Published:Updated:

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

இன்று... ஒன்று... நன்று...!

Published:Updated:

வணக்கம், நான் காசி ஆனந்தன் பேசுகிறேன்...

உலகில் ஐந்து வகையான ஒடுக்குமுறைகள். நிறவெறி, ஆணாதிக்கம், சாதி, வர்க்கம், இனம். இதில் முதல் நான்கில் ஒடுக்கப்படுகிறவன் ஒருநாளும் அழிந்துவிட மாட்டான். ஆனால், இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுகிறது, பூமியில் இல்லாமலே செய்யப்படுகிறது. இப்படி உலகில் எத்தனையோ தேசிய இனங்கள் இல்லாமல் போய்விட்டன. தமிழர்களுக்கும் அப்படி ஒரு நிலை வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

ஓர் இனத்துக்கும், தேசிய இனத்துக்கும் என்ன வித்தியாசம்? ஒரு மொழியைப் பேசினால் அவன் இனம். அந்த மொழியைப் பேசுகிறவர்கள் தமக்கென்று ஒரு தாய்நாடும், தொடர் வரலாறும் கொண்டிருந்தால் அது தேசிய இனம். தேசிய இனத் தகுதி படைத்த தமிழர்கள் தனிநாடு கேட்டு இலங்கைத் தீவில் போராடுவதை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுப்பது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று... ஒன்று... நன்று...!

சீனனுக்கு சீன மொழி. ஜப்பானியனுக்கு ஜப்பான் மொழி. ரஷ்யனுக்கு ரஷ்ய மொழி. ஆனால் தமிழனுக்கு? கோயிலில் சம்ஸ்கிருதம், பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம், மத்திய அரசுடன் தொடர்புக்கு இந்தி, இசை விழா அரங்கில் தெலுங்கு, நாட்டு வணக்கப் பாடலுக்கு வங்காளம்... இதுதான் தமிழன் நிலை, தமிழின் நிலை.  கஜகஸ்தானின் புகழ்பெற்ற புலவன் ரசூல் ஹம்சத்தோவ், 'நாளை என் தாய்மொழியான ’அவார்’ மொழி இறக்குமானால், நான் இன்றே இறந்துவிடுவேன்’ என்றான். அதுதான் தாய்மொழிப் பாசம். நாமோ, வேறு மாநிலத்துக்கு, நாட்டுக்குப் போக வேண்டுமானால் ஆங்கிலம் கற்றால்தான் முடியும் என்று நினைக்கிறோம். ஆனால், ராஜஸ்தானில் இருந்து இங்கு வந்து தொழில் செய்பவர்கள் தமிழ் கற்றுக்கொண்டா வந்தார்கள்?

10.05.12 முதல் 16.05.12 வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். மனம் திறந்துப் பேசுவோம்.... மனதில் இருந்து பேசுவோம்...

அன்புடன்,
காசி ஆனந்தன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism