்கள். எங்க 'கணித மேதை’ ராமானுஜரும் சூப்பர் ஹீரோதான்!

• ஜான் ஆப்ரஹாம் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 'விக்கி டோனர்’ இந்திப் படத் துக்கு அப்ளாஸ் வரவேற்பு. இந்தியாவில் அதிகரித்து இருக்கும் குழந்தையின்மைப் பிரச்னையையும் விந்து தானத்தையும் மையமாகவைத்து, ரொமான்டிக் காமெடி  படமாகத் தந்து இருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்க்கார். இந்தப் 'புரட்சி’ப் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு என்னைக்கும் உண்டு!

•  டிஜிட்டல் 'கர்ணன்’ வெள்ளித்திரைகளில் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கும் டிஜிட்டல் முலாம் பூசும் பணிகள் தொடங்க இருக்கின்றன. தமிழின் முதல் 'ப்ளூமேட்’ படமான 'விக்ரம்’ படத்தை டிஜிட்டல் ஆக்கும் யோசனையில் இருக்கிறார் உலக நாயகன். கம் விக்ரம் கம்!

இன்பாக்ஸ்

• தெலுங்கு, தமிழில் கலக்கிய 'அருந்ததி’ இந்தியிலும் மிரட்டப்போகிறாள். இந்தி அருந்ததி... கரீனா கபூர்! கண்ணுக்கு மை பூச ஆரம்பிச்சிட்டீங்களா?

இன்பாக்ஸ்

• 'எல்லாமே தலைகீழாப்போச்சு!’ எனச் சொல்லவைக்கிறது பாஸ்டன் நகரின் அந்த ஃபேஷன் ஷோ. 'ரெவேர்’ என்ற 24 மாடி ஹோட்டலை ஃபேஷன் ஷோ வோடு தொடக்கிவைத்தார்கள். அழகிகள் மாடியின் பக்க வாட்டுச் சுவரில் கயிறு கட்டிக்கொண்டு செங்குத்தாக ரேம்ப் வாக் போட்டதுதான் ஃபேஷன் ஷோவின் விசேஷம். இது ரோப் வாக்!

இன்பாக்ஸ்

• தன் மனம் கவர்ந்த கடவுள் அருணாச்சலேஸ்வரர் இருக்கும் திருவண்ணாமலைக்கு 'எஸ்.பி.’ புரொமோஷ னுடன் இடமாற்றம் கிடைத்து இருப்பதால் சந்தோஷத்தில் மிதக்கிறார் ரம்யா பாரதி ஐ.பி.எஸ். கூடுதல் உற்சாகமாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்வரூப்போடு நிச்சயதார்த்தமும் முடிந்திருக்கிறது. கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றி இருக்கிறார் ரம்யா. வாழ்த்துக்கள் ஆபீஸர்!

இன்பாக்ஸ்

'டைம்’ பத்திரிகையின் டாப் 100 'தாக்கம் ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் மம்தா பானர்ஜி, பராக் ஒபாமா, ஹிலாரி கிளின்டன் ஆகியோரோடு இடம் பிடித்திருக் கிறார் தமிழரான வழக்கறிஞர் அஞ்சலி கோபாலன். சென்னையைச் சேர்ந்த இவர் 1995 முதலே இந்தியாவில் ஓரினச் சேர்க் கையாளர்களுக்காகவும் எய்ட்ஸ் நோயாளி களுக்காகவும் 'நாஸ்’ என்கிற அமைப்பை ஆரம்பித்து, போராடிவருபவர். வாழ்த்துக்கள் மேடம்!

• 5,000 கி.மீ. வரையிலான இலக்குகளைத் தாக்கவல்ல இந்தியாவின் 'அக்னி 5’ ஏவுகணைச் சோதனை அபார வெற்றி. இந்த ஏவுகணை சீனாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டது என்பதால், அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ''உண்மையில் 'அக்னி -5’ ஏவுகணை 8,000 கி.மீ. தூரம் பாய வல்லது. ஐரோப்பாவுக்கும் இதனால் ஆபத்து!’ என்று அலறுகிறது சீனா. இதைக் கண்டுகொள்ளாத இந்திய விஞ்ஞானிகள் அடுத்தகட்டமாக ஏ-6 எனப்படும் 10,000 கி.மீ. தூரம் பறந்து சென்று ஒரே நேரத்தில் பல பகுதிகளைத் தாக்கக்கூடிய சூப்பர் ஏவுகணையை உருவாக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்கள். வெல்டன் இந்தியா!

இன்பாக்ஸ்

• ஒருவழியாக மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறது பிராட் பிட் - ஏஞ்சலினா ஜோலி ஜோடி. ஆறு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் இந்தக் காதலர்கள் சீக்கிரமே          'டும்டும்’முவார்களாம். ''சீக்கிரமே இன்னொரு குழந்தை பெத்துக்குவோம். அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்குவோம்னு நினைக்கிறேன்!'' என்று சொல்லி நிச்சயதார்த்த நிகழ்வில் கலகலப்பு சேர்த்திருக்கிறார் பிட். இது செம பிட்டா இருக்கே!  

இன்பாக்ஸ்

அமெரிக்க நடிகை ஸ்கார்லட் ஜோஹன்ஸன் சென்னைக்கு வர இருக்கிறார். அவர் நடித்திருக்கும் 'த அவெஞ்சர்’ படத்தின் புரமோஷனுக்காகத்தான் இந்த திடீர் வருகை. அதற்கும் சென்னைக்கும் என்ன சம்பந்தம்? ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் செக்ஸி உடை அணிந்து மீடியா கவனம் ஈர்க்க முடிவு செய்திருக்கிறார் ஸ்கார்லட். அதனால் சென்னைக்கு வந்து 'சேலை’ வாங்கிச் செல்வது அவரது திட்டம். சேலை 'கட்டுன’ நமீதா போட்டோவைப் பார்த்திருப்பாரோ?

• குழந்தைப் பிறப்புக்குப் பிறகு விளம்பர, சினிமா வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற நிதர்சனத்தைப் பொய்யாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். நகைக் கடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத் தூதராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் ஐஸ்வர்யாவின் சம்பளம்...

இன்பாக்ஸ்

20 கோடி.அம்மம்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு