Published:Updated:

சச்சின் பேட்டிங்... ரெய்னா டேட்டிங்!

சார்லஸ்படம் : என்.விவேக்

சச்சின் பேட்டிங்... ரெய்னா டேட்டிங்!

சார்லஸ்படம் : என்.விவேக்

Published:Updated:
##~##

.பி.எல். சீஸன் 5-ன் சில திரை மறைவுத் தகவல்கள் இங்கே...

• சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில், காவல் துறைக்கு அதிக வேலை வைப்பது டோனிதான். ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட பைக்கில் ரெட் ஹில்ஸ் வரை ஓட்டிச் சென்றது, நடு வழியில் பைக் பஞ்சர் ஆகி கூட்டம் கூட போலீஸ் ஜீப்பில் ஏறி எஸ்கேப் ஆனது, நடுராத்திரியில் சுரேஷ் ரெய்னாவுடன் மெரினா சாலைகளில் பைக் சக்கரங்களைத் தீய்ப்பது, மைதானத்துக்கு மற்றவர்களுடன் பேருந்தில் செல்லாமல் பைக்கில் வருவது என டோனிக்குப் பின் எப்போதும் வால் பிடித்துத் திரிவதே காவல் துறையின் தலையாயப் பணியாக இருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  கடந்த ஆண்டு இந்தியா சிமென்ட்ஸின் பரிசாக டோனிக்கு 50 லட்ச ரூபாய் 'டுகாட்டி 1198’ பைக்கை வாங்கிக்கொடுத்தார் சீனிவாசன். டோனி அந்த பைக்கை ராஞ்சிக்கு எடுத்துச் செல்லவில்லை. அது சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டல் நீச்சல் குளத்துக்கு அருகே தான்நிறுத்தப்பட்டது. எப்போது சென்னை வந்தாலும் அந்த பைக்கில் உற்சாக உலா செல்வார் டோனி. பைக் பார்ட்னர், சுரேஷ் ரெய்னாதான். சென்னையில் மனைவி சாக்ஷியை பைக்கில் உட்காரவைத்து டோனி ஓட்டியதே இல்லை. காரணம், சாக்ஷிக்கு சென்னை டிராஃபிக் மீது அவ்வளவு பயம்.

சச்சின் பேட்டிங்... ரெய்னா டேட்டிங்!

•  'வணக்கம், கொஞ்சம் போதும், இங்க வா, ஹெல்மெட் எடுக்கணும், மச்சான், விசில் போடு, எப்படி இருக்கீங்க?’ - ஐந்து வருட 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அனுபவத்தில் டோனி கற்றுக்கொண்ட தமிழ் இது!  

•  சென்னை அணியின் பார்ட்டி பாய், ஒன் அண்ட் ஒன்லி சுரேஷ் ரெய்னா. பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் டப்ளின் பாரில்தினமும் அட்டென்டண்ஸ் போடும் சுரேஷ் ரெய்னாதான், பாரின் அன்றைய ஷோ ஸ்டாப்பர். ஆட்டம், பாட்டம், கேர்ள் ஃப்ரெண்ட்ஸோடு ஜாலி என ரெய்னாவின் ப்ளேபாய் முகத்தை இங்கே பார்க்கலாம். விடிய விடிய சளைக்காமல் பார்ட்டி கொண்டாடுபவர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ட்வெயின் ப்ராவோ!

சச்சின் பேட்டிங்... ரெய்னா டேட்டிங்!

•  கிரிக்கெட்டில் எவ்வளவு உச்சம் தொட்டாலும், தன் கிட் பேக்கை மாற்றாமலேயே வைத்திருக்கிறார் சச்சின்.

சச்சின் பேட்டிங்... ரெய்னா டேட்டிங்!

மரத்தால் செய்யப்பட்ட இந்தப் பெட்டியில்தான் சச்சினின் பேட், ஷூ, லெக் கார்டு, க்ளவுஸ் என அத்தனை சமாச்சாரங்களும் அடைக்கலம். மிக இளம் வயதில் அந்த கிரிக்கெட் கிட்டில் ஒட்டிவைத்த சாய்பாபா, விநாயகர் படங்களை இன்னமும் அப்படியே வைத்திருக்கிறார் சச்சின். பெட்டியின் பூட்டு அருகே மகள் சாரா தன் கைப்பட வரைந்த இந்திய தேசியக் கொடியும் அதன் அருகே 'ஆல் தி பெஸ்ட் ஃப்ரம் மம்மா, சாரா, அர்ஜுன்!’ என்கிற எழுத்துகளும் பளிச்சிடும்!  

•  சுலபமாக ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களையும் இறுதி ஓவர்கள் வரை இழுப்பது விளம்பர வருவாயை மனதில் வைத்துதான் என்கிற குற்றச்சாட்டும் புகையத் தொடங்கி உள்ளது. இதற்கு இடையே இந்த சீஸன் ஐ.பி.எல். போட்டிகளைப் பற்றி சர்ச்சைகள், கிசு கிசுக்கள் ஏதும் இல்லாததால்தான் போட்டிகளுக்கு ஹைப் குறைவாக இருப்பதாகக் 'கண்டுபிடித்து இருக்கிறது’ ஐ.பி.எல். நிர்வாகக் குழு. இதனால் எதிர்பார்ப்பை எகிறவைக்க விரைவில் சர்ச்சைகள், புரளிகள் விஸ்வரூபம் எடுக்கலாம். எதற்கும் தயாராக இருங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism